பிரெய்ல் முறையில் பிரேரணையை முன்வைத்து வரலாற்று சாதனை

அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி. பெரேரா இன்று முதல் முறையாக பிரெய்ல் முறையில் எழுதப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி பாராளுமன்ற அமர்வை ஒத்திவைக்கும் பிரேரணையை முன்வைத்து வரலாறு படைத்தார்.

மின் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்

தற்போதைய வறண்ட வானிலை தொடர்ந்து நீடித்தால் மின் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணங்களை 20% குறைத்தோம். ஆனால், வறட்சி இப்படியே சென்றால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  இந்த 6 மாதங்களில் 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இந்த வறட்சி அதிகரித்தால் அது மேலும் அதிகரிக்கும் என்றார்.

ஜனாதிபதி அனுர இன் பாதுகாப்பு

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அது ஆட்சி மாற்றமாக ஆரம்பித்து அரசியல் மாற்றமாக உருவெடுத்து வருவதாக உணரப்படுகின்றது
இந்த அரசியல் மாற்றம் உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் விரும்பப் படாத நிலமைகளையும் சிலர் மத்தியில் ஏற்படுத்தியும் இருக்கின்றது.

புதிய மோட்டார் சைக்கிள் ரூ.10 இலட்சம்

வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு பெறப்படும் முதல் தொகுதி வாகனங்களில், புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் விலை கிட்டத்தட்ட ரூ. 1 மில்லியன் (10 இலட்சம் ரூபாய்) ஆகும்.

ஆரையம்பதியில் ஆவாகுழு பாணியில் வாள்வெட்டு

மட்டக்களப்பு – ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வியாழக்கிழமை (20) மாலை 6 மணியளவில்  5 பேர் கொண்ட குழு   வாள்களுடன்  நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி கருத்து

நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போது பேசிய திசாநாயக்க, சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும் என்றும், அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஸ்திரமின்மையை உருவாக்க முயற்சித்ததாகக் கூறப்படும் தகவல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

“அரசாங்கம் மீதான அங்கீகாரத்தின் மதிப்பீடு உச்ச நிலை எட்டியது”

வெரிட்டேரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வு சுற்றின் ‘தேசத்தின்மனநிலை’ கருத்துக்கணிப்பின்படி, 2024 ஜூலை மாதத்தில் 24 சத வீதமாக இருந்த அரசு மீதான மக்கள் அங்கீகாரம் 2025 பெப்ரவரியில் 62 சதவீதம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது. தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு காணப்படும் அங்கீகாரம் அதிகரித்துள்ளது.

சஞ்சீவ கொலையில் மேலும் மூவர் அதிரடி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கம்பஹா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது சமூகப் பொறுப்பாகும்

மானிட குலத்துக்கும் பூமிக் கிரகத்தின் எதிர்காலத்துக்கும் நீர் ஒரு முக்கிய இயற்கை வளம் என்றே கூறலாம். அந்தவகையில், நீரானது எமது மிகப்பெரிய இயற்கை வளமாகும். இந்த நீர் வளத்தை வேறு எதனாலும் ஈடு செய்யப்பட முடியாது. அவ்வாறு எமது உயிர்வாழ்வுக்கு உறுதுணையாக உள்ள நீரை நாம் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

நீதிமன்ற வளாகத்திற்குள்…. வரவேண்டிய கார் வரவில்லை

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.