(Sivakumar Subramaniam)
வட இலங்கை, குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள், பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்ட மாகாணமாக அறியப்படுகிறது.
The Formula
தற்போதைய வறண்ட வானிலை தொடர்ந்து நீடித்தால் மின் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணங்களை 20% குறைத்தோம். ஆனால், வறட்சி இப்படியே சென்றால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த 6 மாதங்களில் 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இந்த வறட்சி அதிகரித்தால் அது மேலும் அதிகரிக்கும் என்றார்.
நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போது பேசிய திசாநாயக்க, சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும் என்றும், அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஸ்திரமின்மையை உருவாக்க முயற்சித்ததாகக் கூறப்படும் தகவல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.