தேசியம் தோற்கடிக்கப்பட முடியாது

அதனைத் தொடரந்து அங்கு உருவான அரசியல் முக்கிய அமைச்சர் பொறுப்பை யும் கீயூபா மத்திய கங்கியன் பொறுப்பையும் ஏற்று மக்களுக்கு தொண்டாட்ரினார் சேய்கோர சிறிது காலத்தின் பின்பு அந்த அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தென் அமெரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் புரட்சியை ஏற்படுத்தும் போராட்ட வாழ்விற்கான பயணத்தில் பொலிவியாவில் வைத்து இந்த புரட்சியாளின் அருமை தெரியாது காட்டிக் கொடுப்பின் மூலம் கொல்லப்பட்டான்.

கியூப தேசியத்தின் விடுதலைக்காக தன்னை அர்பணித்த போராளி ஒரு தேசியத்திற்குள் தன்னை குறுக்கிக் கொள்ளாது தேன் அnமிர்காவில் உள்ள பல நாடுகளின் விடுதலைக்காக புறப்பட்ட அவனை இது சர்வ தேசியவாதியாக உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கு ஏற்புடமையாக்குவதற்கு காரணமும் ஆயிற்கு.

ஈழத்தில் தோழர் பத்மாநாபா ஈழம் என்ற தனி நாட்டுக் கொள்கையிற்கான தன்னை பிரித்தானியாவில் இருந்து தாயகம் திரும்பி போராட புறப்பட்டதும் தலமை தாங்கியதும் ஈழம் என்ற தனிநாட்டிற்காக மட்டும் அல்ல.

மாறாக இலங்கை முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான இலங்கை புரட்சியை நடாத்துவதற்கும் இதற்கும் அப்பால் சர்வ தேசியவாதியாக செயற்படுவதற்காகவும்.

தமிழ் பேசும் மக்கள், சிங்களம் பேசும் மக்கள் என்ற இருதரப்பு பாட்டாளிவர்க்கமும் ஒன்றாக கரம் கோர்த்து போராடும் நிலமையை ஏற்படாது பேரினவாதம் தமிழ் சிங்களம் என்றாக பாட்டாளிவர்க்கத்தை அப்போது பிரிந்தாண்டு கொண்டிருந்தது.

எனவே ஈழத்தின் விடுதலை அதுவும் தொழிலாளிவர்க்கம் சார்ந்த இடதுசாரி விடுதலை அது தனிநாடாக முதலில் போராடுதல் இதன் பின்பு தமிழ் பேசும் மக்களைக் காரணம் காட்டி சிங்களப் பாட்டாளி வர்க்கத்தை ஏமாற்முடியாத நிலமை சிங்களப் பேரிவாதத்திற்கு ஏற்படும்.

அப்போது சிங்களப் உழைக்கும் வர்க்கம் தனது விடுதலைக்காக உரிமைகளுக்காக வாழ்விற்காக போராட புறப்படும் போது அவர்களும் தமிழ் பாட்டாளிவர்க்கமும் இணைந்த கரங்களாக இலங்கை முழுவதற்குமாக புரட்சியாகப் போராடுதல் என்பதான் இடதுசாரிப் பாதையைக் கொணடிருந்தார் தோழர் நாபா.

இந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவரின் அன்றைய ஈழவிடுதலை அமைப்பும் அவர்களின் விடுதலை இயக்கத்தின் பேராளர் மகாநாட்டில் அதற்கான கொள்கைப் பிரகடனம் வேலை திட்டங்களை வகுத்துக் கொண்டு மக்கள் மத்தியல் இயக்க வேலைகள் செய்யப் புறப்பட்டனர்.

இவை எல்லாம் ஆவணமாக இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக சர்வ தேசம் எங்கும் நடைபெறும் தொழிலாளர் வரர்க்கப் போராட்டங்கள் முற்போக்கு தேசவிடுதலை என்பதாக நிக்ரகுவா பாலஸ்தீனம் தனது ஆதரவு தொடர்புத் தளத்தை விரிபடுத்தி செயற்பட்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியான சர்வதேச பாசறைகளில் அவர்களுக்கு கிடைத்த பயிற்சியும்…. ஆதரவும் இந்திய இடதுசாரிகளின் தார்மீக ஆதரவும் ஒத்துழைப்புக்களும்.

உலக சூழல் நாடுகளுக்கிடையோன உறவுச் சமன்பாடுகள் மாறும் போது அதற்கு ஏற்ப தனது அரசியல் நகர்வுகளை செயற்பாடுகளை எடுத்தாகவே 1987 இல் ஏற்பட்ட இலங்கை இந்தி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை ஏற்றுக் கொண்டதும் அது ஈழத் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்திற்கு மட்டும் அல்ல இலங்கையில் உள்ள சகல மக்களுக்குமான அதிகாரப் பரவலாக்கம் என்பதாக 1987 உருவாகப்பட் 13 வது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவான மகாணசபையை எற்று செயற்பட வைத்தது.

இதன் படி ஐந்து அமைச்சர்கள் மாத்திரம் மட்டும் மகாணஅரசில் இருக்கலாம் என்ற மகாணசபை சட்டத்திற்கு ஏற்ப வடக்கு கிழக்கில் மூவின மக்களின் பிரசன்னம் பரம்பல் என்பதற்கு எற்ப அமைச்சர் அவையில் சிங்களவர் முஸ்லீம் தலா ஒருவர் என்றாகவும் ஏனைய மூன்று தமிழ் அமைச்சர்களை இணைத்தே அமைச்சர் அவையை அமைத்து தனது முன்னோக்கி நகர்ச்சியான செயற்பாடுகளை.

இனங்களுக்கிடையேயானா சமத்துவம் சகோதரத்துவத்தை வளர்க்கும் முன் முயற்சியில் ஈடுபட்டார் தோழர் பத்மநாபா.

இதன் ஆயுள் காலத்தை முடித்து வைப்பதில் ஆட்சியில் இருந்த அன்றைய ஈபிஆர்எல்எவ் உடன் சேர்ந்த கூட்டமைப்பு இயக்கங்கள் இரண்டைத் தவிர ஏனையோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து ஆயுத முனையில் அதனை இல்லாமல் செய்தனர்.

இதனை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டினை அன்றைய ஜனாதிபதி பிரேமதாச செயற்பட சிங்களப் பகுதியில் இதனை தடுப்பதற்கும் அன்றைய நிலையில் ஜேவிபி ஐ இந்திய மேலாதிகத்தின் செயற்பாடு என்பதாகவும் தமிழ் பகுதியில் எல்லா இயக்கங்களின் செயற்பாடுகளை அங்கீகரிப்பதா என்பதான புலிகளின் ஏக போக சிந்தனை செயற்பாடுகளை பாவித்தார்.

அரசியல் ரீதியிலான குழப்பத்தை ஏற்படுத்த பத்மநாபா இயகத்தில் இருந்து வெளியேற்றப்பட் அரசியல் பிரமுகர் ஒருவரை தமிழ் நாட்டுச் சிறையில் இருந்து விடுவித்துக் கொண்டு வந்து செயற்படுத்தி இணைந்த வடக்கு கிக்கு மாகாண சபையை இல்லாது செய்தல் என்றாக செயற்பட வைத்தது வரலாறு.

இதனைத் தொடர்ந்து தோழர் நாபாவை தமிழ் நாட்டு மண்ணில் வைத்து இன்னும் பெண் போராளிகள் உட்பட்ட 13 பேருடன் தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்தனர்.

சில வருடங்களுக்கு பின்னர் இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை நீதி மன்றம் மூலம் பிரித்தது என்றான செயற்பாடுகளை கொண்டவைதான் வரலாறு இவை அனைத்தும் ஆவணமாக உள்ளன.

இங்கு இணைந்த வடக்க கிழக்கு மாகாணசபை தறித்து வீழ்த்தப்பட்டு கிட்டத்தட்ட 34 வருடங்கள் ஆகின்றது.

அன்று யார் யார் எதிர்தார்களோ இந்த மகாணசபையை அவர்கள் அனைவரும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அதன் பதவிகளுக்காக முன்வரிசையில் நின்று ஓடுபவர்களாக மாறியும்விட்டனர்.

தமிழ் தேசியத்தின் செயற்பாட்டாளன் என்ற நிலையில் இருந்து இலங்கைத் தேசியம் என்றான முற்போக்கு பாத்திரத்தை நோக்கி நகர்வதாகவும் ஆரம்பிக்கப்பட்டு சர்வ தேசியவாதியாக தோழர் பதம்நாபா தோழர் சேகுவேரா மாதிரி இன்று இந்த வரலாற்றுடன் உண்மையாக பயணித்தவர்கள் பேசும் அளவிற்கு உயர்ந்தும் நிற்கின்றார்.

இதனை இலங்கை வாழ் இடதுசாரித் தலைவர்கள் புரிந்த அளவிற்கு மேலாக இந்தியத் இடதுசாரித்த தவைலவர் புரிந்து வைத்திருப்பதன் வெளிப்பாடுகள்தான் கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், தோழர் நல்லகண்ணு போன்றவர்களுடன் இணைந்தான செயற்பாடுகள்… பயணங்கள்.

இதனைத்தான் தோழர் பாஸ்கரன் தனது இன்றைய தோழர் பத்மநாபா பற்றிய கட்டுரையில் வெளிப்படுத்துகின்றார்.

(அவரின் கட்டுரையை முழுமையாக வாசிக்க முதலாவது கருத்திடல் பகுதியல் இணைப்பைக் கொடுத்துள்ளேன்)
தேசியம் தோற்றுவிட்டதா..? தமிழ் தேசியம் தோற்றுவிட்டதா என்பதற்கான பதிலாக புத்மநாபாவின் போராட்ட வரலாறும் அவரின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் பதிலாக அமையும்.

அவரின் மரணம் வரை ஏன் இன்று வரை இலங்கை அரசு அவர் மீதான இலங்கையின் புரட்சிற்கு போராடினார் என்ற குற்றவியல் வழக்கை திரும்பப் பெறவில்லை. மாறாக அன்றைய இலங்கை அரசு ஈழவிடுதலை அமைப்புகள் (சிறப்பாக நாபா தோழரின்வேண்டுகோளுக்கு அமை)ய அனைத்து(கவனிக்க) ஈழவிடுதலைப் போராளிகளுக்குமான பொது மன்னிப்பை இந்தியாவின் துணையோடு பெற்றுக் கொண்டதும் வரலாறு.

உண்மையில் இம் முறை இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் குறும் தேசியவாதம் அடிவாங்கி இருக்கின்றது. ஆனால் இன்னும் சில பகுதிகளில் அப்பாவி மக்கள் உண்மையான தேசியத்தைப் பற்றி புரிதல் இல்லாமல் தேர்தலில் சில ஆசனங்களை வழங்கி வாழ் வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மையே.

அதனைத்தான் தனது தேர்தல் வெற்றியிற்கு பின்னர் சாணக்கியன் ‘…. நாடு அனுராவிடம் மட்டக்களப்பு தமிழரசிடம்…’ என்றாக தனது கருத்தாக வெளியிட்டும் உள்ளார்.

அதுபோல் இரண்டு ஆயுதப் புரட்சிகளை செய்ய முற்பட்ட ஜேவிபி எவ்வாறு எழுந்து வந்தது என்பதற்கு பதிலாக விரிவான பதிவுகள் செய்யப்பட வேண்டும். அவர்களின் கட்சிக் கட்டமைப்பு அதுசார்ந்த செயற்பாடே பிரதான காரணியாகும்.

இதற்கு அப்பால் தோழர் நாபா போன்றவர்களின் படுகொலை நிகழாது அவர் இன்றும் வாழ்ந்திருந்தால் நிச்சயம் இன்று தமிழர் தரப்பிலும் அது தனித் தமிழாக இல்லாது இருந்தாலும் இதற்கும் அப்பால் சிறுபான்மை மக்களின் தலமைத்துவம் புத்தாக்கம் அடைந்து எழுந்து நின்று இருக்கும் இன்னும் வீச்சாக.

ஈழவிடுதலையில் பல தலைவர்கள் பலரை இலங்கை இராணுவதற்கு அப்பால் எம்முடன் இருந்தவர்கள் செய்த கொலைகள் இல்லாமல் செய்ததன் இடைவெளி இதுவரை 35 வருடங்களா ஏன் சிறப்பாக கடந்த 15 வருடங்களாக புத்துயிர்ச்சியுடன் எழுந்து வரமுடியாமல் திணிறுவது இதனால்தான்.

இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் சனத் தொகையில் பல போராளிகள் திறமையானவர்கள் எஞ்சியவர்களாக மேற்கத்திய நாடுகளுக்கு சிங்கள் மக்களை விட அதிகளவில் இரு தரப்பு பாதுகாப்பு பிரச்சனைகளால் இடம்பெயர்ந்தும் விட்டனர்.

வீச்சாக சிங்கள மக்கள் அல்லது ஜே.வி.பி இலங்கை அரசு என்றாக ஒரு தரப்பு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்த போராட்ட வரலாற்றை கொண்டிருந்த போது ஈழப் போராளிகள் இரு தரப்பு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள் வாழ்ந்தபடியால் இடதுசாரி ஜனநாயக ஈழவிடுதலைப் போராளிகள் பலர் அதிகளவில் இலங்கையை விட்டு பாதுகாப்புக் காரணங்களால் இடம் பெயர்ந்து அல்ல மௌனமாக்கப்பட நிலமைகளை தொடர்ந்ததே யதார்த்த நிலமை.

இதனால்தான் யுத்தம் முடிந்த பின்பு 15 வருடத்தில் வேகமாக எழுத்து வர முடியவில்லை என்ற யதார்த்தம் இதற்கான காணரங்களில் பிரதானமானது என்பது புரியப்பட வேண்டும்.

இது உண்மையில் 1990 இற்கு பினரான தோழர் நாபாவின் கொலைகளுக்கு பின்னர் மேலும் மேலும் தமிழ் பகுதிகளில் மாற்றுக் கருத்தாளர்களைத் தேடி அழித்தல் என்ற புலிகளின் செயற்பாடுகள் அதிகம் இடதுசாரிச் செயற்பாட்டாளர்கள் பலவீனப்பட்டுப் போவதற்கு பிரதான காரணத்தை ஏற்படுத்திவிட்டது.

இதுவே இன்று ஜேவிபி இனால் எழுந்து வர முடிந்தது ஏன் தமிழ் பேசும் தரப்பில் இருந்து இவ்வாறான எழுந்து வரலை ஏற்படுத்த முடியவில்லை என்பதற்கான விளக்கமாக அமைகின்றது.

தோழர் நாபாவின் பிறந்த தினமாக இன்று அடையாளமாக இந்த விடயத்தை இவ்விடத்தில் பேச விளைகின்றோம்.

இதற்கும் அப்பால் 1989 இணைந்து வடக்கு கிழக்கு மாகாணசபை அமைந்த சூழலும் அதனைப் பொறுப்பேற்று அனுபவம் ஏதும் அற்ற மாகாணசபை உறுப்பினர்களுடன் வழங்கள் ஏதும் அற்ற மகாணசபையைக் கட்டியமைத்த மாகாண அரசிற்கும் இன்று அனுரகுமார திசநாயக்கா தலமையிலான் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசுகும் இடையிலிலான ஒற்ற்றுமை வேற்றுமைகளை மத்திய அரசு மகாண அரசு என்பதற்கு அப்பால் ஒரு பார்வையாக இதனைக் தொடர்ந்து எழுதுவது என்பது…..

தோழர் நாபாவின் வாழ்தல் என்பது எவ்வளவு தேவையாக இன்னமும் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள உதவலாம் என்பதினால் அதனை பதிவு செய்யலாம் என்றுள்ளேன்.

ஈழத்தின் செம்மண பிரதேசத்தில் ஆரம்பித்து வன்னி நிலப்பரப்பு கன்னாட்டி மட்டக்களப்பு, அம்பாறை என்றாக களப்பு வயல் என்றான அவரின் மக்களைச் சந்திக்கும் பயணங்களுடன் ஆரம்பித்து மலையகம் என்றான அவரின் மக்களின் தொழிலாளி வர்க்கத்துடனாக உறவுகள் ‘சே’யை நினைவூட்டுவதாக அமைகின்றது.

அவருடன் பல தடைவ தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கு திராவிட செயற்பாட்டாளர்கள் பெரியாரிஸ்ட்டுக்கள் இடதுசாரிக கம்யூனிஸ்ட் இந்திய தேசியக் கட்சிகள் என்றாக பொது மக்களை சந்திக்கும் வேளைகளில் கிடைத்து அனுபவம் தென் அமெரிக்க முழுவதற்குமான சேயின் மோட்டார் சயிக்கிள் பயணத்துடன் ஒத்த உணர்வை எனக்குள் எற்படுத்தியும் இருக்கின்றது

சேயின் பயணம் அது அர்ஜென்டினா, சிலி, பெரு, ஈக்வடார், கொலம்பியா, வெனிசுலா, பனாமா, மற்றும் மியாமி, புளோரிடா ஆகிய இடங்கள் வழியாக குவேராவை 20 நாட்கள் பயணத்தைக் கொண்டது.

பயணத்தின் முடிவில், அவர் லத்தீன் அமெரிக்காவை தனி நாடுகளின் தொகுப்பாக பார்க்காமல், கண்டம் தழுவிய விடுதலை உத்தி தேவைப்படும் ஒற்றை அமைப்பாக பார்க்க வந்தது.

ஒரு பொதுவான லத்தீன் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ளும் எல்லையற்ற, ஒன்றுபட்ட ஹிஸ்பானிக் அமெரிக்கா பற்றிய அவரது கருத்தாக்கம் அவரது பிற்கால புரட்சிகர நடவடிக்கைகளின் போது மீண்டும் மீண்டும் ஒரு கருப்பொருளாக இருந்தது.

இந்த அனுபவங்கள் எமது விடுதலைப் போராட்டத்தை மேலெழுந்து வருவதற்கும் உந்து சக்தியாக அமைந்தது என்பது தோழர் நாபா எமக்கு விட்டுச் சென்ற செய்தியாக நிச்சயம் கொள்ளலாம்
தோழர் நாபாவின் வார்த்தைகளில் தேசியம்…. சர்வதேசியம் என்றாக தோற்கவில்லை என்பதே உண்மை.