ஐரோம் சானு ஷர்மிளா தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்

இம்பால்: மணிப்பூரின், “இரும்பு பெண்’ என்று அழைக்கப்படும், ஐரோம் சானு ஷர்மிளா, தனது 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

(“ஐரோம் சானு ஷர்மிளா தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்” தொடர்ந்து வாசிக்க…)

‘தனிநாடு தேவையா எனக்கேட்டு அடித்தே கொன்றனர்’: பரபரப்புச் சாட்சியம்

நண்பரை, அடித்துக் கொலை செய்த சுன்னாகம் பொலிஸார், அந்தக் கொலையை தற்கொலையாக மாற்றி, மரணச் சான்றிதழ் வழங்கினர்’ என, சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சந்தேகநபர்கள், மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (25), பரபரப்புச் சாட்சியம் வழங்கியுள்ளனர். ‘உனக்கு தனி நாடு தேவையா?’ எனக்கூறி நண்பரை அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்த சந்தேகநபர்கள், நண்பனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் பொலிஸாரையும் அடையாளங்காட்டினர். அவர்கள் அடையாளம் காட்டிய அனைத்துப் பொலிஸாரையும் கைது செய்யுமாறு, நீதவான் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

(“‘தனிநாடு தேவையா எனக்கேட்டு அடித்தே கொன்றனர்’: பரபரப்புச் சாட்சியம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு நோட்டீஸ்

யாழ்ப்பாணம் பலகலைக்கழத்தில் கடந்த இரு வராங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதலுக்கு காரணமாக இருந்தார்கள் என்று கூறப்படும் மாணவர்கள் 7 பேருக்கு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறித்த மாணவர்கள் 7 பேரையும் எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்வரன் பிறப்பித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேருக்குப் பிணை

களனி பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 8 பேருக்கு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். மாணவியொருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு 75 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி பிரேமா ஸ்வர்ணாதிபதி, இந்த உத்தரவை, செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.

புரட்சியின் தோல்விக்குப் பின்னே…

(ரோஜர் கோஹன்)

துருக்கியில் நடந்த ராணுவப் புரட்சிக்கான முயற்சியைப் பார்க்கும்போது, அதில் பங்கேற்றவர்களின் இயலாமை தெரியவருகிறது. அரசியல் தலைவர்களைக் கைப்பற்றுவதற்கு அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தலைமை ஏற்க யாரும் தயாராக இல்லை. தகவல் தொடர்பில் எந்த வியூகமும் இல்லை என்பது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை. மேலும், ராணுவத்திலும் சமூகத்திலும் அரசுக்கு எதிரானவர்களைத் திரட்டுவதற்கான திறனும் இல்லை. மாறாக, துரதிர்ஷ்டம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட படைப்பிரிவு, இஸ்தான்புல்லின் ஒரு பாலத்தில் நின்றுகொண்டும், ஒருங்கிணைப்போ திட்டமோ இல்லாமல் தலைநகர் அங்காராவில் உள்ள சில அரசுக் கட்டிடங்களைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டும் இருந்தது.

(“புரட்சியின் தோல்விக்குப் பின்னே…” தொடர்ந்து வாசிக்க…)

தன் நவரச நடிப்பால் எம் மனதில் நிறைந்த மரிக்கார் ராமதாஸ்!

எழுபதுகளின் கால் பகுதியில் கொழும்பில் கல்லூரி படிப்பை தொடர்ந்த எனக்கு கிடைத்த சுதந்திரம் [ உறவினர் தொல்லையற்ற சுதந்திர வாழ்க்கை ] பல நண்பர்களின் உறவை பலப்படுத்திய போது, அறிமுகம் ஆனார் என்னுடன் கல்லூரி நாடக விழாக்களில் கலந்து எனது ‘’பைத்தியங்கள் பலவிதம்’’ எனும் நாடகத்தில் சைவ பைத்தியமாக நடித்த நவநீதன் நேமிநாதன். ஆம் அவர்தான் அன்றைய திருமலை பாராளுமன்ற உறுப்பினர் நேமினாதனின் ஒரே தவப்புதல்வன். என்னைவிட பல வயது இளையவன். அவன் என் வகுப்பு தோழன் அல்ல. உருவத்தில் மிக பருமனானவன். அன்று இளைஞர் பேரவை, ஈழவிடுதலை இயக்கம், ஈரோஸ், ஈ பி ஆர் எல் எப் என தன் பங்களிப்பை செய்த, இன்று அனைவராலும் மறக்கடிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும், ஒரு காலத்தில் கிளிவெட்டி தங்கத்துரை அண்ணனின் [ 1997ல் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட திருமலை பாராளுமன்ற உறுப்பினர் ] வலதுகரமாக செயல்ப்பட்ட தங்கமகேந்திரன் அவர்களை, மட்டக்களப்பில் அடித்து ஒய்ந்த சூறாவளி புனர்வாழ்வு வேலைத்திட்டத்தில் சந்தித்த போது, நான் கேட்ட கேள்விக்கு அவர் நகைச்சுவையாக ஒரு பதில் கூறினார்.

(“தன் நவரச நடிப்பால் எம் மனதில் நிறைந்த மரிக்கார் ராமதாஸ்!” தொடர்ந்து வாசிக்க…)

விஸ்வரூபம் எடுக்கும் “ரூ.570 கோடி”..

ரூ. 570 கோடி விவகாரத்தில் சிபிஐ புதிய தகவலை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலை மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குத்தான் பெரும் சிக்கல் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இவர்தான் ஸ்டேட் வங்கியின் பணம் இது என்று அடித்துக் கூறியுள்ளார். நாட்டின் முதன்மையான வங்கி இவ்வளவு பெரிய பணத்தை போலி பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற செயல் மிகப் பெரிய சந்தேகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ கூறியுள்ள புதிய தகவல்களைப் பார்த்தால் மேலும் மேலும் சந்தேகங்கள் கூடியபடியே உள்ளன.
பதிவெண்ணை பரிசோதிக்காதது ஏன்?

(“விஸ்வரூபம் எடுக்கும் “ரூ.570 கோடி”..” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைக் கழக தாக்குதலும் கதிர்காம கந்தனின் எதிர் ஒலியும்

(சாகரன்)

2009 மே மாத போரில் தோற்றது புலிகள் மட்டும் அல்ல நாமும்தான் என்ற உணர்வலைகளை தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அகற்றும் சகோரத்துவ செயற்பாடுகளை மகிந்த கூட்டமைப்போ அல்லது நல்லாட்சி மைதிரியினரோ செய்யவில்லை. இதனைச் செய்து முடிப்பதற்கான இராஜதந்திர அரசியல் செயற்பாடுகளை சம்மந்தர் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரன் பேரவையே செய்யவில்லை. இதற்கான உடன்பாடோ திறமையோ இவர்களிடம் இல்லை. ஏன் விருப்பமும் இல்லை. மகிந்தவுடன் இணைந்து இணக்க அரசியலைச் செய்தவர்களும் இன்றும் மைத்திரியுடன் இணக்க அரசியல் செய்ய வாய்பு இருககுதா என்பதற்கு அப்பால் பரந்து பட்ட கூட்டுத்தலமையை ஏற்படுத்துவதில் வெற்றியை பெறவில்லை. ஏன் இதற்கு அதிகம் முயற்சிக்கவில்லை என்றே கூறலாம்.

(“யாழ் பல்கலைக் கழக தாக்குதலும் கதிர்காம கந்தனின் எதிர் ஒலியும்” தொடர்ந்து வாசிக்க…)

யார் பைத்தியக்காரர், காந்தியா? சர்கோசியா?

ஃப்ரான்சில் சென்ற 14 அன்று பாஸ்டில் தினக் கொண்டாட்டத்தின்போது நடந்த பயக்கரவாதத் தாக்குதலில் (Nice attack) 84 பேர் கொல்லப்பட்டு 200 க்கும் மேற்பட்டோர் காயமடந்ததை ஒட்டி இன்று அங்கு நெருக்கடி அறிவிக்கட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெறித்தனமாக ட்ரக்கை ஓட்டிக் கொலைகளைச் செய்த நபர் அபோதே சுட்டுக்கொல்லப்ப ட்டான். மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த அரசும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும்தான்.

(“யார் பைத்தியக்காரர், காந்தியா? சர்கோசியா?” தொடர்ந்து வாசிக்க…)