தண்டவாளத்தில் ஓடினார். சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ஓடிச் சென்று ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை கொடுத்தார்.
ஆபத்து என்பதை உணர்ந்துகொண்ட ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இதனால்
நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. இது நடந்தது 2010-ம்
ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி.
மறுநாள் செப்டம்பர் 1-ம் தேதி வெளியான
அனைத்து பத்திரிகைகளிலும் அனுஜித்தும் அவரது சிவப்பு நிற பேக்கின்
புகைப்படமும் நிறைந்திருந்தது.
கடந்த 14-ம் தேதி கொட்டாரக்கரைக்கு
அருகில் பைக்கில் அனுஜித் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்து
ஏற்பட்டது.திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். அவரது உயிரை காக்க மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால் கடந்த 17-ம் தேதி அனுஜித் மூளைச்சாவு அடைந்தார்.17 வயதில் மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த அனுஜித் தனது 27 வயதில் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார்.