தமிழ் நாட்டில் ஜெயலலிதா அம்மையார் “ஈழத் தாய்” அவதாரம் எடுத்து, தமிழ் உணர்வாளர்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். அதே போன்று, ஜெர்மனியில் தற்போது அங்கெலா மெர்கல் “சிரியாத் தாய்” அவதாரம் எடுத்து, அரபு உணர்வாளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். அரசியல்வாதிகள் எங்கிருந்தாலும் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கிறார்கள். இருப்பினும் இருவருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. தனது நாட்டிற்கு வந்து சேர்ந்த சிரிய அகதிகளை சந்தித்து, அவர்களுடன் செல்பி படம் எடுக்கும் அளவிற்கு, அங்கெலா மெர்கல் எளிமையாக நடந்து கொண்டுள்ளார். ஆனால், நமது “ஈழத் தாய்” தமிழ்நாட்டு அகதி முகாம்களில் உள்ள ஈழ அகதிகளை சந்தித்ததாக அறியவில்லை. (Kalaiyarasan Tha)