தமிழரைஆதரிப்பதாஅல்லதுகட்சியைஆதரிப்பதாஎன்றகேள்விமீண்டும் கனடியதமிழ் வாக்காளர்கள் முன் வைக்கப்படுகின்றது. நடைபெறவுள்ளகனடாவின் 42ஆவது பொதுத் தேர்தலில் கனடாவின் மூன்றுபிரதானதேசியஅரசியல் கட்சிகளின் சார்பிலும் ஜந்துதமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கனடியபொதுத் தேர்தலில் மூன்றுதேசியகட்சிகளின் சார்பில்தமிழ் வேட்பாளர்கள் களம் இறங்குவதும்,அதிகஅளவில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதும் இதுவேமுதல் தடவையாகும். லிபரல் கட்சிசார்பில் சத்தியசங்கரி (கரி)ஆனந்தசங்கரி(ஸ்காபுரோரூச்பார்க்),கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் ரொசான் நல்லரட்ணம்(ஸ்காபுரோதென்மேற்கு),புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் ராதிகாசிற்சபைஈசன்(ஸ்காபுரோவடக்கு), செந்திசெல்லையா(மார்க்கம் தோன்கில்) மற்றும் காந்தரட்ணம் மில்ரோய் சாந்தகுமார்(ஸ்காபுரோரூச்பார்க்) ஆகிய ஜவரும் இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்களாவார்கள்.
இவர்களில் ராதிகாசிற்சபைஈசன்தவிர ஏனைய நான்குவேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுவது இதுவேமுதல் தடவையாகும். தேசியரீதியில் கொன்சவேட்டிவ் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தமிழர்கள் முன்னர் தேர்தலில் களம் இறங்கியபோதிலும் லிபரல் கட்சிசார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் முதல்முறையாகபோட்டியிடுகின்றார்.
இவ்வாறானபின்னணியில் தமிழ் வேட்பாளரைஆதரிப்பதன் மூலம் தாங்கள் ஏற்றுக்கொள்ளாதநிலைப்பாட்டைகொண்டுள்ளகட்சிக்குஆதரவாகவாக்களிப்பதாஅல்லதுகட்சியின் கொள்கைகளைஎதிர்ப்பதன் மூலம் தமிழ் வேட்பாளரைதோல்வியடையச் செய்வதாஎன்றகேள்விபிரதானமாகின்றது.
கனடியஅரசியல் தமிழர்களுக்குஎட்டாக்கனியாக இருந்தகாலம் எல்லாம் மலையேறிவிட்டது. கட்சிகளின் பின்னால் தமிழர்கள் கொடிபிடித்தகாலம்போய்,முதலாவதுநகரசபைஉறுப்பினர் (லோகன் கணபதி) முதலாவதுநாடாளுமன்றஉறுப்பினர்(ராதிகாசிற்சபைஈசன்)முதலாவதுகட்சித் தவிசாளர்(நீதன் சாண்)எனகுறிப்பிடத்தக்கபதிவிகளைஅரசியலில் தமிழர்கள் பதித்துள்ளனர்.
2006ஆம் ஆண்டுநடைபெற்றநகரசபைத் தேர்தலில் லோகன் கணபதியோர்க் பிரதேசத்தின்நகரசபைஉறுப்பினராகதெரிவானதன் மூலம் கனடியவரலாற்றில் அரசியல் பதவிக்குதெரிவானமுதல் தமிழர்; என்றபெருமையைத் தனதாக்கினார். இதேதேர்தலில் கல்விச் சபை உறுப்பினராகநீதன் சாண் தெரிவாகியிருந்தார். 2010ஆம் ஆண்டுமீண்டும் நகரசபைஉறுப்பினர் பதவிக்கு இரண்டாவதுதடவையாகலோகன் கணபதிதெரிவுசெய்யப்பட்டார். இம்முறைகல்விச் சபை உறுப்பினராகவொனிற்றாநாதன் தெரிவுசெய்யப்பட்டார்.
2011ஆம் ஆண்டுகனடாவின் முதல் தமிழ் நாடாளுமன்றஉறுப்பினராகராதிகாசிற்சபைஈசன் தேசியரீதியில் தெரிவுசெய்யப்பட்டார்.கடந்தவருடம் நடைபெற்றநகரசபைத் தேர்தலில் மூன்றாவதுதடவையாகலோகன் கணபதிநகரசபைஉறுப்பினராகவும் இரண்டாவதுதடவையாகவொனிற்றாநாதன் கல்விச்சபைஉறுப்பினராகவும் தெரிவானார்கள். ரொறன்ரோகல்விச் சபை உறுப்பினராகபார்த்திகந்தவேல் இந்தத் தேர்தலில் தெரிவானார்.
கடந்தவருடம் நடைபெற்றநகரசபைத் தேர்தலில் பெருமளவில்தமிழர்கள்போட்டியிட்டமைவளர்ந்துவரும் ஒருசமூகத்தின் எடுத்துக்காட்டாகஅமைந்தது.அதேவேளைபோட்டியிட்டவர்களில் மிகக்குறைந்தசதவீதமானவர்கள் மாத்திரம் வெற்றிபெற்றதைஎவ்வாறுவகைப்படுத்துவதுஎன்றகேள்வியும் ஒருவளர்ந்துவரும் சமூகமாகஎதிர்கொள்ளப்படவேண்டியதே.
முப்பதுஆண்டுகளுக்குமேலாககனடாவைமையமாககொண்டதமிழர்களின் வாழ்வியலில் இதுவரையிலும் அரசியல் வெற்றிகளில் தாமதம் ஏற்பட்டமைக்குதகுந்ததலைமை இல்லாததைமுதல் காரணமாகவும் ஒற்றுமையின்மையை இரண்டாவதுகாரணமாகவும் பதிவுசெய்யவேண்டும்.
இவை தவிரவும் அரசியலில் தமிழர்கள் ஒரு இனமாகபலம்பெறாததற்குபலகாரணங்கள் உள்ளதாகவேஎண்ணுகின்றேன்.
சரியானவர்கள் தம்மைஅரசியலில் ஈடுபடுத்தமுன்வரவில்லைஎன்பது இதில் பிரதானமானது. ஒருவகையில் இது சமூகத்தின் மீதானஒருவிமர்சனமாகவும் அமையும். சரியானவர்கள் முன்வராமைக்குகாரணம் அவ்வாறுமுன்வந்தவர்கள் திட்டமிடப்பட்டுதோற்கடிக்கப்பட்டகடந்தகாலகசப்பானஉண்மைகளையும் ஏற்றுக்கொண்டாகவேண்டும். கலாநிதி இலகுப்பிள்ளை இந்தக் கூற்றுக்குஒருசிறந்தஉதாரணமாகும். இதுவரைகாலமும் தமிழர்களைபிரதிநிதித்துவப்படுத்துவதாகதம்மைஅடையாளம் காட்டியவர்களின் பிழையானவழிநடத்தலைகேள்விக்குஉட்படுத்தாமல் இருந்ததுசமூதாயத்தின் மீதானகுற்றச்சாட்டாகும்.
இனியும் இவ்வாறானதவறுகள் நடைபெறாமல் இருப்பதுஅவசியாகும்.புலம்பெயர் தேசத்தில் ஒரு இனத்தின் வளர்ச்சியில் அரசியல் பதவிகளும்அவசியமானவை. இதனைகருத்தில்கொண்டுதமிழர் நலன் அமைப்புக்களின் நகர்வுகள் அமையவேண்டும்.கட்சிசார்ந்ததாக இல்லாமல் இனம் சார்ந்ததாகதகுந்தவேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுஅவர்கள் கனடாவின் அனைத்துக் கட்சிகள் சார்பிலும் தமிழர்கள் செரிந்துவாழும் தொகுதிகளில் போட்டியிடும் நிலைஉருவாக்கப்படவேண்டும். தமிழர்களின் வாக்குகளைகுறிவைக்கும் கட்சிகளிடம் தமிழ் வேட்பாளர்கள் களம் இறக்கப்படவேண்டும் என்றகோரிக்கைமுன்வைக்கப்பட்டுதகுந்தவேட்பாளர் வெற்றிபெறுவதற்கானநகர்வுகளில் தமிழ் அமைப்புக்கள் தம்மைஈடுபடுத்தவேண்டும்.
கடந்தசிலவருடங்களாகவேதமிழர்கள் பலரும் அரசியல் ஈடுபடும் தமதுஆர்வத்தைவெளிப்படுத்திவருகின்றனர். தேசிய,மாகாணமற்றும் மாநகரரீதியில் தேர்தல்களில் பலதமிழ் முகங்கள் வாக்குவேட்டையில் ஈடுபடுவதுமகிழ்ச்சியே.
இவ்வாறானஅரசியல் ஆர்வம் உள்ளவர்களை இனங்கண்டுஅதற்கானபயிற்சிகளைவழங்கிஅனைத்துக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடுவதற்கானவாய்ப்புக்களைஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் கனடாவில் இயங்கும் தமிழ் அமைப்புக்கள் நகர்வுகளைமேற்கொள்ளவேண்டும். இது தேர்தல் நெருங்கிவரும் சமயங்களில் முன்னெடுக்கப்படக்கூடியவிடயமல்ல. பலமாதங்கள் இதற்கானதயாரிப்புபணிகள் முன்னெடுக்கப்படுவதுதகுந்தவேட்பாளர் தமிழர் பிரநிதியாககளம் இறக்கப்படுவதைஉறுதிசெய்யும். ஒரு இனமாகதமிழர்கள் அரசியலில் வெற்றிபெறுவதற்கும் ஒரு இனமாகஅதிகஎண்ணிக்கையில் அரசியல் பிரதிநிதிகளைகொண்டிருப்பதற்கும் இதுவேசிறந்தவழியாகும்.
தேர்தல் காலம் நெருங்கிவரதமிழ் வேட்பாளர்கள் களம் இறங்குவதும் அல்லது இறக்கப்படுவதும் அதன் பின்னர் அவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைந்துகொள்வதும் அரசியலில் தகுந்தவழிமுறையல்ல. இதுவரைகாலமும் வேட்பாளர்களாககளம் இறங்கியுள்ளஅல்லது இறக்கப்பட்டுள்ளசிலர் சுயநலம் மிக்கதமதுகாரணங்களைமறைத்துதமிழ் நலம் பேசுவதுவேடிக்கையானது. தமிழரின் “எதிர்காலமாக”விளம்பரப்படுத்திஅதன் மூலம் சுயலாபம் பெறும் அரசியல்வாதிகள் அடையாளம் காணப்படவேண்டும். ஆனாலும் இவை எல்லாம் இன்றுடன் முடியப்போவதொன்றல்ல.
இந்த இடத்தில் இன்னுமொருவிடயத்தையும் பதிவிடவேண்டும். ஏற்கனவேபலதடவைகள் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் முகம் காட்டுவதுஅவர்களின் ஆசனப் பசியைமாத்திரமேகாட்டுகின்றது.
இனரீதியாகவாக்குவேட்டையில் ஈடுபடும் தமிழர்கள் மாநகர,மாகாணமற்றும் தேசியரீதியில் தமிழர்களைமாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லைஎன்பது இங்குகவனத்தில் கொள்ளத்தக்கது.
மீண்டும் அதேகேள்விதான் எங்கள் முன்வந்துநிற்கின்றது
தமிழருக்காககட்சியா
கட்சிக்காகதமிழரா
நடைபெறப்போகும் தேர்தல் தரப்போகும் பதில்களில் இந்த இரண்டுகேள்விகளுக்கானபதில்களும் அடங்கியிருக்கும்.
(இலங்கைதாஸ் பத்மநாதன்)