கொரோனா பரவலின்போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குள் பெருவும் ஒன்றென்பதுடன், அங்கு வைத்தியசாலைகள் நோயாளர்கள் நிரம்பியுள்ளதுடன், ஒட்சிசனுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்நிலையில், உத்தியோகபூர்வ தரவுகளில் குறைவாகவே காணப்படுவதாகவும் உண்மையான உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என நீண்ட காலமாகவே நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
நேற்று முன்தினம் 69,342 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டிருந்தது. ஏனெனில், குறைவான சோதனைகள் காரணமாக நபரொருவர் கொரோனாவோலோ அல்லது வேறு காரணத்தாலோ உயிரிழந்தாரென்பதை உறுதிப்படுத்துவது கடினமாக இருந்தது.
முன்னதாக, ஹங்கேரியே 100,000 பேருக்கு 300 பேரளவிலென மோசமான கொரோனா உயிரிழப்பைக் கொண்டிருந்த நிலையில், தற்போது 100,000 பேருக்கு 500 கொரோனா உயிரிழப்புகளை பெரு கொண்டிருக்கிறது.