‘இலங்கை’ என்னும் நாட்டின் ஜனாதிபதி போன்றே ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபை தவிசாளர்களும் அந்தந்த நிர்வாக எல்லைக்குள் ஜனாதிபதியாக, ஜனாதிபதியின் பிரதிநிதிகள் ஆவார்கள்.
ஒரு தவிசாளருக்கு, உதவி அரசாங்க அதிபர், பொலீஸ் நிலையை பொறுப்பதிகாரி என இன்ன பிற அரசு நிர்வாக அதிகாரிகள் உண்டு.
பிரதேச சபை ஒன்றினால் 28 பிரிவுகளுக்கு உட்பட்ட மக்களை நலத்திட்ட வேலைகளை முன்னகர்த்த முடியும். இது இலங்கை பாராளுமன்றத்திற்கு சமாந்தரமானதும்கூட.
தவிசாளர், பாராளுமன்ற அமைச்சருக்கு நிகர் சமாந்தரமான அதிகாரமுள்ள மக்கள் சேவையாளராகும்.
கனதியுள்ள மக்கள் சேவையாளரைத் தேர்ந்தெடுப்பதில் மிக மிக அவதானத்தோடு செயல்பட வேண்டியது உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் வாக்காளர்களின் கடமையாகும்.
ஒவ்வொன்றையும் சீர்தூக்கிப் பார்த்து, கட்சியாயினும், கட்சியாக பதிவு செய்ய முடியாத சுயேட்சைக்குழுவாக இருந்தாலும் அரசியல் அறிவு, மக்களுக்கான சேவை முன் அனுபவங்கள், தனி நபர் தகுதிகள், நடந்தைகள், எதற்கும் சோரம் போகாத நடைமுறை வாழ்வியல் என்பனவற்றைச் சீர்தூக்கி அலசி உங்கள் பிரதேச சபை உறுப்பினர்களை, உங்களுக்காக தெரிவு செய்யுங்கள்!
இந்த நடப்புக் கால பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களென அனைத்துச் செயல்பாடுகளையும் மீளாய்வு செய்து கொள்வது வாக்காளர்கள், தம் முடிவை தீர்மானிப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.
தேர்தல் விஞ்ஞாபனம் அறிக்கை என்பது மிக முக்கியமானது. நம்பகத்தன்மையும் செயல்படுத்தக்கூடியதுமாக இருக்கிறதா? என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்
(Nixson Baskaran Umapathysivam)