13 குறித்து ஐ.நா வில் இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தல்

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்வதன் ஊடாகவும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

(தோழர் ஜேம்ஸ்)

இன்னும் இரு வாரங்களுக்குள் செப்ரம்பர் 21ம் திகதி நடைபெற உள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கவனம் இலங்கையிற்கு அப்பால் உப கண்ட சூழல் உலகம் என்றாக மேற்குலக நாடுகள் வரை பேசப்படும் விடயமாக இன்று மாறி இருக்கின்றது.

சிறந்த பொருளாதாரக் கொள்கை யாருடையது?

(ச.சேகர்)

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னமும் இரண்டு வாரங்களுக்கு குறைவான நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் முக்கிய போட்டியாளர்கள் கடந்த வாரம் தமது பொருளாதாரக் கொள்கைகளை வெளியிட்டிருந்தனர்.

காசாவில் தாக்குதல்: 30 இற்கும் மேற்பட்டோர் பலி

காசாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 30 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்படி தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரையுடன் ஜோர்டானின் எல்லைப்பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்படுகிறது.

யாகியால் வியட்நாமில் 14 பேர் பலி, 176 பேர் காயம்

சீனாவைத் தொடர்ந்து வியட்நாமில் ‘யாகி’ சூறாவளி புயல் தாக்கியதில் 14 பேர் பலியாகிய நிலையில், 176 பேர் காயமடைந்தனர். சீனாவின் ஹைனான் தீவு மற்றும் குவாங்டாங் மாகாணங்களை ‘யாகி” சூறாவளி புயல் புரட்டிப் போட்டது.

நைஜீரியாவில் பயங்கர விபத்து 48 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது லொரி ஒன்று மோதி வெடித்துச் சிதறியதில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நைஜர் மாகாணம் அகெயி நகரில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொரி மீது மற்றொரு லொரி மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வடக்கு ரயில் சேவை மீள ஆரம்பமாகும்

வடக்கு ரயில் பாதையின் மாஹோ – அநுராதபுரத்துக்கும் இடையிலான ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இடையில் தற்போது கல்கமுவ பகுதியில் நிர்மாணிக்கப்படும் யானை சுரங்கப்பாதையின் நிர்மாண பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகிறது. அதன் பணிகள் நிறைவடைந்த பின்னர் காங்கேசன்துறை – கொழும்பு ரயில் சேவை மீள ஆரம்பிக்கும் என தெரியவந்துள்ளது .

சட்டவிரோத பிரச்சாரம் ; அறுவர் கைது

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் சின்னத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை?

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த வாரத்தில் 18, 19, 20ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியுமா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.