இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாகவும் நிலமைகள் எற்பட்டும் வருகின்றன.
ஆனால் ஜஸ்ரின் ரூடொவை(Justin Trudeau) அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற செயற்பாடுகளின் ஆரம்ப புள்ளிகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம் இன் முதலாவது ஜனாதிபதி ஆட்சிக் காலத்திலேயே அமெரிக்க ஆளும் வர்க்கத்தினால் திட்டமிடப்பட்டதாக அரசியல் ஆய்வாரள்களால் உணரப்படுகின்றது.
இதற்கான பிரதான காரணத்தின் வெளிப்பாடாக ரூமொ ஆட்சிக்கு வந்த சில காலத்தில் கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ரோவின் மரணத்திற்கு கனடாவின் பிரதமராக ஜஸ்ரின் ரூடோ(Justin Trudeau) அவரின் தந்தை வழியில் கியூபாவுடனான நட்பாக செல்ல எடுத்து முடிவில் இருந்து ஆரம்பமானது என்றாக உணரப்படுகின்றது.
இவரின் ஜனநாயகக் கட்சியின் இடது பக்கச் சார்பு நிலைப்பாடாக இதனை அமெரிக்க ஆளும் வர்க்கம் அதிகம் பார்த்தது.
இவற்றின் வெளிப்பாடாக ட்றம்பின் முதலாவது ஜனாபதி பொறுப்பேற்றல் காலத்தில் அமெரிக்கா கனடா மெக்சிகோ இடையிலான ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சுதந்திர வர்த்தக வலயத்திற்கான கெடுபிடிகளை அமெரிக்கா அறித்ததும் இதனைச் சரி செய்வதற்காக பிடல் காஸ்ரோவின் மரண நிகழ்வில் ரூடோ கலந்த கொள்ளாது தனது அரசின் இன்னொருவரை அனுப்பிய காலத்தில் இருந்து ஆரம்பித்து அமெரிக்க நிர்வாகத்திற்கு பணிந்து போனதாக செயற்பாட்டில் இருந்து ஆரம்பமானது.
கூடவே கனடா உதவிப் பிரமராக அமெரிக நட்பு நிலையை அதிகம் பேணுபவராக இருக்கும் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்(Chrystia Freeland) என்பவரை நியமித்து அவர் மூலம் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்தியே அந்த சுதந்திர வர்த்தவலய செயற்பாகளை ஓரளவிற்கு சுமூகமான முறையில் தீர்த்துக்கொண்டு கனடா தனது ஆட்சியைத் தொடர்ந்ததே வரலாறு.
ஆனால் அமெரிக்க ஆளும் வர்க்கம் இந்த ஜஸ்ரின் ரூடோவை பதவியில் இருந்து இறக்குதல் என்பதில் நேரடியாக இல்லாது இருந்தாலும் தொடர்ந்தும் செயற்பட்டு வந்ததன் வெளிப்பாடுகளின் உசசத்தை தற்போது அடைந்தள்ளது.
ரூடோவின் அரசு இரண்டு தவணை தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் அதுவும் இரண்டாம் தவணையில் சிறுபான்மை அரசாக வந்ததும் இதற்கான சாத்தியக் கூறுகளை தற்போது விரைவுபடுத்தியிருக்கின்றது.
இந்த இரண்டு தவணயிலும் கனடிய மக்களுக்கு நலன் திட்டங்களை மற்றைய எந்த அரசுகளையும் விட சிறப்பாக செய்தது இங்கு முக்கிய கவனத்தையும் பெறுகின்றது.
அதுவும் கொரனா காலத்து மக்களுக்கான வாழ்வாதாரத்திற்கான கொடுப்பனவுகளும் சிறு குறு தொழில் முனைவோருக்கான கடன் இதில் பெரும் பகுதி திருப்பிச் செலுதத்த் தேவை இல்லை என்றான விடயங்கள் ஆகட்டும் எல்லாம் மிகச் சிறப்பாகவே செயற்படுத்தியது.
கூடவே பல் மருத்துவம் கண் மருத்துவம் போன்றவற்றில் மக்கள் நலன் திட்டங்களை புகுத்தியது என்றான விடயங்களையும் புதிதாக அறிமுகப்படுத்தியது.
அமெரிக்காவில் மருத்துவம் இலவசம் என்று இல்லாத சூழலில் கனடாவில் இவை அனைத்தும் இலவசம் என்றான நிலையில் இதில் மேலும் சில விடயங்களை தற்போதைய ரூடோ அரசு அறிமுகப்படுத்தியதும் அமெரிக்க ஆளும் வர்கத்திற்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
இதே மாதிரியான மக்கள் நலன்களை அமெரிக்க மக்கள் தமக்கும் தம் நாட்டில் இலவசமாக வழங்க வேண்டும் என்றான ஏதிர்பார்புகளை மக்கள் மத்தியல் ஏற்படுத்தியும் இருக்கின்றது.
முடிந்தளவிற்கு வட்டி விகிதத்தை சமாளித்து பண வீக்கத்தை அதிகம் எகிற விடாமல் கட்டிற்குள் வைத்திருந்தது என்பதாக சிறப்பான செயற்பாட்டைக் கொண்டிருந்தது கடந்த சில வருடங்களாக கனடா அரசு.
கனடாவில் வட்டி விகித அதிகரிப்பும் பண வீக்கமும் மக்களின் வாழ்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அது கனடாவிற்கானது என்பதற்கு அப்பால் இது பெரும் தொற்று, யுத்தம் என்பவற்றினால் ஆன உலக பொது விளைவின் தாக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கும் சூழலில் இந்த மாற்றங்களை நாம் பார்த்தாக வேண்டும்.
தற்போது இரு மாதங்களுக்கு மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை முற்று முழுதாக கனடா நிறுத்தியதும் மக்களுக்கான பொருளாதாரச் சுமையை குறைக்கும் ஒரு செயற்பாடு ஆகும்.
ஜஸ்ரின் ரூடோவைப் பிரதியீடு செய்ய கனடாவின் வலதுசாரிக் கட்சியான பழமைவாதக் கட்சியிற்கு பேச்சு வல்லமை அதிகம் உள்ள ஒரு ஆளுமைத் தலைவரை அமெரிக்க ஆளும் வர்க்கம் கண்டு பிடித்திருப்பதுவும் கனடாவின் மேற்கு மகாண வெள்ளை இனத்தவரின் பலமான ஆதரவு இவருக்கு இருப்பதுவும் இந்த ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்து இருக்கின்றது.
அது ரூடோவின் ஆட்சிக் காலம் முடிய முன்பே ஆட்சியை அகற்றுவதாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.
கடந்த கிழமை நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்(Chrystia Freeland) தனது வரவு செலுவத் திட்த்தை சமர்பிக் இருந்த நாளில் தனது பொறுப்பை இராஜினமா செய்தும் இதனை வேகப்படுத்தியும் இருக்கின்றது.
இதற்கு ஒரு தவணை தவிர்த்து இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் அமெரிக்க ஆளும் வர்க்;க ட்றம் நிர்வாகம் கனடாவின் அமெரிக்க ஏற்றுமதிக்கான பொருட்களுக்கான வரி 25 வீதமாக உயர்த்தப்படும் என்பதான மிரட்டல்களும் இதனைக் கையாளுவதற்கு வாய்ப்புகளை அதிகம் கொண்டிருந்த நிதி அமைச்சர் உதவிப் பிரதமரின் திடீர் பொறுப்பு விலகலும் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
இங்கு ரூடொவின் தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும் அவரின் காதல் மனைவி சோபியா வின் ரூடோவிடம் இருந்து பிரிந்ததான செயற்பாடு (இதில் உள்ள நியாங்கள் காரண காரியம் சம்மந்தமாக ஏலவே ஒரு பதிவை அப்போது எழுதியும் இருந்தேன்) துணைவியின் ஆற்றுப்படுத்தல் இல்லாத தனி மனித ரூடோவின் அண்மைய வெற்றி பெற முடியாத நிலமையிற்கு காரணமான உளவியலாகவும் என்னால் பார்க்கப்படுகின்றது.
அளவுக்கு மீறிய…? குடிவரவாளர் என்றாக உணரப்படும் சர்வ தேச மாணவர்களுக்கான அனுமதி(சிறப்பாக இந்திய மாணவர்கள்)இ சுற்றுலா விசா அனுமதிஇ தற்காலிக வேலை முனைவோருக்கான அனுமதி(சிறப்பாக தென் அமெரிக்க மத்திய அமெரிக்க நாட்டவர்கள்) என்றான இலகு விசா பெற்று கனடாவிற்கு அண்மைக்காலங்களில் அதிக எண்ணிக்கையானவர் கனடாவிற்குள் வந்துள்ளார்கள்.
இதில் பலரும் இங்கு நிரந்தரமாக தங்கிவிடுவதற்கான அகதி நிலை அல்லலது நிரந்த வேலை வாய்பை உறுதி செய்யும் விடயங்கள் என்றாக தங்கியிருக்க முற்படுகின்றனர். .
இவை பல மில்லியன் என்றாக குடிவரவாளர்கள் கணக்கில் அதிகரித்தன.
இதன் விளைவாக குறுகிய காலத்தில் இவ்வளவு பேருக்கும் தேவையான தங்கும் இட வசதிகள் குறிப்பாக பெரு நகரங்களில் இல்லாத நிலையில் வீட்டு விலைகள் அல்லது வாடகை அதிகரிப்பை ஏற்படுத்தின.
இதனை இந்த வீடு சார்ந்து செயற்படும் பெரும் முதலீட்டாளர்கள் தரகர்கள் தமக்கான பணம் ஈட்டும் செயற்பாடாக பாவித்து இந்த விலை உயர்வுகளையும் ஏற்படுத்தினர் என்பதையும் நாம் மறுக்க முடியாது
இது இது வரையும் இங்கு நிரந்தரமாக வாழும் மக்களால் தாங்க முடியாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தின .
இந்த வீட்டு விலை அதிகரிப்பு உண்மையில் வீடமைப்புகளை ஏற்படுத்துபவர்களால் செயற்கையாகவே அதிகம் ஏற்படுத்தப்பட்டதாக உண்மை நிலமை இருந்தாலும் உயர்விற்கான காரணம் அரசு என்பதாக அவர்கள் மடைமாற்றியும் விட்டனர்.
இன்னுமொரு புறத்து வேலை வாய்ப்பில் முகவர்கள் மூலம் குறைந்த ஊதியத்திற்கு வேலை வழங்கும் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளை பலர் செய்வதையும் ஊக்கிவித்தது. இதனை பல முதலாளிகளும் தமக்கு சாதகமாக பயன்படுத்தினாலும் இதற்கான தாக்கத்தினால் ஏற்பட்ட எதிர் விளைவுகளை ரூடோ அரசை நோக்கி இலாவகமாக நகர்த்தியும் விட்டனர்.
இவற்றின் விளைவு அடிப்படைச் சம்பளத்திற்கு கூட வேலைகளை இங்கு நிரந்தரமாக வசிப்பவர்களால் பெற முடியாத சூழலையை ஏற்படுத்திவிட்டது.
இளம் தலைமுறையினர் தமது உழைப்பில் வீடுகளை வாங்குவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை.
இவை எல்லாவற்றையும் ரூடோ அரசிற்கு எதிரான வெறுப்புணர்வாக இலகுவாக மடை மாற்றியும் விட்டனர் ரூடோவை பதவியில் இருந்து அகற்ற விரும்பும் தரப்பினர்.
இவை எல்லாம் தற்பொது ட்ரூடோவின் வீழ்ச்சிக்கு வலுச் சேர்க்க சாதகமான சூழலையும் ஏற்படுத்தியும் விட்டது.
தனது நாட்டில் இன்னெர்ரு நாட்டின் இரகசிய அமைப்பு செய்த கொலைகளை எந்த நாடும் பொறுத்துக் கொள்ளாது என்பதாக இந்திய கனடிய உறவுகள் சிக்கலுக்குள் உள்ளாகி இருப்பதை இந்தியா தனது தரப்பில் இருந்து காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்தது என்பதே என்ற இந்தியாவின் பார்வை அவரின் இன்றை தோல்விகளுக்கான காரணத்தை மடை மாற்றுவது சரியான வாதம் அல்ல.
சற்று இவ்வாறு ஒப்பிட்டுப் பாருங்கள் ஈழ விடுதலைப் போராளிகளை கனடாவில் தஞ்சம் பெற்று கனடிய பிரஜைகள் ஆன பின்பு இலங்கை அரசு கனடாவில் வைத்துக் கொலை செய்தால் அது சரியானவையாகவா அல்லது ஏற்புடமையாகவா இருக்கும்.
ஒரு வேளை ட்றம் மோடி இடையிலான வலதுசாரி இணைப்பாக இந்தியா இதனைப் பார்த்தாலும் நாடு விட்டு நாடு மாறி இந்தக் கொலை விடயத்தை கனடாவின் நிலைபாட்டுடன் ஒத்த கருத்தையே அமெரிக்க ஆளும் வர்க்கம் கொண்டிருப்பதை நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.
உக்ரேன் ரஸ்யா யுத்த விடயத்தில் அமெரிகக் பைடன் நிர்வாகத்தின் தாளத்திற்கு அதிகம் சேர்ந்து ஆடியது ஜஸ்ரின் ரூடோ. ஜோன் கிறிஸ்ரியான்(Jean Chrétien) என்ற இதே லிபறல் அரசின் முன்னை நாள் பிரதம மந்திரியின் இராஜதந்திர நடவடிக்கையில் இருந்து மாறுபட்ட தவறான செயற்பாடு என்பதாக இது பார்கப்பட்டு அது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.
அண்மைய கனடாவின் பிரதம மந்திரிகளில் கனடாவிற்கான கனடா மக்களுக்காக மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயற்படுத்திய சிறந்த பிரதமராக ரூடோவே இருந்தார் என்பதே உண்மை.
இவை அனைத்திற்கும் அப்பால் இலகுவில் மக்களுடன் நெருங்கி பழகும் எளிமையான மனிதராக செயற்பட்ட அவரின் வலிமை இன்றும் பலராலும் விரும்பப்படும் செயலாகவே தொடர்கின்றது.
ரூடோவின் பதவி விலகலுகு;கான புற அழுத்தங்களை தற்போது என்டிபி கட்சி கொடுப்பது உண்மையே இது வரை காலமும் பல மக்கள் நலத் திட்டங்களை இமே என்டிபியின் வேண்டுதலின் பேரில் செயற்படுத்த முயன்றதையும் நாம் மறுதலிக்க முடியாது.
ஆட்சி கவிழ வேண்டும் என்பதான என்டிபி(NDP)யின் தற்போதைய செயற்பாடு கனடா மோசமான வலதுசாரி ஆட்சியின் பிடியிற்கள் தள்ளிவிடும் என்பதை காலம் கடந்து என்டிபி(NDP) உணர முற்பட்டால் அது மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய தவறாக அமையும்.
கனடாவில் செயற்பாட்டில் முன்னிலையில் இருக்கும் அரசியல் கட்சிகளின் அடிப்படையின் என்டிபி(NDP) கட்சியின் ஆதரவாளராக இருக்கும் என்னைப் போன்றவர்களின் கருத்தியல் வெளிப்பாடாகவும் இதனை என்னால் உணர முடிகின்றது
எவை எப்படி இருப்பினும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் விருப்பப்படி கனடாவில் ஆட்சி மாற்றம் இதன் இயல்பான தேர்தல் காலத்திற்கு முன்பே வலதுசாரி சிந்தனையாளர்களின் வசம் போவதற்குரிய வாய்புக்களே அதிகம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.