‘இலங்கையில் மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை, 82-ஆக உயர்ந்துள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்’ என, இலங்கையில் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் நேற்று வரை மழை தொடர்ந்து பெய்துவந்த நிலையில், இன்னும் அதிகமான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும், பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முடிவுற்ற முள்ளிவாய்க்கால் மரணங்களின் 7 ஆண்டுப் பாதையில்……
(சாகரன்)
முள்ளிவாய்காலில் முடிவுற்ற யுத்தம் பொது மக்கள் பலரை இருதரப்பும் காவு கொண்டு முடிவுற்று 7 வருடங்கள் ஓடிவிட்டன. யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ஷ தன் தரப்பிற்கு நகரங்களை இணைக்கும் சாலைகளையும் நகர அபிவிருத்திகளையும் முக்கியமாக மையப்படுத்தி தனது செயற்பாட்டை செய்திருந்தார். யாரும் எவ்விடம் சென்று வரலாம் என்ற ஒரு நிலமையை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த மகிந்த செய்து முடித்துள்ள முக்கிய நிகழ்வாக மே 18 2009 அமைந்தது என்பது மறுக்க முடியாத யதார்த்தம். இதில் மகிந்த கூட்டும் அவர்களைச் சார்ந்தவர்களும் அபிவிருத்தியென்று ஒரு புறமும் தம்மை அபிவிருத்தியடைச் செய்தல் என்று மறபுறமும் இதனைக் கேள்விகளுக்குள் உள்படுத்தியவர்கள் அது சிங்களவர்களாக இருந்தாலும் கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கி போரை முடித்த போதிருந்த தமது ஆதரவுத் தளத்தை இழந்து வந்தனர்.
(“முடிவுற்ற முள்ளிவாய்க்கால் மரணங்களின் 7 ஆண்டுப் பாதையில்……” தொடர்ந்து வாசிக்க…)
மூன்று புத்தகங்களின் வெளியீடு
புத்தக வெளியீட்டில் மதிப்பீட்டுரை செய்கின்றார் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தோழர் ஜேம்ஸ்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சர்வதேச உதவிகள் குவிகின்றன: பலி 71 ஆக உயர்வு
மழை வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளால் கடும் பாதிப்புக்கு உள்ளான இ லங்கைக்கு இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் இருந்து உதவிப் பொருட்கள் குவிந்து வருகின்றன. இந்தியா சார்பில் நேற்று முன் தினம் ராணுவ விமானம் மூலம் அவசர தேவைக்கான நிவாரணப் பொருட்களுடன் மீட்புக் குழுவினர் கொழும்பு நகருக்கு அனுப்பப்பட்டனர். இரண்டு கடற்படை கப்பல் களும் அனுப்பப்பட்டுள்ளன.
புயலால் இலங்கைக்கு கடுமையான பாதிப்பு: நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட கொழும்பு நகர வீதி ஒன்றில் வழிந்தோடும் வெள்ளம்.
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட கொழும்பு நகர வீதி ஒன்றில் வழிந்தோடும் வெள்ளம். ரோனு புயலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைக்கு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களுடன் 2 கடற்படை கப்பல்கள் மற்றும் மீட்புக் குழுவினருடன் சி-17 விமானத்தை இந்தியா அனுப்பியுள்ளது.
(“புயலால் இலங்கைக்கு கடுமையான பாதிப்பு: நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா” தொடர்ந்து வாசிக்க…)
புலிகளின் தலைவர் பிரபாகரனை காட்டி கொடுத்தார் நளினி!
இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்ற நளினி முருகனால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் காட்டி கொடுக்கப்பட்டு உள்ளார் என்று பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய பிரபாகரன்தான் உத்தரவிட்டு இருந்தார் என்று பிரியங்காவுக்கு நளினி முருகன் தெரிவித்து இருக்கின்றார்.
(“புலிகளின் தலைவர் பிரபாகரனை காட்டி கொடுத்தார் நளினி!” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ்த் தேசிய ‘கோமாளி’ சீமான் கட்டுப்பணத்தை இழந்து தோல்வியடைந்தார்
இன்னும் ஐந்து வருடங்களுக்கு தம்மை ஆள்வதற்கு இன்னோரன்ன காரணங்களால் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட வாக்குகளின் பின்னர் நூற்றுக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் தவழ்ந்து சென்று அவரின் பாதங்களை தொட்டு வணங்கினர். இந்த வெற்றியின் பின்புலத்தில் வை.கோபாலசாமி குழுவின் பங்கு புதைந்திருப்பதை பலர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஈழப் பிரச்சனையை தமது அரசியல் வியாபாரத்திற்ககப் பயன்படுத்திவந்த சீமான், அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் படு தோல்வியடைந்தனர்.
(“தமிழ்த் தேசிய ‘கோமாளி’ சீமான் கட்டுப்பணத்தை இழந்து தோல்வியடைந்தார்” தொடர்ந்து வாசிக்க…)
அதிமுக ஆட்சி அமைவதற்கு பெரிதும் உதவிய தொகுதிகள் :-
24,383 ஓட்டுகள் தான் இந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமாக. அமைந்துவிட்டது…..
1) ராதாபுரம் – 49
2) கோவில்பட்டி – 428
3) கரூர் – 441
4) தென்காசி – 464
5) ஒட்டப்பிடாரம் – 493
6) பெரம்பூர் – 579
7) திருப்போரூர் – 950
8) பர்கூர் – 963
9) பேராவூரணி – 964
10) கிணத்துக்கடவு – 1332
11) ஆவடி – 1395
12) அரியலூர் – 1753
13) சிதம்பரம் – 1945
14) மொடக்குறிச்சி – 2222
15) விருகம்பாக்கம் – 2333
16) ஊத்தாங்கரை – 2613
17) கெங்கவள்ளி – 2622
18) அறந்தாங்கி – 2837
——————
18 + 98 = 116 திமுக
134 – 18 = 116
தமிழகத் தேர்தல்: மக்களுடன் இடதுசாரிகள் இரண்டறக் கலக்கவில்லையா?
கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டை என்று வர்ணிக்கப்படும், திருப்பூர் உள்ளிட்ட தொழிலாளர்கள் நிறைந்த மாநகரில் 6 கட்சிக் கூட்டணி அமைத்தும் இடதுசாரிகள் தோல்வி அடைந்திருப்பதும், வாக்கு வங்கி கடுமையாக சரிந்திருப்பதும் தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. திருப்பூரில் சமீபத்தில் தொழில் அமைப்புகளுடன் கையெழுத்தான தொழிலாளர்களின் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்தவை இடதுசாரிகளின் தொழிலாளர்கள் அமைப்புகள்தான். இதன்மூலமாக, சுமார் 3 லட்சம் பின்னலாடைத் தொழிலாளர்கள் பயனடைந்தனர்.
(“தமிழகத் தேர்தல்: மக்களுடன் இடதுசாரிகள் இரண்டறக் கலக்கவில்லையா?” தொடர்ந்து வாசிக்க…)