இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடந்த போராட்டங்கள் வெறும் போராட்டங்கள் என்ற வரையறைக்குள் அடங்கி விடக் கூடியன அல்ல. போராட்டங்கள் போர்களாகவும் நடந்தன. போர்கள் என்றாலே இடங்கள் பறிபோவதும், அவ்விடங்களில் வாழ்ந்தவர்கள் இடம் பெயர்ந்து வேற்றிடம் தேடிப் பயணம் செய்ய நேர்வதும் தவிர்க்க முடியாதவை. ஈழப் போராட்டத்திலும் யுத்தங்களிலும் அதுதான் நடந்தன. இழப்பதற்கு எதுவுமில்லாதவர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது இயன்றவர்கள் வெளியேறி பூமிப் பந்தின் பல பாகங்களுக்கும் சென்றனர். யுத்தத்தின் காரணமாய் மரணத்துள் வாழ நேர்ந்தவர்கள் அகதிகளாய் அலைய நேரிட்டதையும் பதிவுகளாக்கித் தந்துள்ளார்கள்.
தொப்புள் கொடி உறவுகள்
நான் இலங்கைத் தமிழன். இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவன். ஆனால் இலங்கையர்கள் அனைவருக்கும் இந்தியாதான் “மூதாதையர்கள் நாடு “. நாங்கள் பேசும் தமிழ் பல தமிழ் நாட்டவர்களுக்குப் புரிவதில்லை. சைமன் நாடாரே ஒரு முறை இலங்கைத் தமிழன் தமிழில் பேசியதை மொழி பெயர்க்கும்படி கேட்டான். அடுத்து விவாஹ முறைகள் கேரளத்துடனேயே ஒத்துப் போகின்றன. உணவுகளும் அப்படியே. ஆனால் இலங்கையில் தமிழும் சிங்களமும் கட்டாய பாட மொழிகள். இரண்டில் ஒன்றில்த்தான் படிக்க வேண்டும். தமிழ் நாட்டில் அப்படியல்ல. தமிழ் நாட்டுப் பத்திரிகைகள், சினிமா என்பனவற்றையே படிக்கிறோம் பார்க்கிறோம். ஆனால் யாரும் சொல்லாத ஒரு முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது. கள்ளக் கடத்தல் வியாபாரம். இலங்கைக் கள்ளக் கடத்தல் கும்பல்களுக்கு தமிழ் நாட்டில் வைப்பாட்டிகள் உண்டு. பலதசாப்தமாக நடை பெறும் கள்ளக் கடத்தல் வியாபாரமே இலங்கை அரசுடன் மோதல்களை உண்டாக்கின.
புலிகளிடம் இருந்து தப்பியவர் சாகும்வரை உண்ணாவிரதம்
விடுதலை புலிகளினால் 290 பொலிஸார் கொல்லப்பட்ட திருக்கோவில் ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில், அந்தசம்பவத்துக்கு முகங்கொடுத்து அதிலிருந்து தப்பிவந்த பொலிஸ் சார்ஜன், தனது மனைவி பிள்ளைகள் மூவருடன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலை 9 மணியிலிருந்து ஈடுபட்டுள்ளார். மனோஜ் பிரியந்த சிறிவர்தன எனும் பெயர் கொண்ட இந்த அதிகாரி 1990ஆம் ஆண்டு கல்முனை பொலிஸில் சேவையாற்றியவர் ஆவார்.
(“புலிகளிடம் இருந்து தப்பியவர் சாகும்வரை உண்ணாவிரதம்” தொடர்ந்து வாசிக்க…)
பிரான்ஸ் இல் தியாகிகள் தினம்
கனடாவில் பத்மநாபா மக்கள் முன்னணியின் தியாகிகள் தினம் 2016
பிரஞ்சுகாரன் கூறும்? இவ்வளவும் இருந்தும் ஏன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டார்கள்….?
வன்னியில் பிரபாகரன் என்ன செய்தார் – உறங்கும் உண்மைகள்
ஒன்று சொல்லட்டுமா? புலம்பெயர் மக்களின் மனங்களில் இருந்து எவரேனும் பிரபாகரனை அகற்ற நினைத்தால்,முதலில்,
ஐரோப்பாவைத்தான் அழிக்க வேண்டும்! விடுதலைப் புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை! “ பிரபாகரன் செய்த தவறுகள்” பற்றி அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்! அந்த உரையாடலில் இடையிலே, நான் பின்வருமாறு அவருக்கு சொன்னேன்! “ நாங்கள் பிரபாகரனை மறந்துவிட்டு, அமைதியாக வாழ தயாராக இருக்கிறோம்! ஆனால் உங்கள் நாடு, எங்களுக்குப் பிரபாகரனை மறுபடியும் மறுபடியும் நினைவூட்டுகிறது” என்று!
இவர்கள் அந்நியர்கள் இல்லை! எம்மவர்கள்! இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம்!
தமிழினியின் கூர்வாளிற்கு நிலாந்தனின் கருத்துரையும் பதிலுரைகளும்
நிலாந்தன் ஒரு சுயாதீனமான ஆய்வாளர் அல்ல. அவர் ஆங்கிலத்தில் வாசித்து உலக அளவில் சிந்திக்ககூடியவரும் பகுப்பாய்வு செய்யக்கூடிய மதிநுட்பமுடையவரும் ஆனாலும் ஆய்வாளருக்குரிய மிகமுக்கியமான அடிப்படைத்தகுதிகளிலொன்றான ” காய்தல் உவத்தலின்றி எக்கசப்பான சொல்லக்கடினமான உண்மைகளை வெளிப்படுத்தல் என்பதில்” அவர் குறைபாடுடையவராக காணப்படுகிறார்.அதாவது உண்மையைச்சொல்வதைவிட தமிழ் சமூகத்தின் ஒரு சிறுபான்மையான பகுதியொன்று (minority special interest group/ Diaspora Wellalar & associate castes)கேட்கவிரும்புகின்ற உண்மைகளையே எழுதவிரும்புகிறார். அவரது கட்டுரைகளிலிருந்து பல உதாரணங்களை இதற்கு காட்ட முடியும் எனினும் பின்வரும் அவரது அவதானங்களிலிருந்து இவ்விவாதத்தை தொடரலாம்.
(“தமிழினியின் கூர்வாளிற்கு நிலாந்தனின் கருத்துரையும் பதிலுரைகளும்” தொடர்ந்து வாசிக்க…)
மாற்றங்களுக்கு வாய்ப்பு இல்லாததால் ஈ.பி.டி.பியிலிருந்து விலகினேன் – முன்னாள் எம்.பி சந்திரகுமார்-
கடந்த 05.06.2016 அன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியான நேர்காணல்
கேள்வி – ஈ.பி.டி.பி. ஐ ஆரம்பித்து அதனைப் பதிவு செய்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்படியிருந்தும் கட்சித் தலைமையுடன் உருவாகிய பிரச்சினைகளை உங்களால் ஏன் பேசித் தீர்க்க முடியவில்லை?
பதில் – எமது மக்களுடைய உரிமைகளுக்கான விடுதலைப்போராட்டத்தில் 1980 களின் ஆரம்பத்தில் இணைந்ததிலிருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த முப்பது ஆண்டுகளிலும் எமது போராட்டமும் இலங்கை மற்றும் சர்வதேச அரசியற் போக்குகளும் பாரிய மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் ஒரு காலகட்டத்தின் தேவையாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை உருவாக்க வேண்டியிருந்தது.
ஏறாவூர் மக்கள் மீதான புலிகளின் 1990 ஆகஸ்து படுகொலைகள்
ஏறாவூர் மக்கள் மீதான புலிகளின் 1990 ஆகஸ்து படுகொலைகள் .நடந்தபோது முன்னாள் ஒரு தமிழ் இயக்கத்தின் உறுப்பினராகவும் பின்னர் தமது தவறை உணர்ந்து அதிலிருந்து விலகி ஏறாவூர் கிராமத்தின் பாதுகாப்பு குறித்து அதீத அக்கறையுயுடன் செயற்பட்ட வாலிபனான ஜலால்தீன் 12 ம் திகதி அதிகாலையில் தனது இயக்க அணுபவத்தினால் நடப்பதை உணர்ந்துகொன்டு கால்நடையாக காட்டுவழியாக ஓடி களுவங்கேர்னி இரானுவ முகாமுக்கு சென்று அங்கிருந்து இரானுவத்தை அழைத்து வந்தவர். இவர் சில வருடங்களின் பின்னர் அரவம் தீண்டி அகால மரனமடைந்தார். ( எனக்கு நேரில் அறிமுகமான அந்த துடிப்பும் துனிவும் கொன்ட வாலிபன் மறைந்த ஜலால்தீனுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணமாகும்)
ஏறாவூர் சம்பவத்தில் கொல்லப்பட்ட பலரில் பேராதனை பல்கலைக்கழ்க சிரேஷ்ட விரிவுரையாளரான ஜனப் அமீர்தீன் என்பவரின் குடும்பத்தினரும் அடங்குவர். இதில் முரன் நகை என்னவென்றால் இவரது சகோதரரும் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் , ஆனால் இவரது சொந்த குடும்பமும் புலிகளால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
(Bazeer Seyed)
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் படுவது தொடர்பாக செய்திகள் எழுதும் ஊடகத் தோழர்களை நோக்கி ஒரு சிறு விண்ணப்பம்.
வருந்துகிறோம் தோழர்களே. வருத்தம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த விசைப்படகுகள் என்ன தொழிலை மேற்கொண்டன என்ற விபரத்தை நீங்கள் ஏன் குறிப்பிடத் தவறிவிட்டீர்கள்….? ட்ரோலர்தானே? ட்ரோலராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப் படுவதில் தப்பே இல்லை. அப்படியான நாசகாரத் தொழிலை மேற்கொண்டிருப்பார்களேயானால் அவற்றைப் பறிமுதல் செய்வதே சரியானது. நேற்று முன் தினம் எமது மீனவர்களின் ஆறு படகுகளின் நைலோன் வலைகளை அனலை தீவுக்கு மேற்குக் கடலில் தமிழக ட்ரோலர் படகுகள் அப்படியே அறுத்து நாசம் செய்துள்ளன.