இப்பதான் நேரடியாக அடிச்சுப் போட்டான் வாழ்வா…?
சாவா…? என்று திருப்பி அடிப்பம் என்று புறப்பட்டான்….
குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருந்தவன்…. குந்திக் கொண்டு இருந்தவன்….
தனது நாட்டிற்குள் ஜனநாயகம், சமத்துவம் என்று மக்கள் எமக்கு எதிராக போராடினாலும் இன்னொருவன் அவனது வீட்டிற்குள் வந்து நான் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் கொண்டு வர ஆட்சி மாற்றம் செய்கின்றேன் என்பதை எந்த அரசும் நாடும் நாட்டு மக்களும் ஏற்க மாட்டார்கள்
முன்பும் மன்னர் ஷாவை இப்படித்தான் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்திருந்த ஈரான் அரசின் பிரதமரை அகற்றி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தனர்.
அன்றில் இருந்து ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா என்று முக்கோணமாக பகை இருந்து கொண்ட இருந்தது.
ஷாவின் அமெரிக்க சார்பு அரசால் கொத்தடிமையாக ஈரான் மக்களை வைத்திருக்க முயன்ற காலத்தில் மக்கள்தான் வீதியில் இறங்கி போராடி மன்னர் ஸாவை கலைத்தனர். மன்னர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
ஷா இன் இராணுவ முகாம் முற்றுகையை மக்கள் மேற்கொண்ட போது இராணும் போட்ட சிவப்புக் கோட்டைத் தாண்டினால் சுடுவோம் என்றது இராணுவம். மக்கள் பயப்பட வில்லை தயங்காது கோட்டைத் தாணிடினர்.
இராணுவம் சுட்டது கொன்றது வீழ்ந்த பிணங்களின் மீது எழுந்து மக்கள் முன்னேற இராணுவம் முகமை விட்டு ஓடிய வரலாறுதான் ஷா இற்கு அமெரிக்காவிற்கு எதிரான ஈரானிய மக்களின் புரட்சி 1979 இல் நடைபெற்றது
இது 1980 களில் வீரம் மிக்க போராட்டமாக அன்று பேசப்பட்டு. இன்றும் உலகமும் ஈரான் மக்களும் இதனைக் கொண்டாடுகின்றனர். அது உண்மை.
இதற்கு இஸ்லாமிய அடிப்படைவாத அயதுல்லா கொமனி பிரான்ஸ் நாட்டில் இல் இருந்து வந்து தலமை தாங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஈரான் இஸ்லாமிய நாடாகவும் இஸ்ரேலுடன் பகையுள்ள நாடாகவும் அமெரிக்காவின் வெறுப்பு நாடாகவும் மாறியது.
தொடர்ச்சியான பொருளாதாரத் தடை ஈரான் எழுந்து வருவதை வெட்டித்தறித்த வண்ணமே மேற்குலகம் செயற்பட்டு வந்தது வருகின்றது.
பயங்கரவாத அமைப்புக்களுக்கு உதவுகின்றது எனற் குற்றச்சாட்டை பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி நாடுகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி பின்பு அந்த அமைப்புகளையே அழிக்க முயன்று தோற்றுப் போகும் அமெரிக்கா இதற்கான காரணத்தை முன்வைக்கின்றது.
பாலஸ்தீனம் உட்பட மேற்கின் ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் பல நாடுகளுக்கு உதவும் ஈரானுக்கு கடைத்த நல்ல பெயர் இது.
வளைகுடாவில் மன்னர் ஆட்சியும் அங்குள்ள எண்ணை வளங்களை திருடுவதற்கும் இந்த மன்னர் ஆட்சிகள்தான் அமெரிக்காவிற்கு தேவையாக இருந்தது.
இருக்கின்றது மக்களால் தெரிவு செய்யப்படும் ஆட்சிகளை தமக்கு சாதமாக மாற்றுவதற்கு பதில் மன்னர் குடும்பத்தை மட்டும் தனக்கு சாதகமாக மாற்றுதல் இலகு அல்லவா…?
உலகின் ஜனநாயகத்தின் அடையாளமாக தம்மை காட்டும் அரசு வளை குடாவில் மட்டும்தான் மன்னர் ஆட்சிகள் தேவையாம் அப்பதான் தன் விருப்பப்படி அரச குடும்பத்துடன் நேரடியாக டீல்களை மேற்கொண்ட தமது சுரண்டல்களை வளங்களின் திருட்டை செய்ய முடியும்.
அங்கும் மதத்தின் பெயரால் குற்றங்களை தடுக்கின்றோம் என்று அடிப்படை மதவாதச் செயற்பாடுகளில் உறுப்புகளை வெட்டும் தூய்மைவாதம் மார்க்கத்தின் பெயரால் சரியா என்றும் வேறு பல சட்டங்களினால் பெருமானாரின் கூற்றுகளுக்கு அப்பால் செயற்படுவதை இந்த அமெரிக்க ஜனநாயகமோ வேறு ஜனநாயகமோ எந்தக் கேள்விகளும் கேட்பது இல்லை.
இதற்கு தடையாக இருந்த நாடுகளாக ஜனநாயக முறைப்படி தெரிவான ஆட்சிகளை நடத்திய ஈராக் லிபியா சிரியா ஈரான் போன்றவற்றை இல்லாமல் செய்து அங்கு மன்னர் முடியாட்சியை ஏற்படுத்துதல் அவர்ளுடன் விருந்தினர் மாளிகையில் உல்லாசம் காணும் பணக்காரத் திமிரின் வெளிப்பாடுகள்தான் இன்றை வரையிலான ஈரான் மீதான மேலாதிக்கம் அதற்கான தாக்குதல் போர்கள் எல்லாம்.
ஈரான் அரசின் அரசாட்சி செயற்பாடுகளை அந்த நாட்டு மக்கள் தமக்குள் போராடி உரிமைகளை ஜனநாயகத்தை சமத்துவத்தை பெறுவதற்கு போராடுவதற்கு உரிமைகள் உண்டு. இதற்கு வெளியில் இருந்து பஞ்சாயத்து செய்ய இஸ்ரேல் யார்…? அமெரிக்கா யார்…?
இஸ்ரேல் இதுவரை நாடுகளுடனான தாக்குதல்களில் எகிப்து உட்பட பெரு வெற்றி கண்டு இனிமேல் தமக்கெதிராக தாக்குதல் நடாத்த நினைக்காக அழிவுகளை ஏற்படுத்தியதில் கிடைத்த அனுவங்கள் பலரை தமது தன் மானத்தை அடகு வைத்து வாலைச் சுருட்ட வைத்தது.
அண்மையா ஹமாஸ் இற்கு எதிராக பாலஸ்தீன மக்கள் அழிப்புக்களிலும் இதே கொக்கரிப்பை இஸ்ரேல் சொல்லி வருகின்றது.
இதற்கு உளவு பார்க்கும் நம்பிககை துரோக செயற்பாட்டிற்குள் மிக முக்கிய காரணம் திண்ட வீட்டிற்குள் தண்டம் செய்யும் அயோக்கியத்தனம் தனம் இதுதான் உளவு பாரத்தலின் மகோன்ம நிலையாம்.
இன்று இதே நிலையில் ஆரம்பித்த போர் ஈரானின் மிகத் துல்லிய தாக்குதலை இஸ்ரேல் மட்டும் அல்ல அமெரிக்காவும் எதிர்பார்க்கவில்லை.
இறுதியாக நாகசாக்கி கிரோசிமாவில் அணுக் குண்டைப் போட்டது போதாதென்று ஈரானுக்குள் தீடீரென குண்டை வீசிவிட்டு தேர் தீர்த்தம் சப்பறம் என்று கொடி இறக்கி இருக்கின்றார் கொடியை ஏற்றியவரே.
ட்றம் இப்போது போது போர் நிறுத்தம் அமைதி என்று அறிவித்த சிரிப்பிற்கிடமான விடயம் தற்போது அரங்கேறி இருக்கின்றது.
இதற்கான அடிப்படைக் காரணம் வளைகுடாவில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்களில் ஈரான் செய்த பதில் தாக்குதல் பல செய்திகளை வளைகுடா எங்கும் இராணுவத் தளங்களை உடைய அமெரிக்காவிற்கு செய்தியாக சொல்லி உள்ளது.
மேலும் இதனைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை மூடலாம் என்ற ஈரான் முடிவும் இந்த போர் நிறுத்தம் அமைதி என்பதற்கான முக்கிய காரணங்கள் ஆகின்றன.
இதன் அடிப்படையிலான அமெரிகாவின் வளைகுடா கச்சாய் எண்ணைத் திருட்டும் அதன் எண்ணை விநிவியோகம் விற்பனை பாரியளவு பாதிககும் எனபதாலேயே இது ஏற்பட்டது.
இந்த ஜலசந்தி மிகவும் முக்கியமானது. ஈரான் மற்றும் சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளிலிருந்து எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
கூடவே இஸ்ரேலின் தலைநகர் ரெல் அவி உட்பட மிக முக்கிய இலக்குளை அவர்களின் வான் பாதுகாப்பை(அயன் டோம்) மீறித் தாக்குதல் நடத்தியதில் ஏற்பட்ட கெலிப்பு இவைகள்தான் இந்த ஒரு செக்கன் சமாதானப் போர நிறுத்த அமைதி அறை கூவல்.
ஆனாலும் மொசாட்டின் கொல்லைப் புறத்து பணத்திற்கு ஆட்களை வாங்கி அங்காங்கே பேஜர் தொலைபேசி கார்குண்டு இன்ன பிற வழிகளில் கொலைகளை இஸ்ரேல் இனியும் செய்தவண்ணம் இருக்கும்.
அதனை இயக்கும் மொசாட்டின் உறுப்பினர்கள் கொலை செய்வது என்ற மரபணுவுடன் மட்டும் பிறந்தவர்கள் என்பது 50 வருடங்களுக்கு மேலான வரலாறு. இதற்கான ஆதாரங்களை இஸ்ரேலின் கொலைவெறிப் பட்டியல் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.