உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மே முதல் வாரத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியில், இந்த வாரத்திற்குள் திகதி குறித்து கலந்துரையாடவும் இறுதி முடிவை எட்டவும் ஒரு சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றார்.
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கொள்கை
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் மற்றும் உணவு கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் நான்காவது முறையாகவும் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று (03) கூடினர்.
’’புதிய மின்சார திருத்த சட்டமூலம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்’’
யாழில் தொடர்ந்து மீட்கப்படும் பெருந்தொகை கஞ்சா
யாழ்ப்பாணம் எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோ கிராம் கஞ்சா திங்கள்கிழமை (3) காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதி கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் பொழுது கிடைக்கபெற்ற தகவலுக்கமைவாக எழுவை தீவு அனலை தீவு கடற்பரப்பில் பயணித்த படகொன்றினை சோதனையிட்ட பொழுது 190 கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.
ஏற்றாமல் சென்றால் அறிவிக்கவும்
இலங்கை போக்குவரத்து சபையின் பருவச்சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரஜைகளை ஏற்றாமல் செல்லும் இ.போ.ச பேருந்து சாரதிகள் குறித்து 1958 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. எந்தவொரு பிரஜையும் இது தொடர்பில் குறித்த இலக்கத்திக்கு அழைத்து தெரிவிக்கலாம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
”இது எனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி”
ஜீவனுக்கு பிணை
முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஐந்தாம் மாதம் 30 ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.