வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி கோரும் யோசனை வடமாகாண சபையில் நிறைவேற்றம்

வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்துக்கு சமஷ்டி ஆட்சி முறைமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை, இன்று வெள்ளிக்கிழமை (22) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இந்த யோசனை, சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையைத் தயாரிப்பதற்காக, வட மாகாணசபையினால் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழு, வடக்கின் பல பிரதேசங்களுக்கும் செய்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தே, மேற்படி யோசனையைத் தயாரித்திருந்தது.

(“வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி கோரும் யோசனை வடமாகாண சபையில் நிறைவேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

பெருமைகொள் தமிழா

டொரோண்டோ மற்றும் அதன் பெரும் பாகத்திலும் “பெருமைகொள் தமிழா” என்று பெருமிதம் செய்து வந்த “வணக்கம் எப் எம்” வானொலி அதன் 102.7fm என்ற உரிமத்தை இழந்து விட்டது….102.7 fm கடந்த வருடம் 2015 இல் கீதவாணி வானொலி நிலைய இயக்குனர் நடா ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டு இருந்த போதிலும் “வணக்கம் எப் எம்” – இவர்கள் நடத்தில் வந்தார்கள் இந்த பன் வானொலி அலை வரிசை வானொலியாக நடத்த வென்றும் மென CRTC (கனடியன் ரேடியோ-டெலிவிஷன் மற்றும் தொலைத்தொடர்பு) வழங்கப்பட்டிருந்தது “வணக்கம் எப் எம்” அதையும் மீறி இவர்கள் தமிழுக்கே முக்கியத்துவம் வழங்கி நடாத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது……

நகோனோ – கரபாக்: மௌனமாக ஒரு யுத்தம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலகின் பல மூலைகளிலும் நடப்பவை நம் காதுகளை எட்டுவதில்லை. எட்டுவனவும் முழுமையான செய்திகளல்ல. அவற்றிற் பாதி உண்மையுமல்ல. தெரிந்தே திரித்த செய்திகள் எங்களை அடைகின்றன. உலகின் செய்தி வழங்குனர்கள் தரும் செய்திகளை விடத் தராமல் விடும் செய்திகள் பல சமயங்களில் முக்கியமானவை. செய்திகளின் முக்கியம், அவை யாருக்கானவை என்ற அடிப்படையிலேயே முடிவாகின்றன.சில நாட்களுக்கு முன்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே மூண்ட யுத்தம், நெடுங்காலமாகத் தொடரும் முரண்பாட்டைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. இரு நாடுகளும் போரிடுதற்குக் காரணமாக அமைந்தது, நகோனோ-கரபாக் என்ற நிலப்பரப்பாகும். ஆர்மேனியாவுக்குரிய நகோனோ-கரபாக் அஸர்பைஜானாற் சூழப்பட்ட நிலப்பரப்பாகும்.

(“நகோனோ – கரபாக்: மௌனமாக ஒரு யுத்தம்” தொடர்ந்து வாசிக்க…)

இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம் – ஃபிடெல் காஸ்ட்ரோ

“இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்” என ஃபிடெல் காஸ்ட்ரோ தனது உரையில் தெரிவித்துள்ளார். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பும் அதன் நிமித்தமாக ஃபிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையும் இந்த உலகுக்கு ஒரு ஆணித்தரமான செய்தியை தெரிவித்திருக்கிறது.

(“இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம் – ஃபிடெல் காஸ்ட்ரோ” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தனின் அரசியலும் திமிரும்

ஏக தலைமைத்துவம் என்கிற அரசியல் அதிகார நிலை கொடுக்கும் அடாவடித்தனமான திமிரையும் அலட்சியப் போக்கினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், வடக்கில் தொடர்ச்சியாக சில நாட்கள் தங்கியிருந்து மக்கள் சந்திப்புக்களையும் அரசியல் கலந்துரையாடல்களையும் கடந்த வாரமே அவர் நிகழ்த்தினார்.

(“சம்பந்தனின் அரசியலும் திமிரும்” தொடர்ந்து வாசிக்க…)

‘பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படாது’

‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்றால் அதற்கு இணையான அல்லது நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான புதிய பலமான சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படாது’ என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

(“‘பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படாது’” தொடர்ந்து வாசிக்க…)

மோடி செய்த இருபதாயிரம் கோடி எரிவாயு ஊழல்

(அ.மார்க்ஸ்)

நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற 19,716 கோடி ரூபாய் அளவிலான ஊழல் ஒன்றை CAG யின் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சென்ற மார்ச் 31 அன்று இந்த அறிக்கை குஜராத் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டபோதும் இது உரிய அளவில் கவனம் பெறவில்லை. திங்கள் கிழமை ஆங்கில இந்து நாளிதழில் இது குறித்த ஒரு விரிவான கட்டுரையை காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் எழுதியுள்ளார்.

(“மோடி செய்த இருபதாயிரம் கோடி எரிவாயு ஊழல்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம்(பதிவு13)

அய்யா அம்மா வீட்டில் எவ்வளவோ கஷ்டங்கள் வந்தபோதும் அண்ணன் பற்குணத்தின் பணத்தேவைகளை எப்படியோ கடன்பட்டு சமாளித்தனர்.அய்யா ஊரில் இல்லாதபோது ஏதாவது பணம் தேவையான நேரங்களில் எமது உள்ளூரில் சிறிய பலசரக்குக் கடை நடாத்தி வந்த வேலன் என்கிற வேலப்பா அவசர தேவைகளுக்கு கை கொடுப்பார்.இவர் தன் பொருட்களுக்கு ஒரு சில சதங்களை ஆதாயமாக வைத்து வியாபாரம் செய்தபோதும் ஊரில் சிலர் விளக்கமின்றி கொள்ளை வேலன் என்பார்கள்.ஆனால் அவர் நல்ல மனிதர்.நாணயமானவர்.எங்களுக்கு உணவுத்தேவைகளுக்கு கூட கடன் தந்தவர்.ஒரு நாளும் கடனை திருப்பிக் கேட்டு தொல்லை தந்தது இல்லை.

(“பற்குணம்(பதிவு13)” தொடர்ந்து வாசிக்க…)

காணாமற்போன மூவர் சிறையில் உள்ளனர்

வவுனியா முத்தையன்கட்டு மற்றும் புளியம்பொக்கணை ஆகிய இடங்களிலிருந்து, 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போனதாகத் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் மூவர், மாலைதீவுகளிலிருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு, வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனது இளைய சகோதரன், 2005இல் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றிருந்த போது, காணாமற்போயிருந்ததாகவும் சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகளின் பின்னர், தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், மாலைதீவுகள் சிறை ஒன்றில் தான் உள்ளதாகக் கூறியதாகவும் அவர்களை நேரில் சென்று பார்த்துவிட்டுத் திரும்பிய கௌரிராஜா கவிதா தெரிவித்துள்ளார்.

(“காணாமற்போன மூவர் சிறையில் உள்ளனர்” தொடர்ந்து வாசிக்க…)

பிரிவு எதற்கு?

(அகிலன் கதிர்காமன்)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்திருக்கிறார். சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே ஓர் எதிர்பார்ப்பிருந்தது. ஆனாலும் இப்போதுதான் தன்னுடைய விலகலை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார் சந்திரகுமார். ஆனால், சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, இதுவரையில் ஈ.பி.டி.பி வட்டாரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஈ.பி.டி.பியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் இதைப்பற்றிய செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை.

(“பிரிவு எதற்கு?” தொடர்ந்து வாசிக்க…)