போராட்டங்கள் வன்முறை வடிவிலும் தொடர்கின்றன.

வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையமொன்று பண்டாரவளையில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் அவரது மகன் அமைச்சர் கனக ஹேரத் ஆகியோரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, சன்ன ஜயசுமன, கோகிலா குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரின் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் வீட்டின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

ஹொன்னந்தர பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீடும் சற்று முன்னர் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறையில் உள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் இல்லத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்ட போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

அலரி மாளிகைக்குள் பிரவேசிக்க முயன்றவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சியாம், அமரபுர மற்றும் ராமண்ணா நிகாயா பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அமைதியான போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்றைய ரயில்கள் அந்தந்த இடம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்​வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

“கோட்டா ஹோ கம” வின் மீது தாக்குதல் நடத்திய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சிலர், போராட்டக்கார்களிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களை போராட்டக்காரர்கள் முழந்தாளிட வைத்துள்ளனர்.

சிக்கிய ராஜபக்ஷ ஆதரவாளரை தூக்கி குப்பை வண்டியில் போட்டு தள்ளிக்கொண்டு போகும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் குதித்திருப்போர்

2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இன்று (09) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்

நாட்டிலுள்ள கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த சுமார் 1000 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

போராட்டக்காரர்கள் இரத்மலானை விமான நிலைய வளாகத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

விடிய விடிய அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினர்.

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், காலிமுகத்திடல் கோட்டா கோ கம பகுதியில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

(Thank you Tamil Mirror)