வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையத்தை ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்பது தொடர்பிலான சர்ச்சை கடந்த சில வாரங்களாக மேலெழுந்திருந்தது. சர்ச்சைகள் இன்றி உள்ளக பேச்சுக்களினூடாக இறுதி முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டிய விடயமொன்றினை வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சர்ச்சையாக மாற்றிவிட்டிருக்கின்றார்கள். அது, மக்களிடையே குறிப்பிட்டளவான குழப்பங்களையும் குரோதங்களையும் ஏற்படுத்தக் காரணமாகி விட்டது.
உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க’சி.விக்கு தகுதியில்லை’
‘உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு தகுதியும் இல்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் மாகாண சபை அதிகாரத்தில் இல்லை’ என ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்மின் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர், இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த மற்றுமோர் ஓய்வுபெற்ற அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தவும், அந்த அறிக்கையின் பிரகாரம் நிதி நிர்வாக நடவடிக்கைகள் முன்மொழியப்படும் என்பது தொடர்பில் பிரேரணையொன்றை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சார்பில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சபையில் நேற்றுக் கொண்டு வந்தார்.
(“உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க’சி.விக்கு தகுதியில்லை’” தொடர்ந்து வாசிக்க…)
யுத்தத்தின் போது, இராணுவத்தினருக்கு தமிழர்கள் இலக்கு அல்ல
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, புலிகள் அமைப்பினரால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான மனிதாபிமானப் போரையே படையினர் மேற்கொண்டிருந்தனர். தவிர, பொதுமக்களைக் கொன்றுதான் வெற்றிபெற வேண்டுமென்ற கொள்கையைப் படையினர் கொண்டிருக்கவில்லை என்று அரசாங்கம், நேற்று அறிவித்தது.
(“யுத்தத்தின் போது, இராணுவத்தினருக்கு தமிழர்கள் இலக்கு அல்ல” தொடர்ந்து வாசிக்க…)
பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 50 )
எனக்கு இரண்டு வயதில் பற்குணம் பல்கலைக்கழகம் சென்றுவிட்டார்.இதன் காரணமாக நான் அவரோடு சேர்ந்து வாழ்ந்த நாட்கள் குறைவு. ஆனாலும் அவரே எனக்கு மிகப் பிடித்த அண்ணனாக இருந்தார்.நான் குழப்படி காரப் பிள்ளை.குழப்படியை நமது சமூகம் ஒழுக்கக் குறைவாகவே கருதியது.ஆனால் பற்குணம் அப்படியான குழந்தைகளை,சிறுவர்களை செயற்திறன் மிக்க பிள்ளைகளாகவே கருதினார்.எனவே அவர் என் குழப்படிகள் பற்றி கவலை கொள்ளவில்லை.மேலும் என்னைச் சீண்டி ஒருமையான வார்த்தைகளால் என்னிடம் பேச்சு வாங்குவார்.இதுவும் என்னையும் அவரையும் நன்கு இணைக்க காரணமானது எனலாம்.
விற்றுப் பிழைத்தல்
(முகம்மது தம்பி மரைக்கார்)
முஸ்லிம் சமூகம் தமக்கென்று ஓர் அரசியல் கட்சியாவது இருக்க வேண்டும் என விரும்புகிறது. அந்தக் கட்சியானது, தமக்காகக் குரல் கொடுக்கும் என்று அந்தச் சமூகம் அப்பாவித்தனமாக நம்புகிறது. இந்த நிலையில், முஸ்லிம் சமூகம் – ஆசைப்பட்டதை விடவும் அதிகமாகவே, அவர்களுக்குள் அரசியல் கட்சிகள் உருவாகி விட்டன. இருந்தபோதும், முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை – ஜனநாயக வழியில் போராடிப் பெற்றுக் கொள்வதற்கென்று உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், தமது மக்களின் நலன்களை விற்றுப் பிழைத்து, வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது கசப்பான உண்மையாகும்.
பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 49 )
திருகோணமலையில் இருந்து கண்டி வீதி வழியாக செல்லும் அனைத்து நீண்ட தூர பஸ்கள் யாவும் தம்பலகாமம் வழியாக கிண்ணியா வந்தே போகவேண்டும்.இது கண்டி வீதியில் இருந்து உள்ளே பத்து மைல்வரை தம்பலகாமம் ஊடாக சென்று அதே வழியாக திரும்பி கண்டி வீதிக்கு வந்து செல்ல வேண்டும்.இது நீண்ட தூர பிரயாணிகளுக்கு மன உளைச்சல் கொடுக்கும் விசயம்.ஆனால் மஜீத் இதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை.தான் நினைத்த படி நடக்கவேண்டும்.இதுவே அவரின் பலவீனம்.
இதை சொல்வதற்காக பற்குணத்தின் அலுவலகம் வந்தார்.அப்போது பற்குணம் ஏன் சேர் கிண்ணியாவுக்கு பாலம் போட்டால் இந்த அலைச்சல் இல்லையே எனக் கேட்டார். அதற்கு மஜீத் என்னால் பாலம் போட முடியும்.அப்படிப் போட்டால் சிங்கள மக்கள் கிண்ணியாவிலும் அதை அண்மித்த பகுதிகளிலும் குடியேறுவதை என்னால் தடுக்க முடியாது.ஏற்கனவே விமானப்படை,கடற்படைத் தளங்கள் உள்ளன.எனவே இலகுவில் குடியேறிவிடுவார்கள்.ஆகவேதான் நான் பாலம் அமைப்பதை விரும்பவில்லை என்றார்.
மஜீத்தைப் பொறுத்தவரை அவரின் சேவையை மதித்த பற்குணம் அவரின் அடாவடித்தனங்களையே வெறுத்தார்.இதன் காரணமாக மகறூப் அவர்களை தேர்தலில் போட்டியிட தூண்டியவரகளில் பற்குணமும் ஒருவர்.
மஜீத் பற்றிய உண்மையான நகைச்சுவை கதை இது
அவர் தகவல் ஒலிபரப்பு பிரதி அமைச்சராக இருந்தவர்.ஒரு தடவை அவரது பிரதானமைச்சர் மூன்று நாள் வெளிநாடு பயணம் சென்றார். அதனால் அந்த மூன்று நாட்களும் இவர் தகவல் ஒலிபரப்பு அமைச்சராக பொறுப்பேற்றார். அதற்காக கிண்ணியாவில் சிலர் பாராட்டு விழா எடுத்தார்கள்.இதைத் தொடர்ந்து பலரும் விழா எடுத்தார்கள். ஆனால் மூன்று நாட்களில் அந்த அமைச்சர் நாடு திரும்பிவிட்டார். பாராட்டு விழாக்களோ வருடங்களாக தொடர்ந்தது.
முட்டாள்தனமாக அந்த மக்களால் எடுக்கப்பட்ட அந்த பாராட்டு விழாக்களில் மஜீத் அவர்களும் கலந்துகொண்டார் .இது எப்படி
(Vijaya Baskaran)
நேற்று பிரித்தானியா; இன்று அவுஸ்திரேலியா
(ப. தெய்வீகன்)
பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையை தொடர்ந்து உலகெங்கும் பாரிய பொருளாதார அதிர்வுகள் பரவும் என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. இதன் பின்னணியில், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இரட்டை தேர்தலானது மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது. பிரித்தானிய விடயங்களில் இருந்த முற்றிலும் வேறுபட்ட காரணங்களினால் குழப்பநிலையில் காணப்பட்ட அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்ற அதிகார சமநிலையை நேர் சீராக்குவதற்காக இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடைபெற்று எட்டு நாட்களாக ஒரு முடிவை காணமுடியாமல் தேர்தல் திணைக்களம் திணறிக்கொண்டிருந்தது.
(“நேற்று பிரித்தானியா; இன்று அவுஸ்திரேலியா” தொடர்ந்து வாசிக்க…)
நாமல், முஸம்மில் ஒரே சிறை பிரிவில்
பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை (11) முற்பகல் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் ஈ பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதே ஈ பிரிவில், தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த பிரிவில் சுமார் 20 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவருக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
70 மில்லியன் ரூபாயினை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் பணச் சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். தனது மகனான நாமல் ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து நேற்று திங்கட்கிழமை (11) இரவு பார்வையிட்டார்.
கரும்புலிகள் தின [மாறுபட்ட] பார்வை!
கரும்புலிகள் தினம் வருடம் தோறும் நெகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் வேளை, அதனை இகழ்ச்சியுடன் பார்க்கும் நிலையும் இன்றுவரை தொடர்கின்றது. காரணம் ஈழ விடுதலையில் தங்களை ஆகுருதியாக்க தாம் அறிந்த, விரும்பிய போராட்ட இயக்கங்களில் இணைந்த எண்ணற்ற இளம் குருத்துக்கள் பிரபாகரனின் பரநோய்ட் [Paranoid] எனும் மனநோய் காரணமாக அவர் கட்டளைப்படி கொன்று குதறப்பட்டமை. தன்னை சுற்றி இருப்பவரால் கூட தனக்கு ஆபத்து நேரலாம் என்ற அவரின் மனப்பயம் ஏனைய இயக்க போராளிகளையும், அவ்வாறே நோக்கச் செய்தன் விளைவுதான், வடமராச்சி மண்ணில் ஆக்கிரமிப்பு ராணுவம் காலடி பதித்தமை.
வவுனியாவில் நடைபெறவுள்ள, “புளொட்டின்” 27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்.. (அறிவித்தல்)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் எதிர்வரும் 13ம்திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை வரையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக “புளொட்” அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. 27ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகளாக எதிர்வரும் 13ஆம் திகதி வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் மௌன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது. இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். வீரமக்கள் தினத்தின் இறுதிநாளான 16ம்திகதி அன்று செயலதிபர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்படுவதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.
தகவல்.. “புளொட்” ஊடகப்பிரிவு.