பொய்களின் சாம்ராஜ்யத்தில் உண்மை தேசத்துரோகம்.

உக்ரைனின் நிலப்பரப்பு இலங்கை நிலப்பரப்பை விட 9 மடங்கு பெரியது, கனடாவின் நிலப்பரப்பில் பதினாறில் ஒன்று. உக்ரைன் ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடு. 2 இலட்சம் இராணுவத்தைக் கொண்டது. இராணுவப்பலத்தில் உலகில் 21வது இடத்தை வகிக்கின்றது. எனவே உக்ரைனைப் பிடிப்பதென்பது இலகுவான காரியமல்ல.

1987-1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 50000 மேற்பட்ட இந்திய இராணுவம் சில நூறு புலிகளை எதிர்த்து யாழ் குடாநாட்டை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரு வருடத்திற்கு மேல் சென்றது.

ரஷ்யா குறைந்தது ஐந்து வருடங்கள் திட்டமிட்டே இந்த யுத்தத்தை நடத்துகின்றது. மக்களின் இழப்புகளை கூடிய வகையில் தவிர்த்தே யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதுவரையில், 29 நாடகளின் பின்னர், உக்ரைனில் 900 பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாமென்றே ஐ.நா. கூறுகின்றது. 2003 ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நாளொன்று சராசரியாக 315 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் நடத்திய தாக்குதலில் 9 இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

(ரஷ்யா – உக்ரைன் யுத்தம் பற்றி நண்பர் ஒருவர் எழுதியது)