உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கொள்கை

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் மற்றும் உணவு கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் நான்காவது முறையாகவும் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று (03) கூடினர்.

’’புதிய மின்சார திருத்த சட்டமூலம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்’’

புதிய மின்சார திருத்த சட்டமூலம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும், இதன் கீழ் இலங்கை மின்சார சபை (CEB) பிரக்கப்படுவதும் நீக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யாழில் தொடர்ந்து மீட்கப்படும் பெருந்தொகை கஞ்சா

யாழ்ப்பாணம் எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோ கிராம் கஞ்சா திங்கள்கிழமை (3) காலை  கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதி கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் பொழுது கிடைக்கபெற்ற தகவலுக்கமைவாக எழுவை தீவு அனலை தீவு கடற்பரப்பில் பயணித்த படகொன்றினை சோதனையிட்ட  பொழுது 190 கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.

ஏற்றாமல் சென்றால் அறிவிக்கவும்

இலங்கை போக்குவரத்து சபையின் பருவச்சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரஜைகளை ஏற்றாமல் செல்லும் இ.போ.ச பேருந்து சாரதிகள் குறித்து 1958 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு  முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. எந்தவொரு பிரஜையும் இது தொடர்பில் குறித்த இலக்கத்திக்கு அழைத்து தெரிவிக்கலாம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

”இது எனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி”

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உள்ளூர் செய்தித்தாள் ஒன்று தவறான தகவலை பரப்பியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

ஜீவனுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான்  உள்ளிட்ட 10 பேருக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஐந்தாம் மாதம் 30 ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட  ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எரிபொருள் விநியோக குளறுபடி: சி.ஐ.டி விசாரணை

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு மற்றும் குளறுபடி தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்ஜ குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.

தற்காலிக போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்

ரமழான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

IMFஇடமிருந்து 334 மில்லியன் டொலரை பெறும் இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையாக இலங்கைக்கு 334 மில்லியன் டொலர் நிதி  கிடைக்கும் என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

“த.தே.கவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட தீர்மானம்’’

நாட்டில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன்  எவ்விதத்தில் அணுக முடியும் என்றும், தேர்தலுக்கு பின்னர் வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும், ஆட்சி நிர்வாகங்களை அமைக்கின்ற போது, சேர்ந்து அமைக்கக்கூடிய வகையில், தேர்தலுக்கு முன்னர் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில், கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  ஜனாதிபதி சட்டத்தரணி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.