உடுப்பிட்டி , இமையாணன் மேற்கில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த 35 பொது அமைப்புக்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளி சிறார்களுக்கு உணவு கொடுப்பனவு அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் 60 ரூபாயை 100 ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மற்றொருவரின் எம்.பி பதவியை சவாலுக்கு உட்படுத்தி ரிட்மனு
மற்றுமொருவரின் எம்.பி பதவியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் டாக்டர். உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினராக (எம்.பி) பதவி வகிக்கத் தகுதியற்றவர். எனவே அவர் அமைச்சராகவும் பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 வினாக்கள் கசிந்த விவகாரம்: இரகசிய அறிக்கை கையளிப்பு
திருட்டுப் பணம் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்படுமா?
முகமூடி அணிந்த பெண் ஒருவர் NPP பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியிடம் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் குறிப்பிட்டது போல் உகாண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு அவர்களின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஞானசார தேரருக்கு பிடியாணை
மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று (19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஒற்றைப் பனைமரம்
(Puthiyavan Rasiah)
26 மார்கழி மாலை 3.00 மணிக்கு ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம் சிறப்புக் காட்சி இடம்பெறுகிறது. திரையிடலை ஒழுங்கு செய்திருக்கும், Siva Abctamilnet அவர்களுக்கு நன்றி. சமுகம் சார்ந்த திரைமுயற்சிகளுக்கான முதலீடு என்பது, பெரும் சவாலாகவே இருக்கிறது. எனது அடுத்த படத்திற்கான முதலீட்டை பெற்றுக்கொள்ள, ஒரு புது முயற்சியாக இத்திரையிடலைப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார் சிவா. காட்சிக்கான நுழைவு இலவசம்.
வவுனியாவில் மாரடைப்பால் 45 பேர் மரணம்
ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்
பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி
பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். “இதனால் மீண்டும் டொலர் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம், மத்திய வங்கியுடன் நீண்ட நாட்களாக விவாதித்து, வெளியேறும் டொலர்களை புரிந்து கொண்டு இதைச் செய்கிறோம். அதனால்தான் நாங்கள் உழைத்தோம். வாகனச் சந்தையை கடுமையான ஸ்திரத்தன்மையுடன் திறக்க வேண்டும்” என்று ஜனாதிபதி கூறினார்.