இதே நேரத்தில் புள்ளி விபரங்களின்படி வயதானவர்கள் தான் தொற்றுக்கு உள்ளாகிறார்கள் என கூறப்பட்டாலும் கூட நாம் அறிய பல இளையவர்களும் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மார்ச் மாத கடைசி புள்ளி விபரங்களின்படி கொரோனாவே முதலாவது, பிரதான இறப்புக்கான காரணியாக அறியப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு வேறு அடிப்படை காரணிகளால் (நோய்களால்)அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தமையே இறப்புக்கான பிரதானமான காரணமாக கூறப்பட்டுள்ளது.
இதில் பிரதான காரணியாக இருதய நோய் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய காரணங்களாக ஆஸ்த்மா, நீரிழிவு, ஞாபக மறதி அடுத்தடுத்த காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம் இறந்த ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்காகும். சாதாரண நிலைமையிலேயே ஆண்களின் ஆயுட்காலம் பெண்களை விட குறைவானதாகும். இந்த நிலை இந்த நுண்ணுயிரின் தாக்க நேரத்தில் மிகைபடுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக எடுத்து நோக்குமிடத்தில் இந்த நெருக்கடியான காலகட்டதில் உலகளாவிய ரீதியில் இரண்டு விடயங்கள் நோய் தடுப்புக்கு பிரதான காரணமாக உள்ளன. முதலாவது சமூக தனிமை, அதாவது வீடுகளிலேயே இருப்பதும் அத்திவாசியமில்லாமல் கூடுவதும் தவிர்க்கப்படுதல். இரண்டாவது முக கவசம் அணிவது. இதைவிட வெற்றிகரமாக, நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாடுகளில் தொற்று அடையாளம் காணப்பட்டமையும் தொற்று உள்ளவர்கள் தனிமைபடுத்தப்பட்டமையும் நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் மிக பிரதானமான நடவடிக்கைகளாக கருதப்படுகிறது.
எமது அன்பானவர்கள் பல இடங்களிலும் எம்மை சுற்றியும் மரணமடையும்போது நாம் எமக்காகவும் எமது குடும்பத்திற்காகவும் பொறுப்பாக நடந்து எம்மையும் நாம் சார்ந்த சமூகத்தையும் காக்க வேண்டும்.