இணைந்த வடகிழக்கு மாகாண அரசின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் அவர்கள், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடன், வடகிழக்கு மாகாண அரசுக்காண அதிகாரங்களை பகிர்வது தொடர்பான ஒரு சந்திப்பில் கிளிக் செய்த புகைப்படம் ஒன்றையே நீங்கள் இங்கு காண்கிறீர்கள்.
வடகிழக்கு மாகாண அரசு அமைத்து மிகக் குறுகிய காலத்தில் பெரும் நெருக்கடிகளின் மத்தியிலும் பல சாதனைகளை புரிந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். ‘இது மாகாண சபை அல்ல மாகாண அரசு’ என இலங்கை அரசுடன் வாதிட்டவர். மாகாண அரசிற்கான அதிகாரங்களை கேட்டு இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்தவர். ‘எங்களோடு ஒத்துழைப்பீர்களானால் உங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம்’ என்ற தொனியில் பேசி ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் விலைக்கு வாங்க முற்பட்ட வேளைகளில் எல்லாம் அதைத் புறக்கணித்து மாகாண அரசுக்குரிய அதிகாரங்களை பெறுவதிலேயே குறியாக இருந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள்.முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாள் அவர்கள் இந்தியாவை வைத்துக் கொண்டு மிகக் குறுகிய காலத்தில் சாதித்தவைகளில் ஒரு சிறு பகுதியை ஆயினும் இந்நாள் முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களால் சர்வதேசத்தையே கையில் வைத்துக் கொண்டு சாதிக்க முடியாமல் உள்ளது. சாதனை என்பது உங்கள் உங்கள் விருப்புஇ வெறுப்புஇ ஆர்வம்இ முயற்சி என்பதுகளிலேயே தங்கியுள்ளது. இன்று முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் அமர்ந்து இருக்கும் ஆசனத்தில் வரதராஜப்பெருமாள் அவர்கள் அமர்ந்து கொள்வாரானால் நீங்கள் புதிய உயிரோட்டம் உள்ள ஒரு வடக்கு மாகாண சபையை காண்பீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
(Brin Nath)