ஈழத் தமிழர்கள் வளர்ச்சியடைந்த நாகரீகத்தை உடையவர்கள்

(சாகரன்)

ஒரு சமூகத்தின் பிரிதிநிதிகள் பொது வெளியில் வெளிப்படுத்தும் தன்மை அந்த சமூகம் பற்றிய பொது பார்வையை பெரும்பாலும் ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்துவிடுகின்றது.

பாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு தடை

அரச ஊழியர்கள் அனைவரும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவொன்று பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராகத் தகவல்கள் வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரச ஊழியர்கள் அனுமதியின்றி எந்தச் சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

5,000 ரூபாய் தாள்களுடன் சிக்கிய நபர்

62 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடைய ஹெனேகம, அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவராவார். தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலுவன வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து, தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத்தடை

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிலும்  திரைப்பட திரையிடல்கள் நடைபெறுகின்றன. 

இரு கட்சிகளும் மீண்டும் ஒன்று சேர்ந்தன

டி.எஸ்.சேனநாயக்க, எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க போன்ற தலைவர்களால் நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, பின்னர் இரண்டாகப் பிரிந்ததாகவும்  ஐக்கிய தேசியக் கட்சியின் 78வது ஆண்டு நிறைவை இன்று  கொண்டாடும் நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக அந்த இரு கட்சிகளும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்  மொறவகயில் நடைபெற்ற ‘இயலும்  ஸ்ரீலங்கா’ பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி இதை குறிப்பிட்டார்.

உதயமானது புதிய கூட்டணி

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் கட்சிகள் இணைந்து உருவாக்கிய “பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி” அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், பத்தரமுல்லை வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் இந்த நிகழ்வு இன்று (05) காலை நடைபெற்றது. இந்த கூட்டியின் சின்னம் “கிண்ணம்” என அறிவிக்கப்பட்டு  “பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி” உத்தியோகப்பூர்மாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த புதிய கூட்டணிக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரன செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“உண்மையான வில்லன்களை தமி​ழர்களுக்கு தெரியும்”

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாக குற்றம்சாட்டிய பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் அக்கட்சி பிளவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தங்களுக்குத் தாங்களே வழங்கும் ’தமிழ் வாக்கு’

பொதுவேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக முன் நிறுத்தப்படவில்லை. அவர் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்காகவும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும்,  தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் ஒலிக்கச் செய்வதற்காகவுமே முன் நிறுத்தப்படுகிறார் என தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெனிசுலா ஜனாதிபதியின் சொகுசு விமானம் பறிமுதல்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு சொந்தமான சொகுசு விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
  இந்த விமானம் மோசடியாக வாங்கப்பட்டு அமெரிக்காவிலிருந்து கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
  மேற்படி விமானம் டொமினிகன் குடியரசில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதன் பெறுமதி  இலங்கை ரூபாயில் 400 கோடி என தெரிவிக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதி மற்றும் 2023 ஆம் ஆண்டின் முற்பகுதிக்கு இடையில், மதுரோவுடன் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து இந்த சொகுசு விமானத்தை வாங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.