கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பத்து குழந்தைகள் குறித்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
குழந்தைகளில் இதய நோய் அதிகரித்து வருவதாகவும், லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் தினமும் 5 முதல் 10 குழந்தைகள் வரை கொரோனா இருப்பது கண்டறியப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 28 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், குழுவில் பல குழந்தைகள் கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இன்று (23) வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை கடும் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
“அதனடிப்படையில், பொத்துவில் பிரதேசத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் தினமும் காலை 7 மணி முதல் பி.ப 2 மணிவரை மட்டுமே திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது” என, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹீம் தெரிவித்தார்.
“பொத்துவில் கொரோனா தடுப்பு செயலணியின் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் முற்றாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களான பொத்துவில் 09 குண்டுமடு மற்றும் 13 பாக்கியாவத்தை பிரதேசம் தொடர்ந்தும் முடக்க நிலையில் இருக்கும் என்பதுடன் தொற்றுப் பரவல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு முடக்கப்பட்ட பிரதேசங்களை மீளவும் திறப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி சில வர்த்தக நிலையங்கள் திறந்து இருப்பதாகவும், மக்கள் வீதிகளில் நடமாடுவதையும் காணக் கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்த அவர், இவர்களை கைது செய்வதற்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் மற்றும் சுகாதாரத் துறையினரும் கூட்டாக இணைந்து விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பொத்துவில் பிராந்தியத்தில் கொவிட்-19 தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இக் காலத்தில் எக்காரணம் கொண்டும் அத்தியாவசிய தேவைகளைத் தவிர, ஏனைய தேவைகளுக்காக, வெளி மாவட்டங்களுக்கு செல்வற்கு அனுமதி வழங்கப்படமாட்டது என்றும் தெரிவித்த அவர், வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பதே உசித்தமானது என்றார்.