தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன்று சனிக்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குபட்பட்ட வீமன்காமம் பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்பின்னர், வலிகாமம் வடக்கு மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்தினால் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.