தெற்காசிய சுற்றுலா சேவை விருது விழாவின் போது , தெற்காசியாவின் முன்னணி விமான சேவையாக “ ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ”, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் பிரத்தியேக செயலாளர்: ஹசனா சேகு இஸ்ஸதீன்
பிரதம மந்திரியின் பிரத்தியேக செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும், அக்கரைப்பற்று சட்ட முதுமாணி ஹசனா சேகு இஸ்ஸதீனுக்கு வாழ்த்துக்கள் .இவர், முன்னாள் ஊடகத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி சேகு இஸ்ஸதீன் அவர்களின் அன்பு புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்
“ பேக்கரி பொருட்களின் விலையை குறைக்கவும் ”
பேக்கரி பொருட்களின் விலையை முடிந்தவரை குறைக்க அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை விலை குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் முட்டையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்குமாறு அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜெயவர்தன தெரிவித்தார்.
கிழக்கு ஆளுநர் கடமை பொறுப்பேற்பு
கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (26) அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.பேராசிரியரான ஆளுனரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார். குறித்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி எஸ் ரத்நாயக்க, ஆளுனர் செயலக செயலாளர் எல்.பி மதநாயக்க, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள் , தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
“ பார் பட்டியல் விரைவில் அம்பலமாகும்”
மானியம் ரூ. 25,000 வரை அதிகரிப்பு
2024/25 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர நிவாரணத்தை ஒக்டோபர் 01 முதல் ஹெக்டயாருக்கு 15,000 ரூபாவில் இருந்து 25000 ரூபாய் வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
“சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக பேச்சு”
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை (25) ஆற்றிய விசேட உரை
பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே,
பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம்.