தங்களின் ஜீவாதார பிரச்சினை களுக்காக கடந்த 18 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் நடத்தும் நூதன போராட்டங்களால் தலைநகர் டெல்லியில் பதற்ற மான சூழ்நிலை உருவாகிக் கொண் டிருக்கிறது. இந்த வேளையில், 60 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயி களுக்கான முதல் உரிமை போராட் டத்தை நடத்தியவர் கோவையை அடுத்த செங்காலிபாளையத்தைச் சேர்ந்த விவசாயத் தோழர் நாராய ணசாமி நாயுடு. அவரைப் பற்றி நினைவு கூர்கிறார்கள் அவரோடு போராட்டக் களங்களில் இருந்தவர் கள்.
காமராஜர் ஆட்சியில் விவசாயத் துக்கு 16 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டது. 1950-களின் தொடக்கத்தில் தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகை யில் இது 4 மணி நேரமாக குறைக் கப்பட்டது. 1957-ல் இதை எதிர்த்து விவசாயிகளை ஒன்றுதிரட்டி கோவை பகுதியில் போராடினார் நாயுடு. தமிழகத்தில் விவசாயி களின் உரிமைக்காக நடந்த முதல் போராட்டம் இதுதான். போராட்டத் தின் வெற்றி மீண்டும் விவசாயத் துக்கு 16 மணி நேர மின்சாரம் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து விவசாயிகளை ஒன்றுதிரட்டும் வேலைகளில் ஈடுபட்டார் நாயுடு. இந்த நிலையில், 8 பைசாவாக இருந்த ஒரு யூனிட் மின்சாரத்தை 10 பைசாவாக உயர்த்தியது தமிழக அரசு. இதை எதிர்த்து 1970 மே 9-ல் கோவை ஜில்லா விவசாயிகளை ஒன்று திரட்டி மாட்டு வண்டிகளுடன் போராட்டம் நடத்தி, கோவையை ஸ்தம்பிக்க வைத்தார் நாயுடு. அப்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மூன்று விவசாயிகள் பலியானார்கள். நிலைமை மோச மானதால் இறங்கி வந்த அரசு, ஒரு யூனிட் மின்சாரத்தை 9 பைசாவாக குறைத்தது.
இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு யூனிட் மின்சாரத்தை 12 பைசா ஆக்கியது அரசு. இதை எதிர்த்தும் நாராயணசாமி நாயுடு 17.06.1972-ல் நடத்திய மாட்டு வண்டிப் போராட் டத்தால் யூனிட்டுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. இந்த தொடர் வெற்றிகள் நாயுடுவை ஒட்டுமொத்த தமிழக விவசாயி களின் தலைவராக உயர்த்தியது. இதைத் தொடர்ந்து 1973-ல் ‘தமிழக விவசாயிகள் சங்கம்’ உருவாக்கப் பட்டு, அதன் தலைவராக நாராயண சாமி நாயுடு அங்கீகரிக்கப்பட்டார்.
போராட்ட காலங்களில் அவ ரோடு உடனிருந்தவரும் தற் போதைய திமுக செய்தித் தொடர் பாளருமான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ‘‘தமிழக விவசாயிகள் சங்கம் ஆரம் பிக்கப்பட்ட பிறகு விவசாய மாண வர் சங்கத்தைக் கட்டி எழுப்பியதில் நான் முக்கியமானவன். 1980-ல் கோவில்பட்டி அருகே எங்கள் சொந்த ஊரான குறிஞ்சாகுளத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத் தில் 8 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்படி, 1972-லிருந்து 1992 வரை 60 விவசாயிகளைச் சுட்டுக் கொன்றி ருக்கிறது தமிழக போலீஸ்.
இப்போது, கடன் தள்ளுபடி கேட்டு விவசாயிகள் போராடுகிறார் கள். ஆனால், அந்தக் காலத்தில் வரியைக் கட்டச் சொல்லி ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளைத் துன்புறுத்தியது அரசு. இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்பதற்காகவே 07-07-1982-ல் ‘இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி’ உதயமானது. 1982-ல் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் 1984 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டி யிட்ட இக்கட்சி தோல்வி கண் டது.
கோவைக்கு அடுத்தபடியாக, பிரிக்கப்படாத ராமநாதபுரம், நெல்லை மாவட்டத்து விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டதால் தென் தமிழகத்து விவசாயிகள் மீதும் நாராயணசாமி நாயுடுவுக்கு ஒரு கரிசன பார்வை இருந்தது. அவர்களுக்காக கோவில்பட்டி உள்ளிட்ட பகுதி களில் போராட்டங்களை முன் னெடுத்த நாயுடு, 1984 தேர்தலில் சிவகாசி நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் அழகிரிசாமியை ஆதரித்துப் பேசுவதற்காக 21.12.84-ல் கோவில்பட்டி வந்திருந்தார்.
பொதுக்கூட்டம் முடிந்ததும் கோவில்பட்டி விருந்தினர் மாளிகை யில் தங்கி இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந் தார். ஐந்து ஆண்டுகள் கழித்து 1989-ல் அமைந்த திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சா ரம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட உத்தரவுகள் வெளியா கின. அந்த வெற்றியைக் கொண் டாட நாயுடு எங்களோடு இல்லை. நாராயணசாமி நாயுடுவை இன் றைக்கு பலபேர் மறந்துவிட்டார் கள்.
ஆனால், அவரைப்பற்றி வருங்காலமும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக கோவில் பட்டியில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். ஆறேழு மாதங்களுக்குள் அதை செய்துமுடிப்போம்’’ என்றார்.