இலங்கையில் குறிப்பாக வடபகுதிகளில் நிலைமை பரவாயில்லை என்று சொல்லலாம். இதுவரை காலமும் இருந்த ஊரடங்கு மனோநிலை இப்பொழுது சற்று மாற்றம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. காவல்துறையினர் மிகவும் பொறுப்புணர்வுடன் அவதானமாகச் செயற்படுவதைக் காணமுடிகிறது. கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் போக்கில் மாற்றத்தைக் காணமுடிகிறது. பொதுநிர்வாகத்துறையினரும் ஊரடங்கின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொண்டதை உணரமுடிகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் சீரடையத் தொடங்கிவிட்டது. மக்கள் தேவையற்ற பீதியையும் பதற்றத்தையும் கைவிடுவதே தற்போதைய தேவை.