மாங்குளத்தில் அமைந்துள்ள முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பான உயிரிழை அமைப்பின் அலுவலகத்தின் முன்பாக (A9 வீதியில்) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களின் 2018இற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா.2,00,000.00 ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையானது கடந்த 15.01.2019 தைப்பொங்கலன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் உயிரிழை அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பகுதி மக்களும், முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விசேட தேவைக்குட்பட்டவர்களும் பயன்படுத்தத்தக்க வகையில் பாராளுமன்ற உறுப்பினரால் மேற்படி பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது கொஞ்சம் ஓவர்
தெருத்தேங்காயை வழிபிள்ளையாருக்கு அடிப்பது சரி , அதற்கு இப்படி விளம்பரமா?