யாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தின் / ஆறுமுகம் திட்டத்தின் அறிமுகம்:
இந்த திட்டத்தின் முதற்படியாக ஆனையிறவு நீரேரியை கடல்நீருடன் கலக்கவிடாமல் தடுப்பது. இதற்கான அணை ஒன்றை பலமாக அதன் கிழக்குப்புறம் அமைக்க வேண்டும். ஆனையிறவு நீரேரியில் கலக்கும் கனகராயன் ஆற்றின் நீரை ஆனையிறவு நீரேரியில் சேமிக்கவேண்டும்.
இப்படியாக ஆனையிறவு நீரேரியை ஒரு மிகப்பெரிய நன்னீர்த்தேக்கமாக மாற்றமுடியும். இது ஓரிரு வருடங்களில் நடந்து நன்னீராக மாறும் ஆனையிறவு நீரேரியை முறையாக பராமரிக்கவேண்டும்.