எங்கள் ஸ்டாலின்அண்ணா மறைந்தார்!

நீண்ட நெடிய பதிவாக எழுத முடியாத அளவுக்கு, என் கண்ணீர் கணணியை மறைப்பதால், முன் பதிவாக இந்த தீரா துயரை உடன் பதிவிடுகிறேன். பின்பு சற்று என்னை ஆசுவாசபடுத்தியதும், அண்ணா பற்றிய என் தொடர் தொடரும். நேற்று முன்தினம் ஒரு கட்டுரை எழுதுமுன் கிடைத்த தகவலை உறுதிப்படுத்த, குண்சியை தொடர்பு கொண்டபோதுதான் அறிந்தேன், அண்ணாவின் நிலை சற்று மோசம் என்று. குண்சி தந்த தாஸ் [ பல்லவன்] இலக்கத்துக்கும், விஜய் இலக்கத்துக்கும் [அண்ணாவின் மகன் ] அழைப்பை எடுத்தபோது, தற்போது நிலமை மோசமில்லை என தாஸ் மற்றும் விஜயின் அழைப்பில் வந்த பெண் கூறினார். தானும், குகனும் மாவினும், காரில் சென்று அண்ணனை பார்த்துவிட்டு வந்ததாக தாஸ் கூறினார். தொண்டையில் பூட்டிய குழாய் சிரமமாய் இருப்பதால், காலையில் தான் அதை கழட்ட, வைத்தியசாலை போனதாக விஜயின் அலை பேசியில் வந்த பெண் கூறினார்.

(“எங்கள் ஸ்டாலின்அண்ணா மறைந்தார்!” தொடர்ந்து வாசிக்க…)

அஜந்தாவின் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்வு.

திரு.அஜந்தா ஞானமுத்து (சக்திசாந்தன்) அவர்களால் எழுதப்பட்ட கவிதை நூல்களின் வெளியீடு மே-29-2016 ஞாயிறுமாலை ரொரன்ரோ கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வினை இங்கு வாழும் நமது தாய்மார்கள் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க திருமதி சுஜி கலிங்கரத்தினம் அவர்கள் தமிழ்மொழி வாழ்த்து இசைக்க தமிழன்னைக்கு மரியாதை செலுத்தினர்.

(“அஜந்தாவின் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்வு.” தொடர்ந்து வாசிக்க…)

கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!

1984ம் ஆண்டு தமிழ் பிரதேசம் எங்கும் குறிப்பாக யாழ்ப்பாணம் எங்கும் தொடர்சியாக ஊரடங்கு சட்டம் பிறப்பித்து கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. இஸ்ரேல் மொசாட்டின் ஆலோசனைப் பிரிவு இலங்கையின் அமெரிக்க தூதரகத்தில் இயங்கி வந்தது. ஐ.தே. கட்சியின் ஆட்சியில் இல்ரேலின் நலன்காக்கும் பிரிவு என்ற போர்வையில் அமெரிக்க தூதரகத்தில் திறக்கப்பட்டு மொசாட்டின் இராணுவ ஆலோசனைப் பிரிவு செயற்பட்டு வந்தது. இலங்கையில் முஸ்லீம்மக்களின் எதிர்பை மீறி இஸ்ரேல் தூதரகம் திறப்பது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதற்காக ஜேஆர் அரசு இந்த ஏற்பாடுகளை செய்திருந்தது.

(“கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!” தொடர்ந்து வாசிக்க…)

ஈழவிடுதலைப் போராட்டத்தின் இந்திய மூலவர் தோழர் ஸ்ராலின் அண்ணா எம்மை விட்டுப் பிரிந்தார்

 

ஈழ மக்களால் ஸ்ராலின் அண்ணா என்ற அறியப்பட்டவரும் கும்பகோணத்தை தனது வதிவிடமாகக் கொண்டவர் எம் மனங்களில் நிறைந்த வண்ணம் எம்மை விட்டுப் பிரிந்தார். தனது சொத்து, சுகம், குடும்பம், உறவுகள் எல்லாவற்றையும் ஈழ விடுதலைக்காக அற்பணித்தவர் தோழர் ஸ்ராலின் அண்ணா. கும்பகோணத்தின் எப்பகுதியிலும் ஸ்ராலின் அண்ணா என்று அறியப்பட்ட ஆர்.பி. ஸ்ராலின் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கிய உந்து சக்தியாக தன்னை 1970 களின் ஆரம்பகாலத்திருந்து அறியப்பட்டவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வளர்ச்சியிலும், வெற்றிகளிலும் முக்கிய பங்காற்றியவர். ஈழவிடுதலை அமைப்புகளில் தோழர் நாபா வுடன் மிக நெருக்கமான தொடர்புகளையும் நம்பிக்கையும் வைத்திருந்தவர் தோழர் நாபாவின் மரணம் தோழர் ஸ்ராலின் அரசியல் செயற்பாட்டில் மாற்றங்களை கொண்டு வந்தாலும் தொடர்ந்தும் ஈழ மக்களின் விடிவிற்காக செயற்பட்ட அர்பணிப்புமிக்கவர். இவரின் மறைவால் துயறிற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் நண்பர்கள் தோழர்களின் துயரங்களில் நாமும் இணைந்து கொள்கின்றோம்.

பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 41)

பற்குணம் 1972 நடுப்பகுதி வரை குச்சவெளி டி.ஆர்.ஓ வாக இருந்தார்.பின்னர் அன்றைய அரசினால் ஒரு சில பிரதேசங்கள் உதவி அரசாங்க அதிபர் தரத்துக்கு உயர்தப்பட்டன.அதில் தம்பலகாமம் பிரதேசமும் ஒன்று.இந்த பிரதேசத்துக்கு பற்குணம் உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.இது மூதூர் தொகுதியில் உள்ள பிரதேசம் ஆகும்.இது இரட்டை அங்கத்தவர் கொண்ட தொகுதியாக இருந்தது.

(“பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 41)” தொடர்ந்து வாசிக்க…)

ஊடகத்துறை நண்பர்களுக்கு சிவா ஒரு பல்கலைக்கழகம்

தினகரனின் ஆசிரியர் பதவியை ஆளுமையினாலும் ஆற்றலினாலும் அலங்கரித்தவராக பேராசிரியர் கைலாசபதிக்குப் பின்னர் சிவாசுப்பிரமணியத்தை மாத்திரமே குறிப்பிட்டுக் கூற முடியும். பேராசிரியர் கைலாசபதியைப் போன்று பல்கலைக்கழகத்தில் கற்றுத் தேறி பாண்டித்தியம் பெற்ற கல்விமான் அல்ல சிவாசுப்பிரமணியம். ஆனாலும், ஊடகத்துறையில் மாத்திரமன்றி மும்மொழி ஆளுமை, சர்வதேச விவகார அறிவு, நிர்வாகத்திறன், இலக்கியத்துறை ஆற்றல் பேச்சுவன்மை என்றெல்லாம் சிவாசுப்பிரமணியத்தின் தனித்துவத்திறன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

(“ஊடகத்துறை நண்பர்களுக்கு சிவா ஒரு பல்கலைக்கழகம்” தொடர்ந்து வாசிக்க…)

கே.பிக்கு எதிரான மனு ஜுலை 25 இல் விசாரணை

கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கக் கோரி, ஜே.வி.பியினால் தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோரும் மனுவை ஜுலை 25 இல் விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (30) அறிவித்தது. இந்த மனு, நீதியரசர்களான கே. மலல்கொட மற்றும் பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கைத் தொடர வேண்டுமா அல்லது கைவிட வேண்டுமா எனத் தீர்மானிக்குமாறு, மனுதாரருக்கு நீதிமன்றம் பணித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில், குமரன் பத்மநாதனின் (கே.பி) இயக்க நடவடிக்கைகள் பற்றிய விசாரணை அறிக்கையின்; முன்னேற்றம் பற்றிய அறிக்கையை சட்டமா அதிபர், பெப்ரவரி 3 அன்று நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

‘காணி விவகாரத்தை வெள்ளிக்குள் முடிக்கவும்’ – ஜனாதிபதி

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பிலான காணிகளை இனம்காணும் செயற்பாடுகளை, 03ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் நிறைவுக்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடம்பெயந்துள்ள மக்களை மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவுறுத்தினார். இக்கலந்துரையாடலில், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, காணி அமைச்சின் செயலாளர் ஐ.எச்.கே மஹானாம, முப்படை அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிரிய அரச எதிர்ப்பு தலைமை பேச்சுவார்த்தையாளர் இராஜினாமா

சிரிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டு சிரிய அரச எதிர்ப்பு கூட்டணியின் தலைமை பேச்சுவார்த்தயாளர் முஹமது அல்லவுஷ் இராஜினாமா செய்துள்ளார். பேச்சுவார்த்தைகள் அரசியல் உடன்பாடொன்றையோ அல்லது சிரியாவின் முற்றுகைப் பகுதிகளில் தளர்வையோ ஏற்படுத்த தவறிவிட்டதாக உயர்மட்ட பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்தவரான அல்லவுஷ் குறிப்பிட்டுள்ளார்.

(“சிரிய அரச எதிர்ப்பு தலைமை பேச்சுவார்த்தையாளர் இராஜினாமா” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 40)

ஒரு நாள் நடுஇரவில் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து அய்யா, அய்யா எனக் கத்தி அழைத்தார்.அம்மாவும் நானும் எழுந்து கண்ணாடி துவாரத்தின் ஊடாகப் பார்த்தோம். துப்பாக்கியுடன் நிற்பதைக் கண்டு பயந்து மௌனமாக நின்றோம். பற்குணம் எழுந்து வந்தார்.அம்மா அவரைத் தடுத்தார்.அதற்குப் பற்குணம் “அம்மா, பயப்படவேண்டாம். என்னிடம் கோபம் கொண்டு வருபவன் அய்யா என அழைக்கமாட்டான்.
எனவே பயப்பட வேண்டாம்” என்றார். அப்போது அம்மா, “நான் கதவை திறக்கிறேன். நீ நில்.” என்றார். பற்குணம் சிரித்துக்கொண்டே சரி என்றார்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 40)” தொடர்ந்து வாசிக்க…)