ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டுப் பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஊடகங்களுக்கு  தெரிவித்தார். புதிய அரசாங்கம் தேசத்தை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை நகர்கிறது என்பதை உலகிற்கு எடுத்துரைக்க உத்தேசித்துள்ளதாகவும், இலங்கை பிரஜைகளுக்கு நிலையான மற்றும் அழகான நாட்டை உறுதி செய்யும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.