ஜனநாயக போராட்டங்கள் மூலம் விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டும்

விடுதலையியை நோக்கி பயணிப்பதற்கு பெளதீக வளங்களை இலட்சியமாக கொண்டு இருக்காது, ஜனநாயக போராட்டங்களின் மூலம் விடுதலையினை நோக்கி பயணிக்க வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். சேகுவேராவின் நினைவு தின நிகழ்வு யாழ். ரிம்பர் மண்டபத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணம் போரினாலும் முதலாளித்துவ மற்றும் இனவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் முழுமையாக கிடைக்கவில்லை. சேகுவேரா இன ஒடுக்குமுறைக்காக போராடியவர்.

(“ஜனநாயக போராட்டங்கள் மூலம் விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

நேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே !

(எஸ்.எம்.எம்.பஷீர்)

“மெல்ல மெல்ல செல்லுகின்ற
தந்தை செல்வா நாயகம்
சொல்லுகின்ற பாதையிலே
செல்லுகின்ற வீரர் நாம்”
( எஸ்.ஜே. வீ. பற்றிய ஒரு பாடல்)
இலங்கையின் மூன்று மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றாலும் வட மாகாணத் தேர்தல் , அதுவும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஒப்பிட்ட அரசியல் முள்ளிவாய்க்கால் கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டவுடன் அங்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை இழந்தவுடன் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கிழக்கிலே மாகாண சபைத் தேர்தலிலே தோல்வியுற்றவுடன் ஆயர் சொன்னது போல் அங்கு நடந்தது அரசியல் முள்ளிவாய்க்கால் அல்ல , அது அரசியல் மாவிலாறு மட்டுமே , இப்பொழுதுதான் அரசியல் முள்ளிவாய்கால் முதற்போராட்டமே ஆரம்பித்து,அதுவும் இன்றுடன் போராட்டம் முடிவுக்கு வருகிறது, ஆயுத மாவிலாற்றுப் போராட்டத்தில் கிழக்குப் புலிகள் வன்னிப் புலிகளுக்கு எதிராக நின்று போரிட்டனர், பின்னர் மாவிலாற்று அரசியல் போராட்டத்திலும் அவர்கள் தங்களின் போராட்டத்தை புலிகளின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கெதிராக போரிட்டனர், அதிலும் அவர்கள் வென்றனர்.

(“நேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே !” தொடர்ந்து வாசிக்க…)

என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு !

(மாதவன் சஞ்சயன்)

Oct102015_1

பயணங்கள் எமக்கு நல்ல/கெட்ட அனுபவங்களை மட்டுமல்ல பல உண்மைகளையும் பகர்கின்றன. அவற்றை உங்களுடன் பகிர்கிவதே இந்த தொடர் கட்டுரையின் நோக்கம். திட்டமிடப்படாத என் பயண ஆரம்பமே நல்ல சகுனமாக அமைந்தது. திறந்து விடப்பட்ட ஓமந்தை சாவடியூடாக முதல் முதலில் பயணித்த வாகனங்களில் நான் பயணித்த பேரூந்தும் அடங்கும். இது பற்றி எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளேன். அதுவரை சுற்றி வளைத்து சோதனை சாவடியில் இறங்கி ஏறும் எம்மை, தேர்தல் காலத்தில் மட்டும் சோதனை இடாது போக அனுமதிப்பர். உடன் அறிக்கை வரும் சொர்க்க வாசல் திறந்து என்று. தேர்தல் முடிந்ததும் வைகுண்ட வாசலில் மீண்டும் சோதனை நடவடிக்கை தொடரும். அறிக்கை விட்டவர் எம்மவரிடம் படமாளிகையில் வைத்து வேறு விடயம் பற்றி காதில் பூ சுற்றுவார் ( றீல் விடுவார் ).

(தொடர்ந்து வாசிக்க…)

நேற்று ஒரு நண்பரின் பதிவில் Subculture என்ற சொற்பதத்தை பார்த்தேன்….

(Ratnasingham Annesley)

Subculture என்பது தமிழ் மக்களிடையே பரவக்கூடாது என்று ஆணித்தனமாக அடித்து சொல்வதை கவனித்தேன்… அப்பிடி அந்த சொல்லை பாவித்தவர் தன்னை ஒரு பெரிய சோஷலிச கருத்தாளன் என்று புளுகி கொள்பவர்….இந்த துணைக்கலாச்சாரம் (Subculture ) என்ற ஒன்றை தவிர்க்க வேண்டும் என்று நினிப்பவர்களில் முக்கியம் ஆனவர்கள் சாதி வேறுபாட்டை ஆதரிப்பவர்களாக இருக்கும்….. அதைவிட இனவெறி பிடித்தவர்களும் இந்த சொற்பதத்தை மிகவும் கடைப்பிடிப்பார்கள்…. ஆகவே ஒரு சாதி வெறியனும் ..இனவெறியனும் ஒரு போதும் ஒரு சோஷலிசவாதியாக இருக்க முடியாது வாய்ப்பே இல்லை…. ஆனால் யாழ்ப்பாணத்து சாதிவாதிகளிடம் இந்த கலப்பு வரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள்……

(“நேற்று ஒரு நண்பரின் பதிவில் Subculture என்ற சொற்பதத்தை பார்த்தேன்….” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் – த.தே.கூ

அரசியற் கைதிகளின் பிரச்சினையை சட்டப்பிரச்சினையாகப் பார்க்க வேண்டாம் என வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சகல தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்யுமாறு, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(08) கோரியது. குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கரித்து கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் – த.தே.கூ” தொடர்ந்து வாசிக்க…)

பரராஜசிங்கம் படுகொலை, இருவர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உப தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர்(எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா) மற்றும் கஜன் மாமா (ரெங்கசாமி கனகநாயகம்) ஆகிய இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை(06) கைது செய்யப்பட்டுள்ளனர். 2005ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரையும் இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகள் கொழும்பில் இடம் பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள்…….?

புலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள் இப்போது உள்ள நிலையுடன் ஒப்பிட்டால் அளவில் குறைவாகவே இருந்தது என்கின்ற ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அந்த நிலை 2007 ஆரம்பம் வரையுமே இருந்தது. அதன் பின் 2009 மே மாதம் நடுபகுதிவரை என்றுமில்லாத வகையில் தமிழ் மக்கள் அடக்குமுறைகளையும் சமூக சீரழிவுகளையும் அனுபவித்தனர். புலிகளே இதற்கு காரணமாகினர் என்கின்ற குற்றச்சாட்டையும் நிராகரிக்கவும் முடியாது.

(“புலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள்…….?” தொடர்ந்து வாசிக்க…)

லைக்கா, லிபாறா முதலாளி அல்லிராஜா

பிரிட்டனில் ஒரு கார்பரேட் நிறுவனமான லைக்கா முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன், இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சென்று, பல கோடி பவுன்கள் வரி ஏய்ப்புச் செய்துள்ளார். வரி ஏய்ப்பு மோசடி ஆதாரத்துடன் நிரூபிக்கப் பட்டுள்ளதால், அது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனில் கார்ப்பரேட் வரி கட்டுவதை தவிர்ப்பதற்காக, கணக்கில் வராத தொகையை மோசடி செய்ததில், ராஜபக்ச குடும்பத்தினருக்கும் பங்கிருக்கிறது. ராஜபக்சவின் உறவினர் ஒருவரின் பெயரில் உருவான போலி நிறுவனம், பணப்பரிமாற்றத்திற்கு உதவியுள்ளது. இதன் மூலம் பெருந்தொகையான மோசடிப் பணம், வரியில்லாத தீவொன்றில் வைப்புச் செய்யப் பட்டுள்ளது. லைக்கா முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன், பிரிட்டிஷ் அரச மட்டத்திலும் செல்வாக்கு தேடியுள்ளார். அதற்காக, தற்போதைய பிரதமர் டேவிட் கமெரூனின் கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு £1.3 மில்லியன் நன்கொடையாக (லஞ்சம்?) கொடுத்துள்ளார். லைக்கா நிறுவனம், கடந்த வருடம் மட்டும், உலகளாவிய மொத்த இலாபம் £1.1 பில்லியன் என்று வருமானக் கணக்கு காட்டியுள்ளது. இருப்பினும், அது பிரிட்டனில் பல வருடங்களாக கார்பரேட் வரி கட்டவில்லை. தற்பொழுது இவர்கள் கனடாவில் லிபாறா என்ற பெயரில் கடை விரித்துள்ளனர். கூடவே தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்களையும் கனடிய ஆங்கிலப் பாராளுமன்றவாதிகளையும் வலை போடும் வேலையில் தமிழர் விழா என்ற போர்வையில் விழா எடுத்து சராசரி கனடியத் தழிழரையும் புழகாங்கிதம் அடையச் செய்துள்ளனர். எமது மக்களும் இவற்றின் பின்புலம் அறியாது புழகாங்கிதத்திற்குள் புகுந்துள்ளனர் (Kalaiyarasan Tha, Saakaran)

கனடாவின் பொருளாதாரம் நலிந்தது

கனடாவில் வேலைவாய்ப்புகள் நிறைந்த மகாணம் ஒன்ராறியோ. நலிந்த மாகாணங்களில் கடல் தொழிலை முதன்மைப்படுத்தும் நியூபவுண்லான்ட்; உம் ஒன்று. ஒன்ராறியோவின் தொழில் வாய்ப்பு அதிகமான வியாபர நகரமான ரொறன்ரோவில், நியூபவுண்லான்ட் வாகனங்களை இடைக்கிடை காண முடியும். இவ் வாகனங்கள் நலிவடைந்த நிலையில் இருக்கக் காணப்படும். இவர்கள் எல்லாம் வேலை தேடி ரொறன்ரோவிற்கு வருபவர்களாக இருப்பர். இது வழமையாகக் காணக்கூடிய ஒன்று. அண்மை காலங்களில் கனடாவின் எண்ணை வளம் நிறைந்த ‘வளமான” அல்பேட்டா மாகாணத்தின் வாகனங்களையும் ரொறன்ரோ வீதிகளில் அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த வாகனங்கள் நலிந்த நிலையில் இல்லை. அப்படியாயின் இவர்கள் உல்லாசப் பிரயாணிகள் என்றால் அதுதான் இல்லை. உல்லாசப் பயணிகள் பொதுவாக நல்ல நிலையில் உள்ள வாகனத்தில் வருபவர்களாக காணப்படுவர். அல்பேட்டா அமெரிக்க கூட்டமைப்பினரால் ரஷ்யாவை பொருளாதாரத்தின் மூலம் வீழ்த்த எடுத்த எண்ணை விலைக் குறைப்பில் கல்லெறி வாங்கிய கனடாவின் மாகாணம். எண்ணை விலைக் குறைப்பு இந்த மாகாணத்தையும் கனடிய பொருளாதாரத்தையும் தாக்கியுள்ள நிலையில் அல்பேட்டா மாகாணத்தில் வேலை வாய்பின்மைனால் நலிவடைந்த தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பு கூடியதாக கருதப்படும் ரொறன்ரோவிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவே ரொறன்ரோ வீதிகளின் அல்பேட்டா மாகாணத்தவரின் வாகனங்களின் பிரசன்னம். மொழி, நிறம் ஒன்று… பாகுபாடுகள் அதிகம் இல்லாததனால் மாகாணம் விட்டு மாகாணம் மாறி வேலைக்கு அலைய முடிகின்றது இங்கு. நாம் நமது நாட்டில் இது போன்று தலைநகரம் கொழும்பிற்கு அலைய முடியவில்லை இந்த அளவு சுதந்திர உணர்வுடன். பாகுபடுத்திப் பார்க்கும் மனநிலையும், மொழித் தடையும், இனத் தடையும் எம்மைப் பிரித்தே வைத்திருத்தன, பிரித்தே வைத்திருந்தனர் பாராளுமன்றவாதிகள் தமது பாராளுமன்றக் கதிரைகளுக்காக.

(சாகரன்)