இலங்கையின் ஜனாதிபதியாக பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்காவின் தெரிவு ஜனநாயக விழுமியங்கள் வெட்கித் தலைகுனியும் செயற்பாடுகளில் ஒன்றாகவே உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இரு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் மக்களால் தோற்கடிகப்பட்டவரே ரணில் விக்கிரமசிங்க. அது மட்டும் அல்ல அவரின் பழம் பெரும் கட்சி பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினரைக் கூட நேரடியாக மக்களால் தெரிவு செய்வதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
இலங்கைiயின் தேர்தல் முறமைப்படி நியமன பாராளுமன்ற உறுப்பினராக தன்னைத்தானே தெரிவு செய்து கொண்டவரே இந்த ரணில் விக்கரமசிங்க.
அப்படியான ஒருவரை கோத்தாய ராஜபக்கஷ மக்களின் போராட்டங்களில் இருந்து தப்பிக் கொள்ள தனது சகோதரை பிரதமர் பதவியில் இருந்து இறக்கி ரணிலுக்கு வழங்கிய பிரதமர் பதிவியே முதல் ஜனநாயக விரோத செய்யப்பாடாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலஙகளில் பார்கப்படுகின்றது.
மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட ஒருவரை எவ்வாறு நியமிக்கலாம் அப்படி நியாமித்தாலும் ஒரு சுய சிந்தனையுடன் செயற்படும் தார்மீக செயற்பாட்டை உடையவர் அதனை எவ்வாறு ஏற்றுக்கொண்டார் என்பதுவும் பல கேள்விகளை எழுப்பி இருந்தாலும்…
மக்கள் இது விடயத்தில் தெளிவாகத்தான் இருந்திருக்கின்றார்கள். அதனால்தான் கோ கம இல் ரணில் பெயரையும் உடனே இணைத்து மக்கள் போராடத் தொடங்கினர்.
போராட்டத்தின் வீரியம் கோத்தாவை நாட்டை விட்டு ஓடச் செய்து வெளி நாடு ஒன்றில் இருந்து தனது பதவியை இராஜனாமா செய்ய மீண்டும் அரசியல் யாப்பிற்கு அமைய இடைக்கால ஜனாதிபதியாக குந்திக் கொண்டார் மக்களால் நிராகரிக்கப்பட்ட அன்றைய பிரதமர் ரணில்.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள் பாராளுமன்ற அந்த 200 சொச்சங்கள். இவர்களில் யாரும் இந்த கோ கம் விற்கு ஆதரவாக மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கவில்லை.
மாறாக உருவாகும் இடைக்கால ஆட்சியில் தமக்கு ஏதாவது வாய்ப்புகள் ஏற்படுமா…? என்பதை மட்டும் கருத்தில் கொண்டு செய்யற்பட்டனர். அல்லது அந்த வாய்புகளைப் பெறுவரிடம் தமக்கான சலுகைகள் அமைச்சுகளை முன் கதவால் அல்லது பின் கதவால் பெறலாமா..? என்பதில் மட்டும் குறியாக இருந்தனர்.
இதில் விரல் விட்டு எண்ணும் அளவிலான சிலர் விதிவிலக்காக இருக்கவும் முற்பட்டனர்….?
பிரதமரான ரணில் இராஜினமாவிற்கு முன்பு கோத்தாவின் இராஜினமா நன்று திட்டமிடப்பட்டே நடைபெற்றது. ரணிலில் பிரதமர் பதவி இராஜினமாவிற்கு பின்பு கோத்தா இராஜினமா என்று சென்றிருந்தால் சபாநாயருக்கு ஜனாதிபதிப் பதவி தற்காலிகமாக சென்றிருக்கும்.
இதனைத் தடுப்பதற்கு ஏற்ப கோத்தாவுடன் இணைந்து அவரை பாதுகாப்பாக நாடுகள் விட்டு நாடுகள் போவதற்கு எல்லா வகையிலும் செய்பாடுகளை செய்தவர்தான் இந்த ரணில் விக்ரமசிங்க.
மக்களிடம் சென்று பெறமுடியாத அதிகாரத்தை குறுக்கு வழியில் பின் கதவால் பெற்றிருக்கும் இந்த கழுத்துப்பட்டி கோட் போட்ட கனவான் எந்தவகையிலும் சுய மரியாதையை உடையவர் என்று நாம் கருதிவிட முடியாது.
அப்படியான ஒருவர் தற்போது நாட்டின் தலைவராக இருப்பதை இட்டு இலங்கையாராக நாம் வெட்கப்பட வேண்டி சூழலில் இருக்கின்றோம்.
சரி பாராளுமன்ற உறுப்பினர்களின் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவும் செய்யப்பட்டு ஜனாதிபதியாக இனிவரும் இறுதிக் காலம் வரை அரியணையும் ஏறிவிட்டார் ஜேஆரின் வாரிசு.
இந்த 200 சொச்சங்களையும் மக்கள் ஏலவே நிராகரித்த நிலையில் அவர்களின் தெரிவு மட்டும் எப்படி ஏற்புடையதாக இருக்கும்.
இதிலும் குறிப்பாக ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்து அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சுயமரியாதை இழந்தவர்களாகவும், ஜனநாயக விழுமியங்களை மக்களின் ஆணையை மீறி செயற்படுபவர்களாகவே நாம் பார்க்க முடியும்.
அப்போ அவருக்கு வாக்களிக்காதவர்கள் மட்டும் சுத்தமா…? என்றால் அதுவும் இல்லை. அவர்களும் ராஜபக்சகளின் விசுவாசியாக இன்று வரை செயற்படும் ஒருவருக்கு வாங்டகுவதை வாங்கிவிட்டு வாக்களித்தவர்கள் தான்.
மேலும் ஜனாதிபதி ரணிலின் தெரிவில் இருக்கும் மக்கள் நிராகரிப்பை ஏற்றுத்தான் அன்றும் இன்னமும் பாராளுமன்த்தில் இவர்கள் தொடருவது ஒரு வகையில் எதிர் கட்சி என்று சொல்லிக் கொண்ட இந்த சிரிப்பிற்கிடமான அரசியல் செயற்பாடுகளை அங்கீகரிப்பது போன்றதாக பாரக்க முடியும்.
கூடவே ரணில் கடந்த ‘நல்லாட்சியில்’ ராஜபக்சாகளை கழுவில் ஏற்றுவேன் என்றே வாக்குறதி கொடுத்தே ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தவர். ஆனால் அவர் ஒன்றும் யாரையும் கழுவில் ஏற்வில்லை.
தற்போதும் இன்னும் அதிக விசுவாசமாக புதிய ஜனாதிபதியாக ‘நல்லாட்சியில் செய்தனவற்றையே தொடருவார் என்பதுவும் சத்திய வாக்காக நாம் நம்பலாம்.
நாட்டை தேர்தல் வரை நடாத்திச் செல்லவும், தற்காலிகமாக ஏற்பட்டுள்ய பொருளாதார சிக்கல், கடன் பிரச்சனைகளை கையாளுவதற்கும் உரிய இடைக்கால அரசு இந்த 200 சொச்சத்தாலும் அதுவும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணிலை அரசுத் தலைவராக கொண்டு உருவாக்கப்பட்டது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
இதனை பாராளுமன்ற நடைமுறை ஊடாக ஏற்றுக் கொண்டு செயற்படும் 200 சொச்சங்களும் ஏற்கனவே ஏற்பட்டது போல் மக்களின் நிராகரிப்பிற்கும் வெறுப்பிற்கும் உள்ளாகியே உள்ளனர்.
இதிலும் சிறப்பாக கொள்கை கோட்பாடு கட்சி என்பதை முழுவதுமதாக கைவிட்டு ‘தாவல்’ செய்து மந்திரிப் பதவிகளும் அதிகாரங்களையும் பெற்றிருப்பவர்கள் எக்காலத்திலும் மக்கள் மன்றத்திற்கு வர முடியாத அளவிற்கு நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.
இதனை எதிர்காலத்தில் மக்கள் செய்வார்கள் என்பதை வரலாறு நிரூபித்து நிற்கும்.
இதனால் சொல்லுகின்றோம்….. ‘ உன்னால் முடியும் தம்பி தம்பி…” என்று.
இங்கு தமிழர் தரப்பு முஸ்லீம் தரப்பு மலையகத் தரப்பு சிங்களத் தரப்பு என்ற வேறுபாடுகள் இன்றி குதிரைப் பேரங்களும், ஆதரவுத் தாவல்களும் கொள்கை அற்ற அப்பட்டமான சுயநலங்களின் வெளிப்பாடாகவே பார்க்க முடியும்.
இலங்கையின் தற்போதைய ஆட்சி அதிகார ஜனநாயகத்திற்கு நாட்டின் தலைவர் ரணில் மட்டும் அல்ல ஏனைய 200 சொச்சங்களும் வரலாற்றில் ஜனநாயக விரோதிகள், பதவி வெறிபிடித்து காட்டேரிகள் என்று குறிப்பில் நிச்சயம் இடம் பெறுவர்…. இடம்பெற வேண்டும்….
தமிழ மக்களே இந்த ஜனாதிபதி இரசிய வாக்கெடுப்பிலும் அதனைத் தொடர்ந்து அரச அமைச்சர் அவையிலும் தாவலாக இடம் மாறி தமது அமைச்சர் பதவிகளையும், சௌகரியங்களையும் பேணிப் பாதுகாத்து தொடர்ந்தும் அதிகாகரக் கட்டிலில் ஒட்டிக் கொண்ட தமிழர் தரப்புகளை நிச்சயம் நீங்கள் இனம் காண்பீர்கள்.
அவர்கள் யாபேரையும் எந்த தாய்வு தாட்சயமும் இன்றி நிராகரியுங்கள் இவர்கள் எக்காலத்திலும் மக்களை தமது சுய நலன்களுக்காக காட்டிக் கொடுக்கும் ஜனநாயக விரோதிகள்.
இவர்கள் எந்த வேறுபாடுகள் இன்றி அனைத்து தமிழர் தரப்பிலும் இருப்பதை இப்போதாவது இனம் கண்டு கொண்டு செயற்படுங்கள்
சிலர் நினைக்லாம் ராஜபக்சாகள் இல்லாமல் புதிய ரணிலின் வருகை அல்லது வேறு ஒருவர் இந்த 200 சொச்சதிற்குள் ஒருவரது வருகை எமது இலஙகையில் பிர்சனையைத் தீர்ப்பதற்கான தலமைத்துவத்தை கொடுக்கும் என்று. அது இல்லவே இல்லை.
இந்த 200 சொச்சங்களும் அவர்களை கடந்த காலங்களில் சரியாக இணம் கண்டு தெரிவு செய்யாத பொது மக்களுமாகிய நாமே இதற்கான பொறுப்புக்களை ஏற்று கொள்ள வேண்டும். அதற்கான போராட்மாகவே தற்போதைய போரட்டங்களை பார்க்க முடியும். இதன் அடிப்படையில் புதிய மக்களுக்கான தலமை ஒன்றை உருவாக்குவோம்.
நேற்றுவரை கோத்தாவின் முகாமில்…. அரசில் அமைச்சரவையில் இருந்தவர்கள் இன்று ரணிலின் முகாமில். கடந்த அரசில் ரணில் நல்லாட்சியில் இணைந்தவர்கள் எதிர்கட்சி என்று நல்லாட்சியுடன கரம் கோர்த்தவர்கள் இன்று கோத்தாவின் மொட்டு டளஸ் அழகப்பெருமா இன் தேர்வுக்கான பேரம் பேசல்களில் அவர்களின் அணியில்….
போராட்டக்காரர்களை பாசிஸ்ட்டுகள் என்று ரணில் கூறுவதும் போராட்டக்காரர்களை பிரியாணி சாப்பிட்டுவிட்டு போராடுவபவர்கள் என்று கொச்சையாக கடந்து போவதையும் கேட்கும் போது….
ஜேஆரின் ஆட்சியில்… 1970 களின் இறுதியில் ஜேஆர் இனால் வழங்கப்பட்ட தமிழருக்கான தீர்வான மாவட்ட சபைகளை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஏற்றப் போது…..
தனி நாட்டிற்கான ஆங்கீகாரமாக தேர்தலை சந்தித்து விட்டு தேர்தல் வெற்றியைப் பெற்ற சில நாட்களில் ஜேஆரிடம் சோரம் போய் மாவட்டசபைகளை ஏற்ற போது அதனைக் கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் கண்டனமும் கொடும்பாவி எரிப்பையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு எதிராக செய்து தமது அரசியல் நிலைப்பாட்டை மக்களின் உணர்வலைகளாக வெளிப்படுத்தினர்….
அதே காலத்தில் பாராளுமன்றத்தில் சிறில் மத்தியூ தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்கான களமாக விளங்கிய யாழ்பல்கலைக் கழகத்தை பார்த்து இங்கு படிப்பவர்கள் குதிரை ஓடி பல்கலைக் கழகம் சென்றவர் என்று அடிக்கடி பொது வெளியிலும் பாராளுமன்றத்திலும் மாணவர்கள், மக்களின் போராட்டததை கொச்சைப்படுத்துவதற்கு கூறி வந்தார்.
இதனை ஆரம்பத்தில் எதிர்தவர்களில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரும் இருந்தனர்.
ஆனால் கொடும்பாவி எரிப்பின் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலை
கழகத்தின் முன்னால் அமைந்து குமாரசாமி வீதியில் ஒரு பொதுக் கூடட்த்தைப் போட்டு கருத்துக்களை கருத்துகளால் சந்திக்க திராணி அற்று தமது பிழையான அரசியல் செய்பாடுகளை ஏற்க மறுத்து சிறில் மத்தியூ கூறிய ‘குதிரை ஓடி பல்கலைக் கழகம் வந்தவர்கள்’ பல்கலைக் கழக மாணவர்களை நோக்கி கருத்துகளைத் தெரிவித்தது கூட்டத்தின் பிரதான பேச்சாக இருந்தன. இதன் மூம் தாங்கள் யார் என்ற உண்மை முகத்தையும் வெளிப்படுத்தி அம்பலப்பட்டும் போனர்
இதனை இன்று எனக்கு காலி முகத் திடலின் போராடும் மாணவர்களை இழைளஞர்களை மக்களைப் பார்த்து பிரியாணி சாப்பிடுவதாக கூறுவது ரணில் பாசிஸ்ட்டுகள் என்ற கருத்தை ஆதரிப்பதோடு மட்டும் அல்ல அன்று சிறில் மத்யூவின் பேச்சை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பேசிய பேச்சுகளுக்கு ஒத்தாக என்னால் உணரமுடிகின்றது.
மக்களின் நியாயமான போராட்டங்களை கொச்சைப் படுத்தாதீர்கள். அவர்களை இனவாத அரசுகள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாத பாசிச செயற்பாடக பார்த்தது போன்று விம்பங்களை ஏற்படுத்தாதீரகள். பலரும் போராட்டக்களத்தில் இருந்து வந்த அனுபவங்களை மறந்தும் விடாதீர்கள்.
மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துபவர்களை வரலாறு ஒருபோதும் விடுதலை செய்யாது.