(விஜிதாலோகநாதன், ஜெர்மனி)
இன்றையஉலகம் விளம்பரயுக்திகளுக்குள் கட்டுண்டுகிடக்கிறது. உணவுமுதல் வைத்தியம்,அழகுமுதல் ஆடைகள்,அநாவசியதேவைகள்-சேவைகள் எனஅனைத்திலுமேவிளம்பர இருட்டையேவெள்ளொளியாகக் கருதவைத்துவிட்டார்கள். சுவாசக்காற்றும் பைகளில் அடைத்துவிற்பனைக்குவந்தாற் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இலகுவாக இலவசமாகக் கிடைக்வுள்ளமனிதவளம் அனைத்தையும் வர்த்தக்குழுமங்கள் தம் லாபத்தேவைக்காகக் காவுகொண்டுவிட்டன. அதிலும் ஆண்களைவிடவிசேடமாகப் பெண்கள் விளம்பரவலைக்கண்களுக்குள் வேடன் வலையின்மான்களாகச் சிக்கிக்கொண்டனர்.அழகுஎன்பதுபெண்களுக்குஉணவை,நீரைவிடவும் முக்கியமாகப் பார்க்குமளவுக்குகற்பிதப்படுத்தியகலை-கலாச்சாரப் பாங்குகளும் இன்றையவிளம்பரவர்த்தகர்களுக்குபெரிதும் துணைநிற்கின்றன.