தம்பலகாத்தில் எங்கெங்கு நில ஆக்கிரமிப்பு நடக்கும் என்று கருதிய இடங்களில் தமிழர்கள் பலருக்கு காணிகள் வழங்கி குடியேற வழிவகுத்தார்.மக்கள் தொகை குறைவும் விருப்பமின்மையும் அதிக முன்னேற்றம் தரவில்லை .ஆனால் இவைகளே பின்னாட்களில் ஓரளவு இனப்பிரச்சினைகளில் இருந்து தம்பலகாமம் பாதுகாக்கப்பட்டது.இதை பலர் நன்றியுணர்வோடு சொல்லியுள்ளனர்.
கண்டிய நடனம்தான் பிரச்சினையா?
(ப. தெய்வீகன்)
யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் இரண்டு பெரிய முகாம்கள் உள்ளன. அங்குள்ள பத்திரிகை நிறுவனமொன்று மற்றையது, யாழ். பல்கலைக்கழகம் என, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார். அமைச்சராக அவர் இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் சலுகைகளுக்கு விலைபோகாத யாழ். மக்கள், விடுதலைப்புலிகளின் பக்கமே தமது ஆதரவைத் தொடர்ந்தும் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தபோது, அது பற்றிக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அண்டிய வீதிகளில் கூட்டமாகப் பயணிப்போரை மறிக்கும் பொலிஸார், அவர்களை விசாரணை செய்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த சனிக்கிழமை (16) இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவி, விடுதிகளிலிருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் காலவரையின்றி மூடப்பட்டது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குழுவாக வீதியால் செல்பவர்களை மறித்து விசாரணை செய்யும் பொலிஸார், ஆள் அடையாளத்தையும், உரிய காரணங்களையும் நிரூபிக்கத் தவறுபவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து உறுதிப்படுத்திய பின்னர் விடுவிக்கின்றனர்.
‘பல்கலைக்கழகம் ஒரு தேசிய நிறுவனமாகும்’
“யுத்தம் முடிவடைந்தும் இன்னும் வடக்கு மக்களது நெஞ்சங்களில் அன்பு, கருணை, இரக்கம், ஐக்கியம் எழவில்லை. இன்னும் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற நிலையிலேயே உள்ளனர். இந்த மனோநிலையை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்” என ஜாதிக ஹெல உறுமயவின் அமைப்பாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.
(“‘பல்கலைக்கழகம் ஒரு தேசிய நிறுவனமாகும்’” தொடர்ந்து வாசிக்க…)
இன்னோர் ஜுலை கலவரம்
ஒவ்வோர் கால கட்டத்திலும் இனக் கலவரங்கள் நடந்த பொழுதிலும்….வடமாகாணத்தில் பரம்பரையாக பேக்கரி நடாத்திய சிங்களவர் ஒருவரேனும் 1983க்குப் பின்புவாழ அனுமதிக்கப்படாத நிலையிலும் வடமாகாணத் தமிழர்கள் இலங்கை முழுக்க தமது அரச தொழிலையும் வர்த்தகத்தையும் நடாத்தி வந்தார்கள்.
வவுனியாவில் சம்மந்தன் ‘துாக்கிலடப்பட்டார்’
வவுனியாவில் செருப்பு மாலை அணிவித்து சம்மந்தன் துாக்கிலடப்பட்டார் . தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படும் இரா.சம்பந்தன், வவுனியாவுக்கு இன்று (16.07.2016) வருகை தந்திருந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘செருப்பு மாலை’ அணிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற – மாகாணசபைகளின் உறுப்பினர்களை, வவுனியா 02ம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதியில் சம்பந்தன் இன்று சந்தித்திருந்தார்.
இந்தநிலையில் ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதிக்கு முன்பாக மின்சார கம்பத்தில் சம்பந்தனின் உருவம் அச்சிடப்பட்ட பொம்மை காட்சிப்படுத்தப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. ‘தாண்டிக்குளத்துக்கு வாக்கெடுப்பு நடத்தும் உனக்கு, சர்வதேச விசாரணையா? உள்நாட்டு விசாரணையா? என்று தமிழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த தலைமைத்துவ தகுதி உண்டா? என்று கேள்வியெழுப்பி பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட ‘யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்’ தொடர்பாக இலங்கை அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படும் உள்நாட்டுப் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்த மாட்டோம் என்று சம்பந்தன், ரிவிர சிங்கள ஊடகத்துக்கு கருத்து கூறிய பின்னர் அவர் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த எதிர்ப்பு மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் 68 ஆயிரம் மக்களை கொன்ற நாடு ஜனநாயக நாடா? – அருந்ததி ராய் ஆவேசம்!
டெல்லியில் காஷ்மீருக்கு சுதந்திரம் தான் ஒரே வழி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார். அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய், என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுதே எறிந்து கொள்ளுங்கள் எனக் கூறியவாறு தனது உரையைத் தொடங்கினார். காஷ்மீரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தை இந்திய காலனி ஆதிக்கம் பிடித்துக் கொண்டது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அல்ல.
(“காஷ்மீரில் 68 ஆயிரம் மக்களை கொன்ற நாடு ஜனநாயக நாடா? – அருந்ததி ராய் ஆவேசம்!” தொடர்ந்து வாசிக்க…)
ஆரம்பப் போராளிகளில் ஒருவரான சங்கானைச் சந்திரமோகன் காலமாகிவிட்டார்
எங்களோடு தமிழ் இளைஞர் பேரவை , ஆரம்பகாலத் .தமிழ் ஈழ விடுதலை இயக்கம் [TLO…-Tamil Liberation Organisasion. ] ஆகியவற்றில் இயங்கிய ஆரம்பப் போராளிகளில் ஒருவரான சங்கானைச் சந்திரமோகன் காலமாகிவிட்டார் என்ற துயரச் செய்தியை இப்போதுதான் கேள்விப்பட்டு மிகவும் கவலை கொண்டேன்….
அதிர்ந்து அதிகம் பேசாத நுட்பமான புத்திகொண்ட இவர் தனது அதிபுத்திசாலித்தனத்தால் மிகவும் குறைந்த வயதிலேயே, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் [TLO ] ஐந்து பேர் கொண்ட தலைமைக் குழுவில் ஒருவராக இடம் பெற்றார். [முத்துக்குமார சுவாமி, புஷ்பராஜா ,வரதராஜப்பெருமாள், தங்கமகேந்திரன் ஆகியோர் ஏனைய நால்வருமாவர்.]
(“ஆரம்பப் போராளிகளில் ஒருவரான சங்கானைச் சந்திரமோகன் காலமாகிவிட்டார்” தொடர்ந்து வாசிக்க…)
துருக்கி: அவலத்துக்கும் அராஜகத்துக்கும் இடையில்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையே களவுகொடுத்த கதைகள் பல. உலக அரசியல் சதுரங்கத்தில் ஒரு தரப்பு மட்டும் காய் நகர்த்துவதில்லை. எல்லாத் தரப்புகளும் காய் நகர்த்தும். பலர் இதைத் தம் இறுமாப்பால் மறக்கிறார்கள். அம் மறதியின் விலை ஆட்சியதிகாரத்தையே அசைக்க வல்லது. நீதி, நியாயம், நட்பு என எல்லாவற்றையும் தாண்டி நிலைப்பதற்கான போராட்டம் முக்கியம் பெறுவதால், ‘நேற்று வரை அண்ணன் தம்பி, இன்று நீ யாரோ நான் யாரோ’ என்பதே உலக அரசியல் அரங்கில் தாரக மந்திரமாயுள்ளது.
(“துருக்கி: அவலத்துக்கும் அராஜகத்துக்கும் இடையில்” தொடர்ந்து வாசிக்க…)
கேட்டது என்ன? நீங்கள் கொண்டு வந்தது என்ன?’
வட்டுவாகலில் சரணடைந்தோர் விவரத்துக்குப் பதிலாக புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கொண்டு வந்த முல்லைத்தீவு 58ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தனவை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் கோபமடைந்து ஏசினார். இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) உள்ளிட்ட 05 பேரின் உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, இன்று வியாழக்கிழமை (14) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
(“கேட்டது என்ன? நீங்கள் கொண்டு வந்தது என்ன?’” தொடர்ந்து வாசிக்க…)