அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி காலம் நீடிப்பு

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதியானது

தொழிலதிபர் மொஹமட் ஷியாம் கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதி குழாம் விதித்த மரண தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஜனாதிபதி – மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். 

பிரேசில் பற்றி உங்களுக்குத் தெரியாத 15 சுவாரஸ்யமான உண்மைகள்

  1. தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் போர்த்துகீசியம் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது, இது போர்த்துக்கள் காலனித்துவத்தின் விளைவாகும்.
    பிரேசிலின் நிலப்பரப்பில் 60%க்கும் மேல் பரவியுள்ள அமேசான் மழைக்காடு, உலகின் 20% ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது மற்றும் பூமியில் அறியப்பட்ட பத்து உயிரினங்களில் ஒன்று உள்ளது.
    ஜப்பானிய மற்றும் பிரேசிலிய மரபுகளின் வளமான கலாச்சார கலவையுடன், ஜப்பானுக்கு வெளியே ஜப்பானியர்களின் மிகப்பெரிய மக்கள்தொகையை சாவோ பாலோ நகரம் கொண்டுள்ளது.
    பிரேசிலின் தலைநகரான பிரேசிலியா, 1950களின் பிற்பகுதியில் 41 மாதங்களில் விமானத்தின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட திட்டமிடப்பட்ட நகரமாகும்.
  2. பிரேசில் உலகின் மிகப்பெரிய கோப்பி உற்பத்தியாளர் ஆகும்,
    ரியோ டி ஜெனிரோவில் உள்ள பிரேசிலிய திருவிழா உலகின் மிகப்பெரிய திருவிழாவாகும், இது ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது
  3. உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றான ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்து தி ரிடீமர் சிலை 30 மீட்டர் உயரம் மற்றும் கிறிஸ்தவத்தின் உலகளாவிய சின்னமாகும்.
    பிரேசிலின் பாண்டனல் பகுதியானது உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல ஈரநிலமாகும், இது ஜாகுவார், கேபிபராஸ் மற்றும் ராட்சத ஓட்டர்ஸ் உள்ளிட்ட வனவிலங்குகளின் நம்பமுடியாத பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது.
    பிரேசிலின் பழங்குடி மக்கள் 150 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள், இது நாட்டிற்குள் உள்ள மகத்தான கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது.
  4. உலகின் இரண்டாவது மிக நீளமான நதியான அமேசான் ஆறு, பிரேசில் வழியாக பாய்கிறது மற்றும் அடுத்த பெரிய ஆறுகளை விட அதிக நீரை எடுத்துச் செல்கிறது.
    வடகிழக்கு மாநிலமான பஹியா கபோய்ராவின் பிறப்பிடமாகும், இது ஒரு தனித்துவமான ஆஃப்ரோ-பிரேசிலிய தற்காப்புக் கலையாகும், இது நடனம், அக்ரோபாட்டிக்ஸ் மற்றும் இசையின் கூறுகளை இணைக்கிறது.
  5. இரண்டாம் உலகப் போரின் போது தொடங்கி, தென் அமெரிக்காவின் முதல் நாடு பிரேசில் தனது ஆயுதப் படைகளில் பெண்களை சேர்த்துக்கொண்டது
    நவம்பர் 15, 1889 அன்று, பிரேசில் குடியரசாக மாறியதது
    14100,000 க்கும் மேற்பட்ட வகையான விலங்குகள் மற்றும் தாவரங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள பிரேசில் உலகின் மிக பல்லுயிர் நாடுகளில் ஒன்றாகும்.
  6. தெற்கு நகரமான கிராமடோ அதன் ஐரோப்பிய பாணி கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்திற்கு பிரபலமானது,

வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை

வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயது வர்த்தமானியில் வெளியிடப்படாதமை குறித்த அமைதியின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையை அடுத்து, 200 இற்கும் மேற்பட்ட நிபுணர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறக்கூடிய அபாயம் உள்ளதால், அரச நிர்வாக அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அறிய வருகின்றது.

உப்புத் தட்டுப்பாடு; இறக்குமதிக்கு அனுமதி

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 30,000 மெற்றிக் தொன்கள் வரை பதப்படுத்தப்படாத உப்பை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொலிஸாருக்கு வாகனங்கள் வாங்க இந்தியா நிதியுதவி

இலங்கை பொலிஸாருக்கான வாகன தேவைகளை பூர்த்தி செய்வதற்கு 300 மில்லியன் இலங்கை ரூபாயை மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

103 பேருடன் முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய படகு

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  வெளிநாட்டு பிரஜைகள் 103 பேருடன்    படகொன்று   வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது. மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும்  உள்ளடங்கியிருக்கின்றனர்.

“சைகை மொழியை அரச மொழியாக்குக”

கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் புதன்கிழமை (18)  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இலவச பசளை வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்ட நிலாவெளி கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் MOP பசளை வியாழக்கிழமை (19)  விநியோகிக்கப்பட்டது.  குறித்த உர விநியோகம் பதில் கமநல  அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ரமேஷ் தலைமையில் நிலாவெளி கமநல சேவை  நிலையத்தில் இடம்பெற்றது