”வழக்கமான அரச வைத்தியசாலையாக நடத்த உத்தேசம் இல்லை”

டொக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு (NFTH) சம்பள கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 40 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்ற போதிலும், வழக்கமான அரசாங்க வசதியுள்ள வைத்தியசாலையாக நடத்த அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று காலை NFTH இன் ஆய்வின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். 

சிறுமி வன்புணர்ந்து படு கொலை: நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த  பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட  55 வயதுடைய நபரை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் வியாழக்கிழமை (26) உத்தரவிட்டது.

கனடாவில் நடைபெறப்போகும் ஆட்சி மாற்றம் மக்கள் நலன் சார்ந்ததா..?

(தோழர் ஜேம்ஸ்)

கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவை(Justin Trudeau) பதவியில் இருந்து அகற்றுவது என்ற விடயம் கனடா அளவிலும் அமெரிக்க இந்தியா அளவிலும் அதிகம் பேசப்படும் விடயமாக அண்மைய காலங்களில் அமைந்திருக்கின்றது.

எம்டி.வாசுதேவன் நாயர்

(Rathan Chandrasekar)


நம் இலக்கியவாதிகளுக்கு –
சினிமாக்காரர்கள்மீது ஒருவித
ஒவ்வாமை உண்டு.
ஆனால் ஓர் இலக்கியவாதியே
வெற்றிகரமான சினிமாக்காரனாக
சமைந்த வரலாறு மலையாள சினிமாவுக்குப் புதிதில்லை.
அவர்களில் ஒருவர்
எம்டி.வாசுதேவன் நாயர்.

புதிய சுதந்திரம்

தோழமையுள்ள தோழர்களே! நாங்கள் செய்கின்ற அரசியல் நகர்வுகள் குறைந்த பட்சம் தோழர்கள் இடையே யவது இருக்க வேண்டும் . தளநிலவரம் அடுத்த தலைமுறையிடம் சென்றுள்ளது அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளித்து அரசியல் செய்தால் கட்சிகள் வளர்ச்சியடையலாம் பழைய கதைகளை கேட்க்டும் மனநிலையில் மக்களின் மனநிலையில் லை புரிந்தவர்களுக்கு புரிந்தால் நல்லது புரியாது போல் நடிப்பவர் க்கு காலம் பதில் சொல்லும்
நன்றி

ரூபவாஹினி தலைவர் இராஜினாமா

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் கலாநிதி செனேஷ் பண்டார தனது பதவியை நேற்று இராஜினாமா செய்துள்ளார். அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களினால் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இடைநிறுத்தப்பட்ட ஊழியர்கள் மீண்டும் சேவையில் இணைப்பு

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 62 ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியம்;பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்

ஜனாதிபதி நிதியில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய பொலிஸ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

8747 சாரதிகள் கைது

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

நாளை 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியடையும் டிசெம்பர் 26ஆம் திகதி (நாளை) காலை 9.25 மணி முதல் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. 2004 டிசம்பர் 26, அன்று நடந்த இந்த பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது