கும்மடி விட்டல்ராவ் ஆந்திராவின் மாவோயிஸ்ட் எழுச்சியின் ஓர் அங்கம். கத்தார் என்ற புனைப்பெயர் தாங்கி ( கத்தார் என்றால் புரட்சி என்று பொருள் ) அவர் புரட்சிகர பாடல்களைப் பாடும்போது லட்சக்கணக்கான மக்கள் மெய்சிலிர்த்தார்கள். அதிதீவிர பாதையைக் கைவிட்டு ஜனநாயகப் பாதையை ஏற்று செயல்பட்டு வந்த ‘கத்தார்’….
நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்து – காங்கிரஸ் கட்சி தற்போது மேற்கொண்டுவரும் ‘அரசியல் சாசனப் பாதுகாப்பு இயக்கத்துக்கு’ தமது முழு ஆதரவையும் வழங்கப் போவதாக உறுதியளித்தார்.“இந்திய முழுவதும் பரப்புரை மேற்கொள்வதற்கு முன்னதாக, தெலுங்கானாவில் தொடங்கி, தென்னிந்தியா முழுமையும் அரசியல் சாசனப் பாதுகாப்பு இயக்கத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் போகிறேன்” என்று அவர் அறிவித்துள்ளார்.
“நான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை . புரட்சிகர இயக்கங்களுக்கும், ஜனநாயக மதச் சார்பற்ற சக்திகளுக்கும் இனிமேல் நான் ஒரு பாலமாக செயல்படுவேன்” என்றிருக்கிறார் கத்தார்.
(Rathan Chandrasekar)