நெஞ்சு பொறுக்குதில்லையே என வெதும்பிய என் முப்பாட்டன், அந்த எட்டயபுரத்து முண்டாசு கவிஞன், 39 வருடங்களில் இவ் உலக வாழ்வை நீத்தவரின், மன நிலையில் இருந்து தான் இதனை பதிவு செய்கிறேன். பிள்ளையார் பிடிக்க என எடுத்த மண்ணை வீணடித்தோமா? என்ற தன்மானம் என்னை கேள்வி கூண்டில் நிறுத்துகிறது. சற்று மாற்று சிந்தனையுடன் செயல்பட்டிருந்தால் நாம் எடுத்த பொறுப்பை இன்று வரை நிலை நிறுத்த முடிந்திருக்குமோ? என்ற எனது இரு மனநிலை, என்னுள் கேள்விக்கணை தொடுக்கிறது. காரணம் நூற்றுக்கணக்கான போராளிகள், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் இழப்பின் பின், எம் இனத்துக்கு இந்தியா வலிந்து பெற்று தந்தது, தற்காலிக இணைப்புடனான தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுரீதியான வாழ்விடமான, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சபை. அதை கூட நந்தவனத்து ஆண்டியாய் போட்டு உடைத்த பெருமை எங்களுக்கு வந்து சேரட்டும். நாபாவை விட்டு விடுவோம். அவருக்கு எல்லாமே நோ புறப்ளம்.
(“மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை?” தொடர்ந்து வாசிக்க…)