ஆற்றுப் படுகைகள், குளம், குட்டை, நீரேந்தும் பிரதேசங்கள், கடலோரக் கிராமங்கள், வயல்வெளிகள் என்று, வெள்ளம் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. காட்டு வெள்ளம் கரைபுரண்டோடியது
காடு, கரை, வயல், மலையெல்லாம் ஒரே வெள்ளக் காடு!
மலைநாட்டின் பள்ளத்தாக்குகளில்தான் நகரங்கள் அமைந்துள்ளன. மலைகளில் இருந்து வந்திறங்கி மக்கள் கூடும் வகையில் இந்த நகரங்கள் இயல்பாக உருவாகியவை.
இந்த நகரங்கள் எல்லாம், இம்முறை தண்ணீர் வந்து சேர்ந்து வெள்ளத்தில் மூழ்கிப் போகின. பெரும் சேதம்.
தொடர் மழை நம்ப முடியாத இடங்களில் மண் சரிவுகளை ஏற்படுத்தியுள்ளது. சில ஊர்களைக் காணவில்லை.
புயல் காற்றை விட, புயல் மழையும் மண்சரிவும்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தின.
தொடர்பாடல் துண்டிக்கப்பட்ட பல இடங்களிலிருந்து இப்போதுதான் செய்திகள் வருகின்றன. கேள்விப்படுகின்ற கதைகளை உறுதிப்படுத்தாமல் பகிர முடியாதுள்ளது.
சொத்திழப்புகள், உட்கட்டமைப்பு சேதத் மிகவும் பாரியளவு உள்ளன.
மலைநாட்டில்தான் இம்முறை பாரிய சேதம். இது காலாகாலத்திற்கும் மறக்க இயலாத பேரழிவு – பேரனர்த்தம்.
மீளக் கட்டியெழுப்புவது பாரிய சவால்.
படத்திலுள்ள இடங்கள் நாட்டின் பிரதான நதிகள், கடலில் கலக்கும் இடங்கள்.