சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள இனக்கலப்பு திருமணம்?

கலப்புத் திருமணத்தின் மூலம், உண்மையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று, வட மாகாண ஆளுனராகப் பொறுப்பேற்ற ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலில் தமிழ் மக்களின் உரிமைகளைக் கொடுங்கள் பின்னர், கலப்புத் திருமணம் பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று பதிலடி கொடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, சாதி, சமயம், இனம் என்ற தனித்துவம் பாராமல், கலப்பு வாழ்க்கை மூலமாக நாட்டில் உண்மையான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும் என்று கூறியிருந்தார்.

(“சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள இனக்கலப்பு திருமணம்?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்கள் தொடர்ந்தும் பகடைக்காய்களா?

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக நாட்டு மக்களுடன் கலந்தாலோசனை செய்து நல்லிணக்க பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுள்ள செயற்றிட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நீதி வழங்குவது என்றும் அவற்றை அடையும் வழிகள் குறித்தும் நாட்டு மக்களிடம் பரந்துபட்ட கருத்துக்களை கேட்டறிவதும்தான் இந்த செயற்றிட்டத்தின் நோக்கம் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இணையமொன்றை ஆரம்பித்துப் பேசிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்த நடவடிக்கையானது சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் செயலென்றோ வெறுமனே ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றோ எண்ணவேண்டாம் என்றும் தமது அரசு இதயசுத்தியுடன் இந்த செயற்பட்டில் இறங்கியிருப்பதாக கூறியிருக்கிறார்.

(“தமிழர்கள் தொடர்ந்தும் பகடைக்காய்களா?” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் நேற்று 4 பாகை செல்சியசால் எகிறிய வெப்பநிலை!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாக மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். வழக்கத்தை விடவும் 4பாகை செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை காணப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வழமையை விடவும் அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம், மட்டக்களப்பு, குருநாகல், மகாஇலுப்பல்லம, புத்தளம், இரத்மலான, வவுனியா ஆகிய பகுதிகளில் வழமையை விட 2 பாகை செல்சியஸ் அதிகமான வெப்பநிலை பதிவானது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும், வழக்கத்தை விட சற்று அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டை, கட்டுகஸ்தோட்டை, மன்னார், மற்றும் திருகோணமலையில் வழக்கத்தை விடவும், 3 பாகை செல்சியஸ் அதிகமான வெப்ப நிலை காணப்பட்டது. இதனைவிட இரவு நேர வெப்பநிலையும் வழக்கத்தை விட சுமார் 2, 3 பாகை செல்சியஸ் அதிகமாகவே காணப்பட்டதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நேற்றைய தினம் வெளியில் நடமாட முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க PTIயை கையில் எடுங்கள்!

இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் வேறு கைதிகளுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொது மன்னிப்பளித்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமை மேலும் மோசமடையும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளார். இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை (22) ஊடகங்களுக்குக்கு அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘சில தமிழ் அரசியல்வாதிகள் வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைய, தமக்கு விடுதலை கிடைக்குமென நம்பி, முன்பு இரு தடவைகள் தங்களது உண்ணாவிரதத்தைக் கைவிட்ட தமிழ் அரசியல் கைதிகள், மீண்டும் தமது உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

(“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க PTIயை கையில் எடுங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மலையக தமிழர்களை அரசுக்கு எதிராக திருப்பிய ‘ரோ’ [RAW] ?!

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, மலையகத் தமிழர்களின் வாக்குகளை திசைதிருப்பி விட்டது இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’ தான் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ”அதிபர் தேர்தலில் நாங்கள் தோல்வியை எதிர்பார்க்கவில்லை. இந்தியாவுடன் சில பிரச்சினைகள் இருந்தது எமக்குத் தெரியும். ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது.காலி கலந்துரையாடலில், முக்கிய உரையாற்றுவதற்காக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை அழைத்திருந்தோம். இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’, ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக பணியாற்றுகிறது என்று அவரிடம் நான் கூறியிருந்தேன். எப்படி இது நடக்கிறது என்று அவரிடம் கேட்டேன். அதிபர் ராஜபக்ச தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அவர் கூறினார்.

(“மலையக தமிழர்களை அரசுக்கு எதிராக திருப்பிய ‘ரோ’ [RAW] ?!” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்தவின் வயிற்­றி­லுள்ள குழந்தை வெளிச்­சத்தை பார்க்காது!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ முடி­யு­மானால் புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பித்துக் காட்­டட்டும். வயிற்­றி­லுள்ள குழந்தை வெளிச்­சத்தை காணாது என்­பது போலவே மஹிந்­தவின் புதிய கட்சி மந்­திரம் அமைந்­துள்­ளது. எனினும், அடுத்த தேர்­தலில் அன்னம் சின்­னத்தில் அல்ல. அதற்கு மாறாக யானையின் வாலில் கோட்­டாலும் ஐக்­கிய தேசியக் கட்­சியே வெற்­றிப்­பெறும் என்று அக் கட்சியின் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார தெரி­வித்தார். புதிய கட்சி என்ற பீதியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஏற்­ப­டுத்தி ஊழல் மோச­டிக்­கா­ரர்­களை பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் இவ்­வா­றான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு ஜனா­தி­பதி அஞ்­ச­மாட்டார்.

(“மகிந்தவின் வயிற்­றி­லுள்ள குழந்தை வெளிச்­சத்தை பார்க்காது!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 6)

நவரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்டதை சாக்காக வைத்து பொலிஸ் நமது ஊருக்குள் புகுந்தது.இக் கொலையில் மாணிக்கம் இராசன்,சின்னத்தம்பி செல்லத்துரை ,நல்லையா ஆறுமுகம்,சோலையன் செல்லப்பா ஆகியோரை குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். அன்று பல சட்டத்தரணிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தனர்.யாரும் உதவ முன்வரவில்லை .தமிழரசுக்கட்சி,தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவை இதில் ஒன்றாக நின்றன.முன்னாள் பனம் பொருள் அபிவிருத்திச் சபை தலைவர் நடராசா சாவகச்சேரி பா.உ. வி.என.நவரத்தினத்தின் பரம விசுவாசி.அவரும் நவரத்தினம் மூலமாக ஒழுங்கு செய்வதாக கூறுனார்.எதுவும் நடக்கவில்லை.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 6)” தொடர்ந்து வாசிக்க…)

ஹரிஸ்ணவிக்கு பட்டப்பகலில் வீடு புகுந்து நடந்த கொடூரம்! அதிபர் மௌனம்?

‘ஹரிஸ்ணவி, ஹரிஸ்ணவி என்று அழைத்தவாறு கேற்றை திறந்து உள்ளே சென்று கதவை திறந்தபோது அந்த தாய் ஒரு நிமிடம் ஆடிப்போய் அம்மா ஏன் இப்படி செய்தாய், என்ன நடந்தது என அலறினாள். அந்த தாயின் வலியின் குரல்கள் கேட்டு அக்கம் பக்கம் எல்லாம் ஓடிவந்தது. கட்டிலில் தனது மகளை படுக்க வைத்து தாய் கண்ணீர் மழை பொழிந்து கொண்டிருந்தாள். அன்று அந்த தாய்… இன்று வவுனியாவே சோகத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன? யார் இந்த ஹரிஸ்ணவி? அவருக்கு என்ன நடந்தது? கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்கிழமையும் வழமை போலவே விடிந்தது. பாடசாலைக்கு சென்ற மாணவர்கள ஒருபுறம். வேலைக்கு சென்ற உத்தியோகத்தர்கள் மறுபுறம் என வழமை போலவே அந்த காலை சுறுசுறுப்பக இயங்கியது.

(“ஹரிஸ்ணவிக்கு பட்டப்பகலில் வீடு புகுந்து நடந்த கொடூரம்! அதிபர் மௌனம்?” தொடர்ந்து வாசிக்க…)

எமது பிள்ளைக்கு நடக்காது, என்பதற்கு என்ன உத்தரவாதம்? அனைவரும் அணி திரள்வோம்!

‘யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. எனக்கென்ன?’ என்று சிந்திக்கும் சுயநலப்போக்கும், தனது வீட்டு முற்றம் வரைக்கும் பிரச்சினை தேடிவரும் வரைக்கும் காத்திருக்கும் மனோநிலையுமே கூட்டு வன்புணர்வு படுகொலைகளுக்கு மூலகாரணிகள் என்று ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும்’, ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களின் குடும்பங்களும்’ தமிழ் சமுகத்தை கடுமையாக சாடியுள்ளன. சரண்யா, வித்தியா, சேயா, கரிஸ்ணவிகளுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை ‘நாளை எனது வீட்டு பெண் பிள்ளைக்கு நடக்காது, என்பதற்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு?’ என்பதை சிந்தித்து ஒவ்வொரு குடும்பமும் (பிரஜையும்) கலக்கத்தோடும் – விழிப்புணர்வோடும் சமுக அநீகளுக்கு எதிராக, பெரும் மக்கள் கூட்டமாக – கூட்டுக்குடும்பமாக வீதியில் இறங்கிப்போராட வரவேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மாணவி கரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு வவுனியா மாவட்டத்தில் 23.02.2016 அன்று நடைபெறவுள்ள கவனவீர்ப்பு அழுத்த போராட்டத்துக்கும், மறுநாள் 24.02.2016 அன்று இடம்பெறவுள்ள இயல்புநிலையை முடக்கும் முழுஅடைப்பு கர்த்தாலுக்கும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்து அவர்கள் விடுத்துள்ள கூட்டு ஊடக அறிக்கையிலேயே மேலேகுறித்தவாறு தெரிவித்துள்ளனர்.

(“எமது பிள்ளைக்கு நடக்காது, என்பதற்கு என்ன உத்தரவாதம்? அனைவரும் அணி திரள்வோம்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டம்!

கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் செவ்வாய்க்கிழமை (23-02-2016) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியிலிருந்து தாம் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றோம் எனவும், உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் திங்கள் (22-02-2016) தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், கொழும்பு – மகஸின் சிறைச்சாலையின் ‘ஜே’ பிரிவில் உள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவில் உள்ள ஒரு பெண் தமிழ் அரசியல் கைதியுமாக 15 பேர் 23-02-2016 செவ்வாய்க்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர்.

 

இது தொடர்பான அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை, எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கொண்டுவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.