நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போது பேசிய திசாநாயக்க, சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும் என்றும், அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஸ்திரமின்மையை உருவாக்க முயற்சித்ததாகக் கூறப்படும் தகவல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
“அரசாங்கம் மீதான அங்கீகாரத்தின் மதிப்பீடு உச்ச நிலை எட்டியது”
வெரிட்டேரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வு சுற்றின் ‘தேசத்தின்மனநிலை’ கருத்துக்கணிப்பின்படி, 2024 ஜூலை மாதத்தில் 24 சத வீதமாக இருந்த அரசு மீதான மக்கள் அங்கீகாரம் 2025 பெப்ரவரியில் 62 சதவீதம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது. தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு காணப்படும் அங்கீகாரம் அதிகரித்துள்ளது.
சஞ்சீவ கொலையில் மேலும் மூவர் அதிரடி கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கம்பஹா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது சமூகப் பொறுப்பாகும்
மானிட குலத்துக்கும் பூமிக் கிரகத்தின் எதிர்காலத்துக்கும் நீர் ஒரு முக்கிய இயற்கை வளம் என்றே கூறலாம். அந்தவகையில், நீரானது எமது மிகப்பெரிய இயற்கை வளமாகும். இந்த நீர் வளத்தை வேறு எதனாலும் ஈடு செய்யப்பட முடியாது. அவ்வாறு எமது உயிர்வாழ்வுக்கு உறுதுணையாக உள்ள நீரை நாம் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
நீதிமன்ற வளாகத்திற்குள்…. வரவேண்டிய கார் வரவில்லை
கடவுச்சீட்டு: ஒரு நாள் சேவை குறித்த விசேட அறிவிப்பு
வித்தியா கொலை வழக்கு ; லலித் ஜயசிங்கவுக்கு கடூழிய சிறை
கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது
கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வரம் நிலையில், தற்போது கொலைக்கான காரணத்ழதயும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தோழர் லட்சுமி நஞ்சப்பன் மறைவு !
தோழர் லட்சுமி நஞ்சப்பன் மறைவு !எம் இதய அஞ்சலிகள்!!

மிக இருண்ட காலத்தில் நிர்க்கதியான காலத்தில் தோழர் நாபா தோழர்கள் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட நாட்களில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அறச் சீற்றம் கொண்டார்கள் .தர்மபுரியில் அவர்களது பேராளர் மாநாடு. தோழர் நஞ்சப்பன் அவரது துணைவியார் லட்சுமி ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் உறுதுணையாக நின்றார்கள்.
ஒரு மேடையில் மறைந்த உன்னத தோழர்கள் மொகித் சென் த.பாண்டியன் உட்பட வரலாறு கண்ட தோழர்கள் அருகில் நின்றார்கள். தர்மபுரியில் பேரணி ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்காக பேரணியில் தோழர் நாபாவின் பதாகைகளையும் அவர்கள் உயர்த்தி சென்றார்கள் பசுமையாக எம் நினைவுகளில் .தோழர்களின் படுகொலை தொடர்பாக தோழர் நஞ்சப்பனின குரல் தமிழக சட்ட சபையிலும் ஒலித்ததுமறக்கிலோம்