ரவி, நாமல், சத்தியலிங்கம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்ஷ மற்றும் தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவு செய்யபட்டு அவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.