கடவுச்சீீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.  ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேபால, இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1200 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன என்றார். 

கையடக்க தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு?

கையடக்க தொலைபேசி சேவைக்கான கட்டணங்களை அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் சந்தைப்படுத்தல் போட்டிப் பிரிவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட  தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் தைப் பொங்கல்

தைப் பொங்கல் கொண்டாட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில்   பிரதமர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.

தைப் பொங்கலான உழவர் தினப் பொங்கல்

என்றும் என் இனிய உறவுகளே…! நண்பர்களே…..!! தோழர்களே…..!!! அனைவருக்கும் இனிய உழவர் தின வாழ்த்துகள்.

மனித குல வாழ்விற்கு மிகவும் இன்றியமையாத உணவை உற்பத்தி செய்வதில் பெரும் பங்காற்றும் உழவர்களின் உழைப்பை கொண்டாடும் தினமாக இத் தினத்தை நாம் பார்க்க முடியும்.

ஜனாதிபதி அனுர, இன்று பிற்பகல் சீனா பயணம்

சீனாவுக்கான  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல்  நாட்டிலிருந்து பயணமாகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர்களுடன் சந்திப்பு

இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான, ராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்   சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்)  தமிழ்நாடு மாநிலக் குழு அலுவலகத்திற்கு வருகை தந்து கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கையின் வலிமையான வங்கியாக கொமர்ஷல் வங்கி

The Asian Banker சஞ்சிகையின் தாய் நிறுவனமான TAB Global இன் உலகளாவிய ஆய்வு மற்றும் ஆலோசனை துணை நிறுவனமான TAB இன்சைட்ஸ் ஆண்டுதோறும் வெளியிடும் மதிப்புமிக்க உலகளாவிய தரவரிசையில் கொமர்ஷல் வங்கி இலங்கையின் வலிமையான வங்கியாக மீண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

‘எஞ்சியது சாம்பல்தான்’

அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். 38,000 ஏக்கர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொருட்சேதத்தால், இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

4 புதிய நீதியரசர்கள் பதவிப் பிரமாணம்

புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு உயர் நீதிமன்ற நீதியரசர்களும் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

புளி ஒரு கிலோ கிராம் 2,000 ரூபாய்

உள்ளூர் சந்தையில் புளி பற்றாக்குறை காரணமாக,  ஒரு கிலோ கிராம் புளியை 2,000 ரூபாய் சில்லறை விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.