மத்திய வங்கியினால் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்,
இந்த ஆண்டின் முதன்மைப் பணவீக்கம் மே மாதத்தில் 50 வீதத்தை தாண்டியுள்ளது. அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 70 சதவீதமளவிற்கு உயர்வடையும். அடுத்த சில மாதங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விலை உயர்வுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நிலைமை ஏற்படும். இப்போது உயர்வடைந்துள்ள பணவீக்கம் மற்றும் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கவுள்ள பணவீக்கம் காரணமாக குறைந்த வருமானங்களை பெற்றுக்கொள்ளும் மக்களே அதிகமாக பாதிக்கப்படப்போகின்றனர்.
தற்போதைய பணவீக்கம் மிக உச்சமடைந்து 100 வீதத்தை வெளிப்படுத்தினால் நடுத்தர வர்க்க எந்தவொரு வர்த்தக நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாதுபோகும். முழுமையாக வீழ்ச்சியடையும். ஆகவே இதனை தவிர்க்க பண வீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதற்காகவே வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான பொருளாதார நெருக்கடியின் போது நிதி முகாமைத்துவதை மத்திய வங்கியினால் மாத்திரம் கையாள முடியாது. ஏனைய அரச நிதி கொள்கையும், அரச நிறுவனங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும், அவசியமான மாற்றங்களை செய்தாக வேண்டும். எம்மாலான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். புதிய வரி அதிகரிப்புகளை செய்துள்ளோம். ஆனால் இதற்கான விளைவுகள் உடனே கிடைக்கப்போவதில்லை. அதற்கு சிறிது காலம் செல்லும். இதே நிலைமையில் பயணித்தால் மீண்டும் பணம் அச்சடிக்க வேண்டிய நிலைமையே ஏற்படும். ஆகவே துறைகளும் துரிதமாக செயற்பட வேண்டும்.
எனினும் ஏற்றுமதி -இறக்குமதிக்கு இடையில் சமநிலை தன்மை ஒன்று வெளிப்படுகின்றது. இது சற்று ஆரோக்கியமான நிலைமையாகவும். இந்த நெருக்கடியிலும் சில நல்ல மாற்றங்களும் இடம்பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் பல்வேறு துறைகளிலும் இந்த மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இல்லையேல் மிக மோசமான நிலையொன்றுக்கு முகங்கொடுக்க நேரிடும். ஆனால் இந்தியா சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து உதவிகள் கிடைத்தால் சற்று ஆறுதலான நிலைமைகள் உருவாக்கவும். அது குறித்தும் பேச்சுவார்த்தைகள் முன்னேட்டுக்கப்படுகின்றது.
இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்கவிலலை என்றால், அரசாங்கத்தினால் வருமானத்தை அதிகரிக்க முடியவில்லை என்றால் மறுபக்கம் செலவுகளை குறைத்தாக வேண்டும். கடன்களை கைவிட வேண்டும். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைக்கும் பட்சத்தில் நாட்டின் ஸ்திரத்ததன்மையை உறுதிப்படுத்த முடியும். அவ்வாறான முயற்சிகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.