இந்த பகிடி வதை உதட்டளவில் இல்லாமல் உடலளவில் பரவி உள்ளத்தில் பெரிய வக்கிரகங்களை உருவாக்கியிருக்கின்றது ஒரு சில மாணவர்களிடத்தில். இவர்கள் ஒரு வகை மனநோயாளிகள்.
தாம் சீனியர் எம்மை ஒன்று செய்ய இயலாது மாணவர் ஒற்றுமை மூலம் எம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்று நிர்வாணங்களை பார்ப்பதற்கான மன நோயாளிகளாக மாறி செய்த கைங்கரியகள் இன்று மாணவியின் மரணத்திலும் இன்னும் பல மாணவர்களை மன உழைச்சல்களுக்கும் இழுத்துச் சென்றிருக்கின்றது.
இது நடைபெற்றிருப்பது யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சியில் அமைந்த பீடத்தில்
மனிதன் நாகரீகம் அடைந்ததன் வெளிப்பாடாக நிர்வாணத்தை மறைக்க உடையணிதல் என்ற அடிப்படைத் தேவைக்கு பெ;பால் உள்ள நாகரீக வளர்ச்சிக்குள் வந்துவிட்டான். அதிலும் பெண்கள் மேற் சட்டை அணியக் கூடாது அவ்வாறு அணிந்தால் தண்டம் அறவிடப்படும் என்று இருந்த நிலையில் தனது மார்பகங்களை அறுத்தெறிந்து போராடிப் பெற்ற விடுதலைதான் நிர்வாணமற்ற ஆடையணிதல்.
இதனைத் துறந்து என் முன்னே காட்சிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும் வக்கிரம் மன நோயாளிவை விட வேறு எவரிடம் எதிர்பார்க்க முடியும். சினிமாத்துறையிலும் இதே நிலமைகள்தான் சீனியரி;டம் எல்லாவற்றையும் அவிழ்த்துக் காட்டினால்தான் வாய்புகள் வரும் என்ற சூழலே இன்று பலம்மிக்க ஊடகத்துறையொன்று; இதில் வேலைசெய்யும் பெண்கள் மரியாதைக்குரியவர்கள் அல்லர் என்ற வரைக்கும் கொண்டுவந்திருக்கின்றது.
இதற்கான மீரூ போராட்டங்கள் ‘கள்ளிக் காட்டு இதிகாசங்களை”க் காட்டி மறைக்க முற்பட்டிருப்பதுவும் ஒருவகை மனநோயின் வெளிப்பாடுதான். இதனால் பலர் வக்கிரங்கள் புனிதர்கள் ஆக்கபட்டிருக்கின்றனர்.
1980 களில் இதே பல்கலைக் கழகத்தில் மாற்றுக் கருத்தை கூறியவர்கள் இழுத்துச் செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்டதை கொண்டாடியதும் இதே பல்கலைக் கழகம்தான். பெருவாரியான மாணவரகளின் உடன்பாடுகள் இல்லாவிடினும் இதற்கான மௌனங்கள் இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்வதற்கு ஆதாரமாகின.
இவை ரமணிகளை தற்கொலை செய்வதற்கும் செல்விகளை காணமல் ஆக்குவதற்கும் வழி வகுத்தன. இது விரிவுரையாளர் ராஜினியில் கொலைகளை கொண்டாடவும் வைத்தன. ஒரு சமூகத்தின் அவலங்களாக இவை அரங்கேறி பலரின் மௌனங்களால் அவை நியாயமும்; ஆக்கப்பட்டன.
தனது வீட்டில் வேலைக்கு அமர்த்திய மலையகத்து சிறுமியை பல தடவை பலாத்காரம் செய்த விரிவுரையாளரை இந்த கல்விச் சமூகம் ஈர்க்கு கட்டால்(விளக்குமாறு) அடித்து விரட்டவில்லை மாறாக சமூகத்தின் விழாக்களில் மாலை போட்டு பிரதம விருந்தினர் ஆக்கியது. இவை அவலங்களைத் தவிர வேறு என்ன. இவற்றைத் தவறென்று மௌனப் புலம்பல்களே துப்பாக்கிகளின் பிரசன்னத்தில் சாத்தியமாகின.
எமக்கு பல்கலைக் கழகம் வேண்டாம் என்று கூறியதே 1970 களில் எமது அன்றைய ‘தேசியம்”. இதனையும் மீறி உருவாகப்பட்டு இன்று கிளிநொச்சி வரை பரந்து சகல பீடங்களையும் தன்னகத்தே கொண்டு இலங்கையின் இரண்டாவது பெரிய பல்கலைக் கழகமாக உயர்ந்திருக்கும் யாழ் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் சமத்துவம் பேசுபவர்.
சிவப்பை நம்புபவர் என்பதற்காக மேற்குலக சகா ஜே.ஆர் பதவிக்கு வந்ததும் எமது அன்றைய ‘தனிநாடுகள்” மக்களை சுத்தி வித்தி ஐ துணைவேந்தர் ஆக்கியதும் இங்கு வரலாறு.
இங்கும் உலகம் போற்றும் பேராசியரின் மன உழைச்சல்களும் மௌனமாக தான் உண்டு தன்வேலை உண்டென்று ஒதுங்க வைத்த ‘றாக்கிங்’ அரங்கேறாமல் இல்லை.
இதற்கு நானும் என் வாழ்நாளில் கண்ட சாட்சி. என்ன நீதி மன்றம் ஏறவில்லை அன்று. ஏறியிருந்தால் வரலாறு அவரை விடுதலை செய்திருக்கும் அன்றே.
கைலாசபதி கலையரங்கம் என்று மண்டபம் மட்டும் மரணத்தின் பின்பு கட்டி ஆறுதல் பரிசு ஒன்றை வழங்கியதை தவிர இந்த கல்விச் சமூகம் வேறு ஒன்றும் செய்யவில்லை அந்த சமத்துவ பேராசிரியருக்கு.
டெல்லி நேரு பல்கலைக் கழகங்கள் போல் சமூக அக்கறையுடன் சம காலத்து பிரச்சனைகளை கையில் எடுத்து தலமைத்துவமும் போராட்ட வடிவமும் கொடுத்த யாழ் பல்கலைக் கழகம் 1980 களின் நடுப்பகுதியுடன் தனது செயற்பாட்டை சுருகத் தொடங்கி அறம்சார்ந்த செயற்பாடுகள் உலர்து உதிர்து போய் கொண்டிருக்கின்றது.
என்ன தண்ணியா ஊற்றி வளர்த்தாய் சர்வேஸ்வரா என்று கேட்டால் நாம் கண்ணீரே ஊற்றினோம் என்று அங்கு படித்த பல நல் மாணாக்கர கூறுவதை நான் இன்றுவரை கேட்டுவருகின்றேன்.
இதன் தொடரச்சியாக இன்று இந்தப் பல்கலைக் கழகம் ஆரம்ப காலங்களின் மறுவளமாக உருப்பெற்று போரின் பின்னரும் தூவானம் விடாது குதிரைகளின் ஆதிகத்தில்தான் உள்ளது பல விரிவுரையாளர்களின் பேட்டிகள் கலந்துரையாடல்கள் இதனைப் பறைசாற்றி நிற்கின்றன. இதற்கு விதிவிலக்கானவர்கள் இல்லாமலும் இல்லை.
இந்த பிறழ்ச்சி பகிடிவதை மரணங்களை தடுத்து நிறுத்தும் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை என்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல.
இந்திரபாலா, நுர்மான், கைலாசபதி, ரொனி இராஜரட்னம், சிறீதரன் போன்றவர்களின் நற்சிந்தனையில் உருவாக்கப்பட்ட அறம் சார்ந்து செயற்படும் மாணவர்கள் இன்று கல்விச் சமூகத்தில் தலைமைப் பொறுப்பில் இல்லை. துப்பாக்கி சனியன் செய்துவிட்டுப் போன கட்டாய மௌங்கள் இவை.
சுயநிர்ணய உரிமைக்கான வாக்குப் பதிவுகளுக்காக 1977 களில் பல்கலைககழக பகிஷ்கரிப்புடன் வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு உலகிற்கு 75 வீதற்கு மேற்பட்ட மக்கள் தமது சுயநிர்ணய உரிமை வலியுறுத்துகின்றனர் என்று வலியுறுத்திய போராளிகளை தன்னத்தே கொண்டது இந்தப் பல்கலைக கழகம்.
சுயநிர்ணயத்தை விட்டு மாவட்ட சபைகளை ஏற்ற போது கொடும்பாவி எரித்து தமிழ் துரோகிகள் பட்டம் பெற்று சிறில் மத்தியூவின் பாராளுமன்ற குரலான ‘…..யாழ் பல்கலைக் கழகத்தில் படிப்பவர்கள் குதிரை ஓடி வந்தவரகள்….” என்பதை வழி மொழிந்தன எமது விடுதலை கூட்டமைப்பினர கொழும்பில்.
நியாங்களுக்காக அறம் சாரந்து செயற்பட்ட யாழ் பல்கல்கழகத்தின் சிந்தனைப் பிறழ்ச்சிதான் இந்த நிர்வாணஙங்களும் புகைப் படங்களும் பிழையான ‘தொடுதல்கள்” உம் அதனை ஒட்டிய மரணங்களும். இலத்திரனியல் ஊடகங்கள் இவற்றிற்கு சான்று பகர்கின்றன.
தான் படித்த பல்கலைக் கழகத்தில் பரீட்சை எழுத முடியாமல் எதரியின் சிறைச்சாலையில் பரீட்சை எழுதியதில் ஒரு நியாயம் இருக்கின்றது. ஏன் எனில் எதிரி அவ்வாறே செயற்படுவான்.
ஆனால் எமது பல்கலைக் கழகத்தில் பரீட்சை எழுத பாதுகாப்பு இல்லை என்று அமைதி காக்கும் படை முகாமில் பரீட்சை எழுதவேண்டிய துப்பாக்கிய நிலமையிற்கு யாழ் பல்கலைக் கழக நிர்வாகம் வளர்ச்சியடைந்ததன் வடிவங்களே இன்று மரணத்தில் முடிந்துள்ள மளநோயாளிகளின் பகிடி வதை கொலைகள். இது ஒரு பரிணாம வளர்ச்சின் வெளிப்பாடுகள்.
இது போன்ற தவறுகள் மாணவர்களின் ‘ஒற்றுமை”, ‘தேசியம்” என்று கூறிக்கொண்டு தொடர இந்த கல்விச் சமூகம் தொடர்ந்தும் அனுமத்திக்கப் போகின்றதா….? அல்லது சகல தரப்பினரும் இணைந்து பல்கலைக கழகத்தின் பெரும்பான்மை மாணவர்களின் நியாமான பகிடி வதைக் கொலை எதிர்ப்புக் குரல்களை வெளிக் கொணரும் தலமைத்துவத்தை கொடுத்து நாம் முன்நகர்த்தப் போகின்றோமா…? என்பதே தற்போதைய கேள்வி.
நாம் தற்போது செய்ய வேண்டியது இரண்டாவதை.
கிராமங்களில்… தூர இடங்களில்… பல்வேறு ஒடுக்குமுறை வசதியீனங்கள் என்று ஒதுங்கிய நிலையில் இருந்து பரீட்சை வெற்றி மூலம் பல்கலைக் கழகம் வரும் இந்த புதிய மாணவர்களை புதிய சூழலுக்குள் தைரியமாக செயற்படுங்கள்….
நாங்கள் இருக்கின்றோம்… சகல உதவிகளையும் செய்வோம்…. தோளோடு தோள் கொடுக்கும் தோழர்களாக இருப்போம் என்று அறிமுகமாகி அளவளாவி அன்பை பரிமாறி பேச்சும் குதூகலிப்பும் நம்பிக்கையுடன் உயர்கல்வி வாழ்கையை ஆரம்பிக்க கை கொடுக்கும் வரவேற்பை கொடுக்க வேண்டும்.
இதற்கு பதிலாக நீ அந்நியன் தான். நீ யூனியர்தான் குறைவானவன்தான் உன்னை நான் துன்புறுத்தினால் கேட்பதற்கு நாதியற்றவள்(ன்) நீ என்ற மனநிலையை ஏற்படுத்தி மன உழைச்சலுக்குள் தள்ளி தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கு மாணவர்களே தங்களின் நிலை புரிகின்றது எமக்கு.
இந்த ஒரு சில வீணர்களைத் தவிர ஏனைய எல்லோரும் நல்லவர்களே அவர்களோடு இணைந்து நாம்(நீங்கள்) பயணித்து இங்கு பல்கலைக் கழகத்தில் உயர்கல்வியைப் பயின்றி இந்த சமூதாயத்திற்கான கடமைகளுடன் எனது குடும்பத்திற்கான கனவுகளையும் நிறைவேற்றலாம் என்று நம்பிக்கையுடன் தைரியத்துடன் பயணியுங்கள்.
மாறாக மரணம் இதற்கான தீர்வு அல்ல. அந்த தீர்பை எழுத வைத்தவர்களுக்கும் அந்த அருகதை இல்லை. தங்களுக்கும் அவசரப்படும் அளவிற்கு ஒன்றையும் நீங்கள் இழந்து விடவில்லை. இருந்து சாதித்துக் காட்டுங்கள் அதுவே குறைந்த பட்சம் தங்கள் குடும்பத்திற்கு பெற்றேர்ருக்கு இந்த சமூகத்திற் நீங்கள் ஆற்றும் மகத்தான் பிரதி உபகாரம் ஆகும்.
வாருங்கள் மாணவ செல்வங்களே என்றும் எம்மைப் போன்ற முகமறியா இலட்சோதி இலட்சம் உறவுகள் அன்புகள் மக்கள் உங்களோடு பக்க பலமாக எப்போதும் இருப்போம். மரணம் இதற்கான தீர்வு அல்ல.
இதே பல்கலைக கழகத்தின் கற்ற மாணவர்களில் பலரும்தான் எமது மக்களின் விடுதலைக்காக தம்மை அரப்;பணித்து உயிர்த் தியாகம் செய்தவர்கள். இன்னும் பலர் உயிருடன் உயிர்ப்புடன் செயற்பட்டு வருகின்றனர். மாகாண சபைகளின் முதல்வராக இருந்தவர்கள். தொடர்ந்தும் சமதர்ம சமூகம் ஒன்றை அமைப்பதற்கான அடித்தளங்களை இடப் புறப்பட்ட பல மாணவர்கள் இந்தப் பலகலைக் கழத்தில் செதுக்கப்பட்டவர்கள்தான்.
அவர்களை நாம் முன்னுதாரணமாக கொண்டு வட மாகாணம் எங்கும் பரந்திருக்கும் தமிழ் மக்களின் அடையாளமா விளங்கும் இந்த பல்கலைக கழகத்தை செழுமைப்படுததி எமது மக்களுக்கான சரியான நியாதாதிக்கம் உடைய தலமைத்துவத்தை கொடுக்க எமது சக்திகளை பயன்படுத்தவோம.; இதை விடுத்து வதைகளும்….. கொலைளும்…. மரணங்களும்….சுயமரணங்களும் எமக்கு தேவை இல்லை. வாருங்கள் சகாக்களே இணைந்த கரங்களாக பயணிப்போம்.