(Mithunan )
இன்றைய உலகில் பலர் நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பார் அற்றுக் கிடக்க விடப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்ற ஒரு பாரிய மனச் சுமையை மனதில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றார்கள். குடும்பங்களில் பல காரணங்களால் இப்பேர்ப்பட்டநிலை ஏற்படலாம். ஆனால் சமூக ரீதியாக நாம் அவ்வாறு சிந்திப்பவர்களின் ஏக்கத்தைப் போக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நின்று கொண்டிருக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களாக இருக்கலாம், போரினால் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம், விசேடதேவைகள் உள்ளவர்களாக இருக்கலாம், இளம் விதவைகளாக இருக்கலாம், குடும்பப் பாரத்தைத் தனியே சுமக்கும் பெண்களாக இருக்கலாம், வயோதிபர்களாக இருக்கலாம், வேறு பல விதங்களில் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் யாவரையும் அணைத்துச் சென்று மனதில் அமைதியையும் நிறைவையும் ஏற்படுத்தவே சமூகசேவைகள் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது.
(“நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பாரற்று கிடக்க விடப்பட்டுள்ளோம்! – வடக்கு முதலமைச்சர்” தொடர்ந்து வாசிக்க…)