பலஸ்தீன விடுதலை: தீராத துன்பமும் தளராத போராட்டமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நம் மனங்களில் ஆழப் பதிந்துள்ள சில எண்ணங்களிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். பிற சமூகங்கள் பற்றி ஒவ்வொரு சமூகத்தினரிடையும் பரவியுள்ள புனைவுகள் சமூகங்களின் நல்லுறவுக்குக் கேடானவை. எனினும், அதிகம் ஆராய்வின்றி நாம் அவற்றை நம்புகிறோம். சில அயற் சக்திகளை சில உள்நாட்டுச் சமூகங்களின் இயல்பான நண்பர்கள் என்று கற்பனை செய்கிறோம். நடைமுறை அனுபவம் அந் நம்பிக்கைக்கு மாறாக இருந்தாலும், நமது நம்பிக்கைகட்கு முரணானவற்றை ஏற்க மறுக்கின்றோம். இது ஆபத்தானது.

(“பலஸ்தீன விடுதலை: தீராத துன்பமும் தளராத போராட்டமும்” தொடர்ந்து வாசிக்க…)

என்ன மாதிரி “கவர் ஸ்டோரி” எழுதி தமிழர்களை கவுக்கிறார்கள் பாருங்கள்- அடிகளாரின் அட்டகாசம் !

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளில் , உலகத் தமிழர் பேரவை(GTF) என்னும் அமைப்பே அதிகமாக இலங்கை அரசுடன் மறைவான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. குறித்த இந்த அமைப்பின் தலைவராக இருப்பது இமானுவேல் அடிகளார் தான். இவரை இலங்கை அரசு தற்போது உத்தியோகபூர்வமாக அழைத்துள்ளது என்றும். அவர் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் என்ற செய்திகளும் , அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சில ஊது குழல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதாவது மைத்திரிபாலவும், வெளிநாட்டு அமைச்சர் மங்களவும் ஒரு முறை இலங்கை வந்து செல்லுங்கள் என்று அடிகாளாரை அழைத்துள்ளார்களாம்.

(“என்ன மாதிரி “கவர் ஸ்டோரி” எழுதி தமிழர்களை கவுக்கிறார்கள் பாருங்கள்- அடிகளாரின் அட்டகாசம் !” தொடர்ந்து வாசிக்க…)

‘த.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவு’

இலங்கையின் பழமைவாய்ந்த அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து, அரசியல் எதிர்காலப் பயணத்தினைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தமை தன்னுடைய தனிப்பட்ட முடிவே தவிர யாருடைய திணிப்பின் நிமிர்த்தமும் அறிவித்ததல்ல என கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

(“‘த.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவு’” தொடர்ந்து வாசிக்க…)

குலுங்கியது ஆப்கானிஸ்தான்; உணர்ந்தன இந்தியா, பாகிஸ்தான்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைத் தாக்கிய 7.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 150ஐத் தாண்டியுள்ளது. ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில், 213.5 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்ததாக, ஐக்கிய அமெரிக்காவின் சூழலியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இறந்தோர் எண்ணிக்கை 26 என அறிவிக்கப்பட்டது. இதில், தகார் மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில், 12 பெண் குழந்தைகள் இறந்துள்ளனர். அத்தோடு, அப்பகுதியில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும், இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனவும் அறிவிக்கப்படுகின்றது.

(“குலுங்கியது ஆப்கானிஸ்தான்; உணர்ந்தன இந்தியா, பாகிஸ்தான்” தொடர்ந்து வாசிக்க…)

வெள்ளை அங்கிக்குள் பதுங்கியுள்ள பயங்கரவாதப் பாதிரி இம்மானுவல் அவர்களுக்கு, ஜனாதிபதி, இலங்கை வருமாறு அழைப்பு!

இலங்கை ஜனாதிபதி, மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உலகத் தமிழர் மேரமைப்பின் தலைவர் இம்மானுவல் அவர்களை இலங்கைக்கு வருமாறு அவசர அழைப்பினை விடுத்துள்ளனர். இவர்களது அழைப்பு தொடர்பில் இலங்கையில் இருக்கக்கூடிய இடதுசாரிகள் கட்சிகளின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு உலகத் தைழர் பேரமைப்பின் தலைவர் இம்மானுவல் மின்னஞ்சல் மூலமாக இவ் அழைப்பினை தெரியப்படுத்தியுள்ளார். அதில் மேற்குறிப்பிடப்பட்ட அழைப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் தென்னிலங்கையில் உள்ள மிதவாதிகளுடன் இணைந்து கடமையாற்ற நான் ஆர்வமாக உள்ளேன் என்றும் குறைந்தது அரசியல்வாதிகளின் பொய்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு இலங்கை நோக்கி வருவதனை அதிகமாக பரிசீலனை செய்துகொண்டு இருக்கிறேன் என்றும் டாக்டர் விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இம்மானுவல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

(“வெள்ளை அங்கிக்குள் பதுங்கியுள்ள பயங்கரவாதப் பாதிரி இம்மானுவல் அவர்களுக்கு, ஜனாதிபதி, இலங்கை வருமாறு அழைப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

பலம் அறிவதற்கான தேர்தல் களம்

(மப்றூக்)

ஆட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளூர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இம்முறை நிலைமை தலைகீழ். உள்ளூராட்சி மன்றங்களில் அநேகமானவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்;கும் நிலையில், மத்திய அரசாங்கத்தினை ஐ.தே.க கைப்பற்றியுள்ளது. இப்போது, உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் யுத்தத்துக்காக, கட்சிகள் அனைத்தும் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆளுந்தரப்பாக ஐ.தே.க உள்ளதால், பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதற்குரிய எத்தனங்களை அந்தக் கட்சி எடுக்கும்.

(“பலம் அறிவதற்கான தேர்தல் களம்” தொடர்ந்து வாசிக்க…)

எழுமின் ! வருமின் ! மரம் நடுமின் !

(மாதவன் சஞ்சயன்)

கார்த்திகை மாதம் எம் மண் மழை நீரால் மட்டுமல்ல தமிழ் மக்களின் கண்ணீராலும் நனையும் மாதம். எனவே கார்த்திகை மாதம் 1ம் திகதி தொடங்கி 30ம் திகதி வரையான மழைக் காலத்தில் வடக்கின் சகல மாவட்டங்களிலும் ஐந்துலட்சம் மரங்கள் நடுவதற்கு தான் திட்டமிட்டிருப்பதாக, வட மாகாண சுற்றாடல் அமைச்சர் அறிவித்துள்ளார். வடக்கில் மர நடுகையைப் பெருமளவில் மேற்கொள்ள பொருத்தமான மாதம் மட்டுமல்ல, தமிழர் தம் வாழ்வில் புனித மாதமாக கருதி கார்த்திகை தீபம் ஏற்றுவதோடு எம் மாவீரரையும் நினைவு கூரும் புனித மாதம் கார்த்திகை மாதம் எனவும் கூறினார்.

(“எழுமின் ! வருமின் ! மரம் நடுமின் !” தொடர்ந்து வாசிக்க…)

மனந்திறந்தார் டொனி பிளையர்

ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான ஈராக் போரின் போது இடம்பெற்ற தவறுகளுக்கு, தான் வருந்துவதாகத் தெரிவித்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளையர், ஆனால், சதாம் ஹூஸைனை வீழ்த்தியமை குறித்து வருத்தமேதும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார். ஈராக்கில், சதாம் ஹூஸைன் தலைமையிலான அரசாங்கத்திடம் மாபெரும் அழிவை உண்டாக்கக்கூடிய ஆயுதங்கள் காணப்படுவதாகவும் இரசாயன ஆயுதங்கள் காணப்படுவதாகவும் கூறியே, ஈராக் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு அப்படியான எவையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

(“மனந்திறந்தார் டொனி பிளையர்” தொடர்ந்து வாசிக்க…)

கருணா இராஜினாமா

முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான், சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அவர், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது

ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப்பார்த்தது. வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது. உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது “பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது.” கோழி விட்டேற்றியாகச் சொன்னது” உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.” உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு “நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்.” என்றது. மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை “எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?” என்று நக்கலும் அடித்தது. அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள். எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்புஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி ” பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு “சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது” என்று யோசனை சொன்னாள். கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது. சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது. பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது.

நீதி ::– அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் “என்ன” என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.

(Kanniappan Elangovan)